Thursday, March 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(19-3-10)

1) உலகிலேயே இரண்டு தேவாலயங்கள் தான் கல்லறை மீது எழுப்பப் பட்டுள்ளன.ரோம் நகர புனித ராயப்பர் ஆலயம்..மற்றது சென்னையில் உள்ள சாந்தோம் சர்ச்.யேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் செயின்ட் தாமஸ்..அவர் பிரச்சாரத்திற்கு வந்த போது..அவர் கொல்லப்பட்டார்.அவர் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது.

2)அலுவலகத்தில்..நம் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால்..மேல் அதிகாரி கூப்பிடுகையில் நம் இதயம் வேகமாக படபடக்கிறது..உடல் சூடாகிறது..சூட்டைத் தணிக்க உடன் மூளை வியர்வையை வெளியேற்றுகிறது.இப்படி பயத்தில் அதிகமாக வியர்ப்பதற்கு ஹைபெர் ஹைட்ரோஸிஸ் என்று பெயர்

3)வைகோவிற்கு இந்த ஆண்டு அரசியலில் பொன்விழா ஆண்டாம்..அதை பிரம்மாண்டவிழாவாக கொண்டாடத் தயாராகிறது ம.தி.மு.க.,எவ்வளவு ஆண்டானால் என்ன எங்க தலைவருக்கு அரசியல் நடத்தத் தெரியாது என்கிறார் ஒரு ம.தி.மு.க., தொண்டர்..(விழாவிற்கு கலைஞரை தலைமை தாங்கச் சொல்லி..அரசியல் ஆசான் என்று அவருக்கு ஒரு பட்டம் கொடுங்க..கூட்டணி மாற சந்தர்ப்பம் உண்டு - இதைச் சொல்பவர் அதி புத்திசாலி அண்ணாசாமி)

4)கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 50 லட்ச மனித உழைப்பு நாட்கள் ஸ்டிரைக், கதவடைப்பு என வீணானதாக மத்திய தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறதாம்.அங்கு மட்டும் 22லட்சம் மனித உழைப்பு நாட்கள் வீணானதாம்.

5) புதிய பேரவைக் கட்டிடத்தில் முகட்டில் பிரம்மாண்டமான டூம் அமைக்கப் பட்டுள்ளது.அதன் மீது விழும் சூரிய ஒளிக்கற்றைகள் 100 அடிகள் தாண்டி கீழே..பேரணிக்குள் வட்டமாக விழுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.இது கலைஞரை மிகவும் கவர்ந்துள்ளதாம்.உதய சூரியன் ஒளி நிரந்தரமானது எனக் காட்ட இதைவிட வேறு என்ன வேண்டும்?

6)அடுத்தவர் உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி..கிண்டல் செய்தால் இரு மடங்கு மகிழுங்கள்..ஒன்று..ஒருவர் மகிழ உங்கள் தவறு உதவியது...மற்றது..மீண்டும் அத் தவறு செய்யாமல் இருக்க அவர் உதவினார்.

7) கொசுறு..ஒரு ஜோக்

இன்னிக்கு என் கிட்ட ஒருத்தர் உன் நண்பன் பெயரைச் சொல் உன்னைப் பற்றி சொல்றேன்னு சொன்னார்..உடனே உன் பெயரைச் சொன்னேன்
உடனே என்ன சொன்னார்
ச்சீன்னு காறித் துப்பிட்டு போயிட்டார்

14 comments:

வித்யா said...

சுவாரச்யமான தொகுப்பு.

Chitra said...

அடுத்தவர் உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி..கிண்டல் செய்தால் இரு மடங்கு மகிழுங்கள்..ஒன்று..ஒருவர் மகிழ உங்கள் தவறு உதவியது...மற்றது..மீண்டும் அத் தவறு செய்யாமல் இருக்க அவர் உதவினார்.


........ true. எனக்கு பிடித்த
தத்துவம் # 10871 :-)

வானம்பாடிகள் said...

எப்பவும் போல் கரம். :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா
Chitra
Balaa

சசிகுமார் said...

//அலுவலகத்தில்..நம் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால்..மேல் அதிகாரி கூப்பிடுகையில் நம் இதயம் வேகமாக படபடக்கிறது..உடல் சூடாகிறது..சூட்டைத் தணிக்க உடன் மூளை வியர்வையை வெளியேற்றுகிறது/

எனக்கு தினமும் இப்படி தான் நடக்குது, நம்ம தான் எப்பவுமே சரியா பண்றதில்லையே நல்ல பதிவு நண்பா. வோட்டும் போட்டாச்சி உங்கள் புகழ் மென்மேலும் வளர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சசிகுமார்

"உழவன்" "Uzhavan" said...

6 சூப்பர்

மங்குனி அமைச்சர் said...

1 => ஓகே
2 => சார் ஸ்பென்சர்ஸ்க்கு வர்ற பொண்ணுங்கள சில ஆங்கிள்ள பாத்தா இதே மாதிரி வேர்த்து கொட்டுது , அதுக்கு பேர் ஏன்னா சார் ?
3 => தன்னை பற்றி தமிழா தமிழா அவதூறாக பேசியதை கண்டித்து கன்னியாகுமரி முதல் கசகிஸ்தான் வரை நடை பயணம் செய்யபோகிறார் வை.கோ (அப்பாட வர எப்படியும் 3 வருஷம் ஆகும் )
4 => தோடா , கவுருமென்ட் ஆபிசிளை எல்லாம் போய் பாருங்க
5 => தஞ்சாவூர் கோவில்ல மட்டும் இருந்தா நீங்க பெரும படுவிக , இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்
(மன்னர் ஆட்சில இதெல்லாம் சகஜம் சார் )
6 => முடியல
7 => _____________________________ நான் என்னத்த சொல்ல , நீங்களே இந்த டேச பில் அப் பண்ணிகன்ங்க

அக்பர் said...

நல்லாயிருக்கு சார்.

க.பாலாசி said...

நிறைய தகவல்கள்.... நல்லாருக்குங்க சார்....

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

JesusJoseph said...

புனித ஜெமஸ் அப்போஸ்திலர் கல்லறை மேலும் ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது. அது ஸ்பெயின் நாட்டில் இருக்கிறது.

நன்றி
ஜோசப்
www.tamilcomedyworld.com

thenammailakshmanan said...

6)அடுத்தவர் உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி..கிண்டல் செய்தால் இரு மடங்கு மகிழுங்கள்..ஒன்று..ஒருவர் மகிழ உங்கள் தவறு உதவியது...மற்றது..மீண்டும் அத் தவறு செய்யாமல் இருக்க அவர் உதவினார்.//

இது ரொம்ப நல்லா இருக்கு டிவி ஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Uzhavan
மங்குனி அமைச்சர்
அக்பர்
க.பாலாசி
நசரேயன்
JesusJoseph
thenammailakshmanan