ஆளும் கட்சி தவறு செய்கிறபோது அநியாயம் என அநேகம் பேர் கூறுவர்.
தவறுதான் என ஆறாயிரம் பேர் கூறுவர்.
தவறாய் இருந்தால் நமக்கென்ன என ஒதுங்கியிருப்போர் அறுபதாயிரம் பேர் உண்டு
ஆனால்...அந்தத் தவறை தடுத்து நிறுத்துவோர் எதிர்க்கட்சியினர்தான்.
அப்பேர்ப்பட்ட நம்மைப்பார்த்துத்தான் 'இவர்களுக்கு பதவி பைத்தியம்"என்கிறார்கள்.
இவர்கள் ஏதோ பதவியை விரும்பாதவர்கள் போல..பேசுகிறார்கள்.
கல்யாண வீட்டில் முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு..இரண்டாவது பந்திக்குப்
போகிறவர்களைப் பார்த்து'ஏன்..அடித்துக் கொள்கிறாய்?கல்யாண சாப்பாடு சாப்பிடா
விட்டால் குடியா முழுகிவிடும்'என்று கேட்பது போல் இவர்கள் கேட்கிறார்கள்.
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?
அறிஞர் அண்னாதான்.
11 comments:
அது சரி.....:-)))))
தவறை தவறு என்று சொல்லும் மனோபாவமிருந்தால்தான் பரவாயில்லையே?ஆளும் கட்சி வாயைத்திறக்கிறதா?தவறு....தவறு...தயார்க்கோஷம் கைவசம்.
அதுதான் சரி...ச்சின்னப்பையன்
நீங்கள் சொல்வது சரி..நாணயத்தின் ஒரு பக்கத்தைமட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்.
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்
அவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் !
அவர்களை அவர்கள் சொல்லும் கருத்துக்கள் கட்டுப்படுத்தாது !
இதுதான் இன்றைய ஆளும் கட்சியின் நிலை !
நல்லப் பேச்சுத் திறன்
நல்ல எழுத்துத்திறன் இவற்றுடன் சரி பங்கு அயோக்கியத்தனம் சேர்த்து நன்கு கலந்து செய்த பொம்மைதான் மு.க.
வாங்க பாஸ்கர்..என்ன செய்வது..எல்லாம் தமிழனின் தலைவிதி
வாங்க..கரிகாலன்..நீங்கள் சொல்றது உண்மை..ஆனால் அவர்கள் பொம்மைஅல்ல..அவர்கள் கையில் நாம் தான் பொம்மை
வருகைக்கு நன்றி வினவ்
திருடன்ல எவன் பரவால்ல?
அப்போ எல்லாரும் பக்காத் திருடன்னு சொல்றீங்களா?
Post a Comment