Tuesday, March 30, 2010

வசந்தபாலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்



(புகைப்படம்- நன்றி..சென்னை ஆன்லைன் .காம்)

இயக்குநர் வசந்த பாலனுக்கு,

வணக்கம்.

இன்னமும் வெயிலின் தாக்கம் தீராத நிலையில்..அங்காடித் தெரு சென்றேன்..

அடடா..என்னவொரு அற்புதமான அழகான தெரு..செதுக்கி..செதுக்கி..நகரசபையாலும்..நீர்வளத்துறையாலும்,தொலைபேசித் துறையினராலும்..தோண்டி அப்படியே போட்டுச் சென்ற தெருவாய் இல்லாமல்..வழ வழ என வழுக்கிச் செல்லும் தரமான தெருவாய் உள்ளது.

இன்னொரு உண்மைச் சொல்வதானால்..எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடோடு செயல்படும் இணைய தள பதிவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துடன் எழுதவைத்த சாதனையை உங்கள் அங்காடித் தெரு செய்துள்ளது.

இதுவரை எந்த ஒரு திரைக்கதை ஆசிரியனும்..இயக்குநரும் தொடாத களம் இது.

பல சமயம் இது போன்ற கடைகளுக்கு விஜயம் செய்துள்ள நாம் ..வாங்கும் பொருளிலேயே கவனம் செலுத்தியுள்ளோம்.இனி நம்மை கவனிக்கும் விற்பனைப் பெண்ணையோ ..பையனையோ கவனிக்க வேண்டும்..அவர்கள் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகளை..என்றே தோன்றுகிறது.

திரைப்படத்தில்..சிறு வயதில் வேலைக்கு வந்து..நாள் முழுதும் நின்று..நின்று..கால்கள் பாதிக்கப்பட்டு கடை வேலையை இழந்த நபரின் கால்களைப் பார்க்கையில்..விழியோரம் கண்ணீர் கரை தட்டுகிறது

தன்னைக் காதலிப்பவன் அவன் வேலையைக் காத்துக்கொள்ள..பொய் சொல்லி இவளை நான் காதலிக்கவில்லை என்று கூற..'அந்தக் கடவுள்தாண்டா சாட்சி..அந்தக் கடவுள்தாண்டா சாட்சி' எனக் கதறியபடியே..மேலேயிருந்து கீழே விழுந்து மடியும் பெண்...கரை தட்டிய கண்ணீரை..சற்று வெளியேற்றுகிறாள்.அருமையான ஒரு நடிப்பு..ஒரு துணைப் பாத்திரமிடமிருந்து..

தன் அண்ணன் வேலை செய்யும் கடையின் பையை..கொண்டு செல்லும் தம்பதியரைத் தொடர்ந்துச் சென்று..'என் அண்ணன் வேலை செய்யற கடை..அந்தப் பையை தர்றீங்களா?" ன்னு..கேட்டு வாங்கி(நம்ம சென்னையானா போம்மா..போ..என விரட்டியிருப்பர் அந்த தம்பதிகள்)..அந்தப் பையை மார்போடு இணைத்து ஓடும் சிறுமி..கண்ணீரை முழுதும் நம்மிடமிருந்து வெளியேற்றுகிறாள்.

குள்ளனின் மனைவி..தனக்குக் குழந்தை தன் கணவன் போல பிறந்திருப்பதுக் கண்டு பேசும் வசனங்கள்..கூசாமல் வசை பாடும் நபர்களுக்கு ஒரு சாட்டையடி.



தன் தங்கையத் தேடி நாயகி..நாயகனுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்வதும்..அவள் கௌஹாத்தி போகையில் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவிலும்.திரும்புகையில் ஷேர் ஆட்டோவிலும் நாயகி வருவது போலக் காட்டுவது..இயக்குநர்..எந்த ஒரு சின்ன இடத்திலும் கவனக் குறைவாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

பழையத் துணியை தோய்த்து..தேய்த்து..புதிது போல செய்து பத்து ரூபாய்க்கு விற்பவன்.......எப்படி இப்படி வசந்தபாலன்!!!!!!

இஸ்லாமிய நண்பர், கண் தெரியாதவர், பிச்சைக்காரன் போல அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்பது..இயக்குநருக்கு வெற்றி.

