Tuesday, March 2, 2010

இப்போதைய படங்கள் ஓடாதது ஏன்..?

இப்பொழுதெல்லாம்..வெளிவரும்..பெரும் செலவில் எடுக்கப்படும் படங்களும்..முதல் இரு வாரங்கள்..அதிக திரையரங்குகளில் ..அதிகக் காட்சிகள் திரையிடப் படுகின்றன.இரு வாரங்கள் கழித்து..கலெக்க்ஷன் குறைய ஆரம்பிக்க..அடுத்து வரும் படத்திற்கு இடம் கொடுக்க இவை எடுக்கப்படுகின்றன. சமீபத்திய உதாரணம்..ஆயிரத்தில் ஒருவன்,குட்டி,அசல்.,

பட சம்பந்தப் பட்டவர்கள் முதல் இரண்டு வாரங்களில் அசலை எடுத்தால் தான் உண்டு.

முன்பெல்லாம்..சில தயாரிப்பாளர்கள்..தங்கள் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்பார்கள்..இப்போது அப்படியில்லை..ஒரு முறை பார்க்கும் ஆடியன்ஸ் கூட இல்லை.

படத்தின் பிரம்மாண்டத்தை விளம்பரப்படுத்தி..பணம் செலவழித்து விமரிசனங்கள் எழுதச்சொல்லி..மக்களுக்கு படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை எற்படுத்த முயற்சிக்கப் படுகிறது.

நன்கு விளம்பரப் படுத்தப் பட்டு..நல்ல கதையம்சம்..ஸ்டார் வேல்யூ..சிறந்த இயக்குநர் என்று இருந்தால் முதல் வாரம் கூட்டம் வருகிறது.பின் வாய்மொழிப் பரவுவதாலேயே படங்கள் ஓடுகின்றன.இது குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் பொருந்தும்..

போட்ட பணம் வந்தால்..சம்பந்தப் பட்ட படத் தயாரிப்பு நிறுவனம்..அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கின்றனர்.

இங்கேயும்..முன்பு போல விநியோகஸ்தர்கள்..அட்வான்ஸ் கொடுப்பதில்லை.முன்னர் எல்லாம் பூஜை போட்டதுமே..எல்லா எரியாக்களும் விற்கப்பட்டு விடும்.இப்போது அப்படியில்லை.பலமுறை படம் போட்டுக் காட்டப்பட வேண்டியுள்ளது.காரணம் நூற்றுக் கணக்கான படங்கள் ஆண்டுதோறும் வந்தாலும்..வெற்றி பெறுபவை..விரல் விட்டு எண்ணும் அளவே ஆகும்.போதும் போதாதற்கு..மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்..மால்கள்..உணவகங்கள்..பனி விளையாட்டுகள் ..என படம் பார்க்கச் செல்பவர்கள் பர்ஸை இளைக்க வைக்கும் இடங்கள்.

ஒரு குடும்பத்தலைவன்..குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் என்றால்..வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு படத்திற்குச் சென்றால்..குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.தவிர்த்து..வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ..பஸ்..என டிராஃபிக் நடுவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு..பெரும் பாடு பட்டு ..சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள அவன் தயார் இல்லை.

ஆகவே தான் ஒரு காமன் மேன் அதிகபட்சம் அறுபது ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் தன் வீட்டு டி.வி.முன்..புது பட டி.வி.டி.,யையோ, சி டி யையோ..அவை மழை பொழியும் பிரிண்ட் ஆனாலும்..பைரஸி பற்றிக் கவலைப் படாமல் பார்த்து விடுகிறான்.

படம் வெளிவந்து சில வாரங்கள் தங்கள் விருப்பம் போல திரையரங்குகள் டிக்கெட் விலையை ஏற்றுவதும்..சில வாரங்கள் கழித்து..கட்டணத்தைக் குறைக்கும் நேரம் அவன் படத்தை பார்த்து விட்டு..அடுத்த படம் பார்க்க தயாராய் ஆகி விடுகிறான்.

13 comments:

துளசி கோபால் said...

சமீபத்திய (பிட்) படம் ரொம்ப வேகமா ஓடுதுங்க.

தமிழ்மணம் பக்கம் வாங்க!

ஒரே 'லீலை'தான்!

vasu balaji said...

நல்ல அலசல். :)

Chitra said...

படம் பார்க்கச் செல்பவர்கள் பர்ஸை இளைக்க வைக்கும் இடங்கள்.


.......... எல்லாம் வியாபாரம் தான்........ அங்கே போனால், படமும் பார்க்கலாம்.
நல்ல பதிவு.

மங்குனி அமைச்சர் said...

//சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள அவன் தயார் இல்லை.//

சூப்பர் சார்

சிநேகிதன் அக்பர் said...

//ஆகவே தான் ஒரு காமன் மேன் அதிகபட்சம் அறுபது ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் தன் வீட்டு டி.வி.முன்..புது பட டி.வி.டி.,யையோ, சி டி யையோ..அவை மழை பொழியும் பிரிண்ட் ஆனாலும்..பைரஸி பற்றிக் கவலைப் படாமல் பார்த்து விடுகிறான்.//

repeate

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
துளசி Madam

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நல்ல அலசல். :)//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
நல்ல பதிவு.//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்குனி அமைச்சர் said...
சூப்பர் சார்//

நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அக்பர் said...
//ஆகவே தான் ஒரு காமன் மேன் அதிகபட்சம் அறுபது ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் தன் வீட்டு டி.வி.முன்..புது பட டி.வி.டி.,யையோ, சி டி யையோ..அவை மழை பொழியும் பிரிண்ட் ஆனாலும்..பைரஸி பற்றிக் கவலைப் படாமல் பார்த்து விடுகிறான்.//

repeate//

வருகைக்கு நன்றி அக்பர்

உடன்பிறப்பு said...

தோழர்! இது நித்யானந்தா சீஸன். இது மாதிரி பதிவுகளை எல்லாம் இப்போதைக்கு டிராப்டில் சேமித்து வைத்து கொண்டு நேரம் பார்த்து வெளியிடவும். இது மாதிரி நல்ல இடுகைகள் காற்று பலமாக வீசிக் கொண்டு இருக்கும் போது விற்பனைக்கு வந்த உப்பு போல காற்றில் காணாமல் போய்விடும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
தோழர்! இது நித்யானந்தா சீஸன். இது மாதிரி பதிவுகளை எல்லாம் இப்போதைக்கு டிராப்டில் சேமித்து வைத்து கொண்டு நேரம் பார்த்து வெளியிடவும். இது மாதிரி நல்ல இடுகைகள் காற்று பலமாக வீசிக் கொண்டு இருக்கும் போது விற்பனைக்கு வந்த உப்பு போல காற்றில் காணாமல் போய்விடும்//

உண்மைதான்..வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அத்திரி said...
good post//

நன்றி அத்திரி