Sunday, July 6, 2008

வாய் விட்டு சிரியுங்க - 17

1.என் பையன் போற போக்கிலே உருப்படமாட்டான் போல இருக்கு
ஏன் அப்படி சொல்றே
டாக்டருக்கு படிக்கணும்னு சொல்றான்..ஆனா..கையெழுத்து தெளிவா இருக்கு

2.அதோ போற பேரணி எந்த கட்சியோடது
கட்சி பேரணியில்லை..கூட்டணி தலைவருங்க எல்லாம் ஒன்னா வராங்க

3.மெகா சீரியல் டைரக்டரை லவ் பண்ணினியே எப்ப கல்யாணம்
நடக்காத விஷயத்தை எல்லாம் பேசறார்..எப்ப கல்யாணம்னு கேட்டா..சீரியல் முடியட்டும்னு சொல்றார்

4.உன் கணவர் உன் மேல் சந்தேகப்படறாரா? ஏன்?
என் ஜாக்கெட்டை டைலர் அளவு சரியா தச்சிருக்கார்னு சொன்னேன்..அவ்வளவுதான் சந்தேகம் வந்துடுத்து

5.கவர்ச்சி நடிகை நளினாவை இயக்குநர் ஏமாற்றிட்டாராம்.குணசித்திர வேஷம்னு சொல்லிட்டு படம்
முழுவதும் புடவைக் கட்டி நடிக்க விட்டுட்டாராம்.

6.மேனேஜர் மடியிலே..ஸ்டெனோ உட்கார ஜோக்கையே எவ்வளவு நாள் எழுதுவீங்க?
சரி..இனிமே..ஸ்டெனோ மடியிலே மேனேஜர் உட்காரரான்னு மாற்றி எழுதிடறேன்

4 comments:

Anonymous said...

ரெண்டாவது ஜோக் நூற்றாண்டு பாரம்பர்யம் மிக்க காங்கிரஸ்?

Anonymous said...

ரெண்டாவது ஜோக் நூற்றாண்டு பாரம்பர்யம் மிக்க காங்கிரஸ்?

Anonymous said...

ரெண்டாவது பின்னூட்டம் நாம் போடலீங்கோ.

எதிர் கோஷ்டி போட்ருப்பாங்களோ?

Kanchana Radhakrishnan said...

கூட இருந்தே குழிபறித்த பின்னூட்டம் இட்ட நீங்கள் கூட்டணியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்