'நீ யாருன்னு கேட்டா...சிரிச்சேன்' "விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிஞ்சவன்'..அவன் என்.....கசக்கினான்..போன்ற இடங்களில் ஜெயமோகன் தெரிகிறார்.

கால்களை இழந்து நாயகி..மருத்துவ மனையில் படுத்திருக்கும் போது...காப்பகத்தில் சேர்க்க வருபவர்கள்..இவளிடமும் வருவார்கள்..அப்போது கணவன் நான் என நாயகன் சொல்வான்..என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த போது...சற்றென..நாயகன் 'நாம கல்யாணம் பண்ணிப்போம்' என சொல்லும் போது..அதில் கூட சின்ன டுவிஸ்ட்.

அண்ணாச்சியாய் நடித்தவர்.(பழ.கருப்பையா).இனி அரசியல் பேசாமல்..நடிப்பில் கவனம் செலுத்தலாம்.மேனேஜராய் நடித்த வெங்கடேஷ் கச்சிதம்.

ஆமாம் கதையில் குறையே இல்லையா? சிறு சிறு குறைகள் ஆங்காங்கு இருந்தாலும்...நிறைகள் அதிகம் இருப்பதால் மறக்கப்படுகின்றன.ஆனாலும்..திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு சிறிது தொய்கிறது..அதில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் கவிதை பாடும் கால்கள்...கடைசியில்..உஷ்..மனம் கனக்கிறது.

இதுபோல ஒரு கிளைமாக்ஸ் தேவையா? என்று சிந்திக்கையில்...

தேவை என்றே தோன்றுகிறது...சினிமேடிக்...என்று சொல்லமுடியாது. ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.இனி மறைமுகமாக உழைத்து முன்னுக்கு வருவார்கள் வாழ்வில் எனக் கொள்ளவேண்டும்.

150 கோடி பட்ஜெட் படத்தை சன் டீ.வி.க்கு தாரை வார்த்துவிட்டு..குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்..கருணாமூர்த்தி,அருண் பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.

மொத்தத்தில்..படம்..அருமை..என்று சொல்வதைவிட..அதிகப்படியான பாராட்டுக்கு தமிழில் வார்த்தையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

கிடைத்ததும்...அஞ்சலிக்கும்,மகேஷுக்கும்,உங்களுக்கும்,ஜெயமோகனுக்கும் ,கலை இயக்குநருக்கும் தெரிவிக்கிறேன்..

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

அன்புடன்

T.V.ராதாகிருஷ்ணன்

37 comments:

butterfly Surya said...

அருமை சார்.

நன்றி.

vasu balaji said...

இவ்வளவு அருமையான விமரிசனம் உங்களிடமிருந்து வந்ததே தரம் சொல்கிறது:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சூர்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
இவ்வளவு அருமையான விமரிசனம் உங்களிடமிருந்து வந்ததே தரம் சொல்கிறது:)//


நன்றி Bala

தமிழ் உதயம் said...

திரைப்பட விமர்சனமே எழுதாத பதிவர்களிடம் இருந்தும், திரைப்பட விமர்சனத்தை வரவழைத்ததே- இக்கதையின் மிகப் பெரிய தாக்கம்.

மங்குனி அமைச்சர் said...

சூப்பர் சார்

Thenammai Lakshmanan said...

படம் அவ்வளவு நல்லா இருக்கா டி வி ஆர் சரி பார்த்துடலாம்

கோவி.கண்ணன் said...

நானும் படம் பார்த்தேன்.

பதிவு கலக்கல் சித்தப்பா !

Chitra said...

150 கோடி பட்ஜெட் படத்தை சன் டீ.வி.க்கு தாரை வார்த்துவிட்டு..குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்..கருணாமூர்த்தி,அருண் பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.

...... super comment!

ஈரோடு கதிர் said...

நல்ல விமர்சனம்

Jerry Eshananda said...

கலக்கல் தலைவா.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விமர்சனம்.

க.பாலாசி said...

அருமை... கடிதமாய் விமர்சித்தது....

Krishna Raj said...

பொதுவாக திரைஅரங்கு பக்கமே செல்லாத என்னை போன்றோர்களின் கைகளை பற்றி இழுக்கும் படம் . விர்மசனம் அருமை

வரதராஜலு .பூ said...

விமர்சனம் ரொம்பவே அருமை.

