Monday, July 12, 2010

கலைஞரும்...கை ரிக்க்ஷாக்களும்..




மனிதனை..வைத்து மனிதன் இழுப்பது என்பது மனிதநேயமற்ற செயல்..69க்கு முன்னால் சென்னை வீதிகளில் கை ரிக்க்ஷாக்கள் பிரபலம்..பல மேட்டுக்குடி மக்கள் இப்படிப்பட்ட ரிக்க்ஷாக்களில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்..

ரிக்க்ஷா இழுப்புவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கும்..கையில் லைசன்சை மாட்டிக்கொண்டு..காலில் செருப்பும் இல்லாமல்..மூச்சிறைக்க பருத்த மனிதர்களை சுமந்து..நா வெளியேத் தள்ள இழுத்துச் செல்வார்கள்...

மனதில் ஈரமில்லா மனிதர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் கூலியில் பேரம் பேசுவார்கள்..

கலைஞர் 69ல் முதல்வர் ஆனதும்..முதலில் கை ரிக்க்ஷாக்களை ஒழித்தார்..அவற்றை ஒப்படைத்து சைக்கிள் ரிக்க்ஷாக்களைப் பெற்றனர்.பின் சிறிது வசதி உள்ளவர்கள் அவற்றில் மோட்டர் இணைத்து ஓட்டினர்.

பின் ஆட்டோக்கள்..நிறைய வர ஆரம்பித்ததும்..படிப்படியாக இவையும் குறைய ஆரம்பித்துள்ளன.

சென்னையில் சமீபத்தில் மேலும் 46098 ஆட்டோ பர்மிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன..

ஆனால்..இன்று மனித நேயமற்ற செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள்..

டிஜிட்டல் மீட்டர் போட்டும்..யாரும் அவற்றை உபயோகிப்பதில்லை..முன்னராவது..மீட்டருக்கு மேல் பத்து..பதினைந்து ரூபாய்கள் கேட்பர்...சிலர் அப்படிக் கேட்காமல் மீட்டர் அதிகமாக சுழல சூடு வைப்பர்.இப்போதெல்லாம் அப்படிப் பட்ட பிரச்னையே எழுவதில்லை.எங்கு செல்வதானாலும் அவர்கள் கேட்கும் தொகைதான்.

சமீபத்தில்..பெசன்ட் நகரிலிருந்து..வாணிமகால் (தி.நகர்) செல்ல என்னிடம் ஒரு ஆட்டோக்காரர் 180 ரூபாய் கேட்டார்.நான் வேண்டாம் என மறுத்துவிட்டு..சிறிது தூரம் சென்று வேறு ஒரு ஆட்டோவை அணுக அவர் 120 க்கு வருவதாகக் கூறினார்..

அதுவும் அதிகம் என்றாலும்..அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்..நான் பயணித்தேன்..

அரசு ஆட்டோக்களை அதிகரிப்பதால்..பொது மக்களுக்கு பெரும் பயன் வரப்போவதில்லை..நியாயமான ரேட் அவர்கள் வாங்குகிறார்களா என்று கடுமையாக அரசு கண்காணிக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் உண்மையில் பயன் அடைவர்.

இல்லையேல் எண்ணிக்கையில் தான் சென்னையில் ஆட்டோக்கள் அதிகம் ஓடுகின்றன என்று சொல்லலாம்.

பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..

10 comments:

வரதராஜலு .பூ said...

//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..//

இருக்கலாம்.
தற்பொழுது ஏறக்குறைய கொள்ளைக்காரர்கள் போலவே ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
மனசாட்சி என்பதே இல்லை

வரதராஜலு .பூ said...

//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..//

இருக்கலாம்.
தற்பொழுது ஏறக்குறைய கொள்ளைக்காரர்கள் போலவே ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
மனசாட்சி என்பதே இல்லை

கோவி.கண்ணன் said...

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அடவடி எழுதிமாளாது. 80 விழுக்காடு ஆட்டோக்கள் காவலர்களின் பினாமி ஆட்டோக்கள்

Unknown said...

உண்மைதான் ஐயா.. பக்கத்து மாநிலங்களான கர்நாடாகாவிலும், கேரளத்திலும் மீட்டர் போட்டு சரியான கட்டணம் வாங்குகிறார்கள், இங்குதான் கொள்ளையே..

இப்போதெல்லாம் நான் கால் டாக்சிக்கு மாறிவிட்டேன்..

Vidhya Chandrasekaran said...

மீட்டரோ அல்லது அதற்கு இணையான ஒரு சிஸ்டம் கொண்டுவராமல் ஆட்டோக்களின் அராஜகம் குறையாது. பெசண்ட் நகர் டு தி.நகர் 120 தான் எல்லாரும் வருவது. அபூர்வமாக 90 ரூபாய்க்கு வரும் சிலர் இருக்கிறார்கள். இது பெட்ரோல் விலை ஏறுவதுக்கு முன்னால்:)

சிநேகிதன் அக்பர் said...

99 ல் நான் கல்காத்தாவில் இருக்கும் போது கை ரிக்ஷா புழக்கத்தில் இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

vasu balaji said...

இன்னொண்ணு சொல்லாம விட்டீங்களே. பேரம் பேசினா கட்டுப்படியாகலைன்னு அழுவாங்க. ஆனா மந்தவெளி வரியான்னா, மூலக்கடை போறேன்னு சொல்றது:)

Hai said...

நானறிந்த வகையில் இந்தியத் திருநாட்டின் பெரு நகரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வித கட்டண முறைக்களுமின்ரி வசூல் நடத்துவது சென்னை மாநகரில் மட்டுமே. பெங்களூருவிலும் ஹைதிராபாதிலும் இவர்களது அட்டகாசங்களை நினைத்து தயங்கிய வேளைகளில் நண்பர்கள் அங்குள்ள முறையான ஏறி உட்கார் என்ன மீட்டரில் வருகிறதோ அதைக் கொடுக்கவும் என்று சாதரணமாகச் சொல்ல ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

nalla idugai...

AUTO Ottunargalin adavadi athigamthaan... avasarathukku sella manithabimanam parkamattargal.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி