Wednesday, March 3, 2010

தமிழகம் ஸ்தம்பித்தது...

செவ்வாய்க்கிழமை இரவு..அந்த செய்தியை..தனியார் சேனல் ஒன்றில் பார்த்த ஒட்டு மொத்த தமிழகமே ஸ்தம்பித்து நின்றது.

தமிழன் உணவு..உறக்கம் மறந்தான்..

பாராளுமன்றத்தில்..பெட்ரோல்..டீசல் விலை வாசி உயர்வு பற்றி நடைபெறும் நிகழ்வுகள் பற்றி அவன் கவலைப் படவில்லை..

..குடிசைகள் அகன்று ஆறு ஆண்டுகளில் வீடு கட்டிக்கொடுக்கப் படும் என்று அறிவித்த அரசு..அதன் முதல் கட்டமாக திருச்சியில் நடத்திய நிகழ்ச்சி பற்றி அவன் தெரிந்துக் கொள்ள ஆசைப்படவில்லை..

சேது சமுத்திர திட்ட வேலைகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான்..மாற்று பாதையை விட திட்டமிட்ட பாதையே சிறந்தது..உச்ச நீதி மன்றம் முன் அது கேள்விக் குறியாய் உள்ளது..என்ற முதல்வரின் செய்தியை..புறக்கணித்தான்..

எங்கு நோக்கினும்..நலமா? என விசாரிப்பவர்கள் கூட செய்தியை படித்தீர்களா? என்றே முதலில் கேட்டனர்.

காஞ்சிபுரம் அர்ச்சகர் வழக்கில் கூட..அவர் இச்சைக்கு அவர்கள் சம்மதத்தோடு ஈடுபட்டவர்கள் , பெயரும் ஊடகங்களில் மாற்றியே கொடுக்கப் பட்டது.அப்பெண்களிடம் ரகசிய விசாரணை செய்யப்பட்டது..

ஆனால்..நேற்று சம்பந்தப்பட்ட நடிகை பெயர் வெளியிடப்பட்டது..அவரும் ஒரு பெண்..சந்தர்ப்ப..சூழ்நிலைகள்..அவரின் மணவாழ்வு முறிவு..அமைதித் தேடி..ஆன்மிகம் நாடி..சென்றவர்..அந்த சாமியாரால் exploit செய்யப் பட்டார்.அவரின் நிலைக் குறித்து சற்றும் நினைக்கவில்லை ஊடகங்கள்..அதற்காக அவர் செய்தது சரி என நான் கூறவில்லை..அவரிடமும் ரகசிய விசாரணை..கோர்ட்,கேஸ் என வரும்போது செய்திருக்கலாம்.

மற்ற விபசார வழக்குகளில் சிக்கும் பெண்களின் அடையாளங்களை மறைத்து..பெயரையும் மாற்றி சொல்லும் ஊடகங்களும்..காவல் துறையும்..இவ்வழக்கில் கேள்விக் குறியான நடிகையும் ஒரு பெண் என்பதை மறந்ததேனோ?

21 comments:

Ramesh said...

She is still married, at least a month before, as I have seen her with an army guy in BIAL. Episode: What I am told is, she was there in Bidadi ashram, for a few days sojourn and the video was taken by one of the the prime aacharyas there, now named in TOI.

அத்திரி said...

என்னடா ஐயாவோட பதிவ காணோமேன்னு பாத்தேன்...............

நீங்க ரொம்ப லேட்டு ஐயா

கோவி.கண்ணன் said...

//மற்ற விபசார வழக்குகளில் சிக்கும் பெண்களின் அடையாளங்களை மறைத்து..பெயரையும் மாற்றி சொல்லும் ஊடகங்களும்..காவல் துறையும்..இவ்வழக்கில் கேள்விக் குறியான நடிகையும் ஒரு பெண் என்பதை மறந்ததேனோ?//

தினமலரும் நடிகை நடிகர்கள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளது.

ஆசாமியாரை அம்பலப்படுத்தியதில் தவறே இல்லை. ஆனால் நடிகையின் பெயரை வெளி இட்டிருக்கத் தேவை இல்லை

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.

வானம்பாடிகள் said...

மிகச்சரி சார்.

எழிழன் said...

நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா?

thenammailakshmanan said...

சரியா சொன்னிங்க டி வி ஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ramesh

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
என்னடா ஐயாவோட பதிவ காணோமேன்னு பாத்தேன்...............

நீங்க ரொம்ப லேட்டு ஐயா//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said
தினமலரும் நடிகை நடிகர்கள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளது.

ஆசாமியாரை அம்பலப்படுத்தியதில் தவறே இல்லை. ஆனால் நடிகையின் பெயரை வெளி இட்டிருக்கத் தேவை இல்லை//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.//

பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.//


வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
மிகச்சரி சார்.//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எழிழன் said...
நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா?//

வருகைக்கு நன்றி எழிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//thenammailakshmanan said...
சரியா சொன்னிங்க டி வி ஆர்//

நன்றி thenammailakshmanan

அக்பர் said...

போன முறை வீடியோ ஆதரம் கிடைக்கவில்லை அதனால் பெயர் வெளியிடவில்லை.

தாஜ் ஹோட்டல் தாக்குதலையே லைவ்வாக காட்டிய பெருமைக்குரியவர்கள் மீடியாக்காரர்கள். அதனால் நியாயம் தர்மம் பேசி பயனில்லை சார்.

ஒரு சின்ன சந்தேகம். நாம் வருந்தும் அளவுக்கு சம்பந்தபட்ட நடிகை வருந்துவார்களா சார். எனக்கென்னவோ இதற்கு பிறகுதான் சினிமாவில் வாய்ப்பு அதிகமாகும் என்று தோணுது.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உள்ளேன் ஐயா.., அருமையான கருத்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
ஒரு சின்ன சந்தேகம். நாம் வருந்தும் அளவுக்கு சம்பந்தபட்ட நடிகை வருந்துவார்களா சார்.//

கண்டிப்பாக வருந்துவார்..அவளும் பெண் தானே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
உள்ளேன் ஐயா.., அருமையான கருத்துகள்//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
தாஜ் ஹோட்டல் தாக்குதலையே லைவ்வாக காட்டிய பெருமைக்குரியவர்கள் மீடியாக்காரர்கள். அதனால் நியாயம் தர்மம் பேசி பயனில்லை சார்.//

:-)))

இராகவன் நைஜிரியா said...

வியாபரம் என்று வந்துவிட்டபின் பெண்ணாவது / ஆணாவது என்று நினைப்பவர்கள் இப்போதுள்ள மீடியாக்காரர்கள்.

இதில் எவரும் விதிவிலக்கல்ல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன் நைஜிரியா