தமிழ் படத்திற்கு அனைத்து பிளாகர்களின் ஒத்துமொத்த பாராட்டுகுரிதாகியிருக்கிறது அங்காடித் தெரு. இதையும் பாத்துடுவோம் (மனசாட்சி - வெண்ணை, இன்னும் நீ வெயில் படத்தையே பாக்கலடா).

அக்னி பார்வை said...

nalla vimarsanam

rajasundararajan said...

//இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்.. கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.//

யோசனையோடு கூடிய வார்த்தைகள். பாராட்டப் பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.

நானும் என் கண்ணில் பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் பின்னூட்டம் இட்டுவிட்டேன்; உங்களுடையதற்கும். நல்ல முயற்சிகளில் குறை சுட்டாது நிறை பாராட்டவேண்டும் என்னும் உங்கள் எண்ணம் வாழ்க.

ஆட்டோ பற்றிய உங்கள் உன்னிப்பு... இப்படி எத்தனையோ details இருக்கிறது, என்ன?

கார்த்திகைப் பாண்டியன் said...

மனதில் பட்டதை தெளிவாக சொன்னதற்கு நன்றிங்க.. இந்தப் படம் கண்டிப்பா ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்..:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

/./தமிழ் உதயம் said...
திரைப்பட விமர்சனமே எழுதாத பதிவர்களிடம் இருந்தும், திரைப்பட விமர்சனத்தை வரவழைத்ததே- இக்கதையின் மிகப் பெரிய தாக்கம்.//

என்னைப் பொறுத்தவரை நல்ல படங்களை நான் விமரிசிக்க தவறியதில்லை.வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மங்குனி அமைச்சர்
thenammailakshmanan
கோவி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
super comment!//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஈரோடு கதிர்
ஜெரி ஈசானந்தன்.
அக்பர்
க.பாலாசி
Krishna Raj

வரதராஜலு .பூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
nalla vimarsanam//

நன்றி Vinod

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி rajasundararajan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
மனதில் பட்டதை தெளிவாக சொன்னதற்கு நன்றிங்க.. இந்தப் படம் கண்டிப்பா ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்..:-)))))//

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

புருனோ Bruno said...

//அவள் கௌஹாத்தி போகையில் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவிலும்.திரும்புகையில் ஷேர் ஆட்டோவிலும் நாயகி வருவது போலக் காட்டுவது..//

நானும் ரசித்து பார்த்த ... ம்ம்ம் .. பார்த்து ரசித்த காட்சி அது

நசரேயன் said...

ஏரியா பக்கம் படம் வரலை.. இந்த வாரம் கண்டிப்பா பக்கத்து ஊரு போய் பார்கிறேன்

இல்யாஸ் said...

நல்ல படம், அருமையான விமர்சனம்

ரோஸ்விக் said...

கண்டிப்பாக பார்த்து விடுகிறேன் ஐயா... :-)
அனைவரையும் நீங்கள் பாராட்டிய விதம் அருமை. விமர்சனம் என்பது இப்படியும் தான் இருக்கணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
நானும் ரசித்து பார்த்த ... ம்ம்ம் .. பார்த்து ரசித்த காட்சி அது//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Doctor

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ஏரியா பக்கம் படம் வரலை.. இந்த வாரம் கண்டிப்பா பக்கத்து ஊரு போய் பார்கிறேன்//

கண்டிப்பா போய் பாருங்க நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இல்யாஸ் said...
நல்ல படம், அருமையான விமர்சனம்//

நன்றி இல்யாஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரோஸ்விக் said...
கண்டிப்பாக பார்த்து விடுகிறேன் ஐயா... :-)
அனைவரையும் நீங்கள் பாராட்டிய விதம் அருமை. விமர்சனம் என்பது இப்படியும் தான் இருக்கணும்.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ரோஸ்விக்

DREAMER said...

படத்தை ரசித்த ரசிகனிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுக் கடிதங்கள் வருவதுதான், ஒரு இயக்குனருக்கு 'விருது'களைவிட மேன்மையானது. அதை நீங்கள் திரு.வசந்தபாலன் அவர்களுக்கு தந்துள்ளதால் ஹேட்ஸ் ஆஃப் டு யூ, ராதாகிருஷ்ணன் சார்...

-
DREAMER

ராம்ஜி_யாஹூ said...

நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.
நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
DREAMER

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராம்ஜி...என்னது இது :)))