Monday, March 29, 2010

சாகுந்தலம் (நாட்டிய நாடகம் ) - 2



(முந்தைய காட்சிக்கு)

காட்சி - 2

(துஷ்யந்தனைக் கண்ட சகுந்தலையின் நிலை)

யாரடி இவன்..

வேட்டையாடும் வேடனா..

சிங்கம் பார்த்திருக்கிறேன்

காட்டிலும்..கனவிலும்..

பிடரிமயிரின் தோரணை

பிளந்த வாய்

கூரிய பற்கள்

பயங்கரப் பாய்ச்சல்

பயத்தின் மறு உருவம்..

ஆனால்..இவனோ..

நாய்..உடை..பாவனை..

அப்பப்பா...

இதுநாள் வரை

நான் கண்டதில்லை

இது போன்ற சிங்கத்தை..

இவன்..புள்ளிமானை

வேட்டையாட வரவில்லை..

இந்த..

மானையே

வேட்டையாட

வந்தவன்..


காட்சி - 3

(துஷ்யந்தன் சகுந்தலையைக் காதலிப்பதைத் தெரிவித்தல்)

பெண்ணே..!

மன்னன் துஷ்யந்தன் நான்

வெல்லாத போரில்லை

யாரிடம் சிறை போனதுமில்லை

பொல்லாத உன் கண்கள்

என்னை தோற்கடித்து

சிறை எடுத்ததுவே

வாழ்நாள் முழுதும்

உன்னருகே இருக்கவே

மனம் விழைகிறதே..!!

என்னை மணப்பாயா

மானே.... (என்றிட்டான்)

(பதிலுக்கு சகுந்தலை)

மன்னா..

என்னைப் பற்றிய

விவரமும் கேளும்

ராஜரிஷி விஸ்வாமித்திரர்

மேனகை

என் தந்தை தாய் ஆவர்

ஆயின் கன்வ மகரிஷியின்

சுவீகார புத்திரி ஆனேன்

என் பெயர் சகுந்தலை

என் மனமும்

எவ்வளவு தடுத்தும்

தங்களை நாடுகிறது

என் தாயின் அனுபவம்

முன்னே எச்சரிக்கிறது..

நான் தங்களை

மணக்க வேண்டுமாயின்..ஒரு

வாக்குறுதி தந்திட வேண்டும்

என் வயிற்றில்

தங்கள் வாரிசு

உருவாகுமாயின் - அதுவே

பின்னாளில்

நாடாள வேண்டும்..

அதற்கு ஒப்புதல்

அளித்தீராயின்

தங்கள மணக்க

தடையேதும் இல்லை..

(என்றிட்டாள்)

மன்னனும் இசையவே

வேதங்கள் ஓத

நாதம் முழங்க

ஒன்ற வேண்டிய நாளில்

பஞ்ச பூத சாட்சிகளுடன்

காந்தர்வ மணம்

இனிதே நடக்க - மன்னனும்

தன் ராஜமுத்திரை மோதிரத்தை

அவளுக்கு அணிவித்து

மகிழ்ந்தனனே

(தொடரும்)

8 comments:

Chitra said...

//வெல்லாத போரில்லை
யாரிடம் சிறை போனதுமில்லை
பொல்லாத உன் கண்கள்
என்னை தோற்கடித்து
சிறை எடுத்ததுவே//

........ அருமை. எளிய வார்த்தைகளில் கவித்துவம் அழகாய் வெளிப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

சிநேகிதன் அக்பர் said...

எளிமையான கவிதை வரிகளில் அழகு மிளிர்கிற‌து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்

மங்குனி அமைச்சர் said...

சார் எல்லா விசயத்திலும் கலக்குறிங்க

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
சார் எல்லா விசயத்திலும் கலக்குறிங்க//


நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
நல்லாருக்கு சார்.//

நன்றி வித்யா