Friday, October 17, 2008

சினிமா..சினிமா.. தொடர் பதிவு..

இத் தொடர் பதிவில் அன்போடு என்னை இழுத்துவிட்ட கோவி க்கு நன்றி.

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என என் பெற்றோர்களைத்தான் கேட்க வேண்டும்..அதற்கு இப்போது வாய்ப்பில்லை..எனக்கும் அவசரமில்லை.!!நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் அமரதீபம்..உணரும்
வயதி ல்லை அப்போது.அந்த படத்தில்வரும் 'தேன் உண்ணும் வண்டு...'மறக்க முடியாத பாடல்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
'தசாவதாரம்'.சென்னை ஐநாஃக்ஸ் தியேட்டரில்.தியேட்டர் சர்வதேச தரத்தில் இருந்தது . பட விமரிசனம் ஏற்கனவே செய்து விட்டேன்.

3.கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன். வாசு இன்னும் சிறிது மெனக்கட்டிருந்தால் இதை வெற்றிப்படம் ஆக்கி இருக்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பல..உடனே ஞாபகத்திற்கு வருவது...கன்னத்தில் முத்தமிட்டால்...இதைவிட அழகாக இலங்கை பிரச்னையை சொல்லி இருக்க முடியாது.ஹேட்ஸ் ஆஃப் டூ மணிரத்னம்.
அடுத்ததாக 'கற்றது தமிழ்' சொல்லலாம்..இன்றைய பிரச்னைகளை ஓரளவு எதார்த்தத்துடன் சொன்ன படம்.
'அஞ்சாதே' அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

5.(அ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா..அரசியல் சம்பவம்...
'என்கடமை'என்று ஒரு M.G.R.,படம்.நல்ல படம்..அந்த படம் வெளியான சமயம்..'காமராஜர் என் குரு'என்றார் M.G.R.,ரசிகர்களால்(!!!) அதை ஏற்கமுடிய வில்லை.படம் தோல்வி.
அடுத்து அசோகன்..கஷ்டப்பட்டு..தன் வாழ்நாள் சம்பாதியம் முழுதும் போட்டு எடுத்த படம்'நேற்று..இன்று..நாளை'..அந்த சமயம் M.G.R.,கட்சி ஆரம்பித்திருந்த சமயம்..தி.மு.க.வினரா
ல் ஆர்ப்பாட்டம்..படம் வெளியான தியேட்டர் திரை கிழிப்புகள்..படத்தை தோல்வி அடைய செய்துவிட்டது.அசோகன் பின் மீளவே இல்லை.
தேவையில்லா ..அரசியல்..தனிப்பட்ட மனிதர்களை அழிக்கும்போது மனம் வேதனை அடைகிறது.
(ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...தொழில் நுட்ப சம்பவம்..
விடிவெள்ளி என்று ஒரு படம்...தொழில் நுட்பம் வளாராத நேரம்..அப்படத்தில் 'கொடுத்துப் பார்..பார்..'என்றொரு பாடல் காட்சியில்..தென்னை மரத்தை ஒரு குடையைப்போல் காட்டுவார்
அப்பட ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
நாடோடிமன்னன் படத்தில்..பாலம் அறுந்து விழ..அதில் கதாநாயகி யுடன்M.G.R. தொங்குவார். மறுமுனையில் அப்பாலத்தை விழாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பார் இன்னொரு
M.G.R., ஒளிப்பதிவாளர் G.K.ராமு.
12 B பட எடிட்டுங்கும்..சமிபத்தில் வந்த நேபாளி பட எடிட்டுங்கும் சொல்லும் படியானவை.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இவற்றைவாசிக்காவிட்டால்..இன்று தமிழ் பத்திரிகைகள் எதையும் வாசிக்க முடியாது.கிசு கிசு உள்பட எல்லாவற்றையும் வாசிப்பதுண்டு.

7.தமிழ் சினிமா இசை
மிகவும் வளர்ந்திருக்கிறது.ஆனால்.வெறும் ஹார்மோனியம் மட்டுமே வைத்து பாடிய 'அத்தான்..என் அத்தான்' என்ற பாடலிலிருந்து..நாக்க முக்கா வரை..அனைத்து இசை அமைப்பாளர்களுமே இசைத்திலகங்கள் தான்.இளையராஜா..ரஹ்மான் ஆகியர்வர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

8.தமிழ் தவிர..வேறு இந்திய..உலக மொழி பார்ப்பதுண்டா?
சந்தர்ப்பம் கிடைத்தால்..எல்லா மொழி படங்களும் பார்க்கும் வழக்கம் உண்டு. சமீபத்தில் பார்த்த ஹிந்தி படம்..'தாரே ஜமீன் பர்'(நமது இயக்குநர்களாலும் இப்படி படம் எடுக்க முடியும்)
ஆங்கிலபடம்'IRONMAN'. சமீபத்தில் கொரியன் படம் ஒன்று பார்த்தேன்..சாதாரண காதல் கதைதான்.அருமையாக எடுத்திருந்தார்கள்.பெயர் மறந்து விட்டது.

9.தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா?என்ன செய்தீர்கள்?
நேரடி தொடர்பு இல்லை..ஆனால் விசு,மௌலி..போன்ற நண்பர்கள் உண்டு..Y.G.மஹேந்திரன்,S,ve.சேகர் ஆகியவர்களை நன்கு தெரியும்.மேலும் சிலரை தெரியும்..ஆனால் இன்று அவர்கள் அதை ஒப்புக்கொள்வார்களா என்று தெரியும்.
மேலும் ஒரு பிரபல இயக்குநர் 1983ம் ஆண்டு எனது 'காயத்ரி மந்திரம்'என்ற நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.அவரை இரண்டு ஆண்டுகளுக்குமுன் frankfurt விமான நிலயத்தில் சந்தித்தேன்.அவர் கனடாவிலிருந்து குடும்பத்துடன் வகேஷண் முடித்து connecting ஃப்ளைட்டுக்கு காத்திருந்தார்.நான் U.S.A.,க்கு செல்ல காத்திருந்தேன்.அப்போது அவரைப்பர்த்ததும்..கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் என்னிடம் பேசினார்.மகிழ்ச்சியாக இருந்தது.அந்த இயக்குநர்...'ஷங்கர்'

10.(அ)தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதுவும் யார் தலையிலும் ஓடவில்லை.இளம் இயக்குநர்கள் பலர் திறமையுள்ளவர்கள்.எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.

10.(ஆ)அடுத்த ஓராண்டில் தமிழில் சினிமா கிடையாது..மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள்..செய்திகள்..எதுவுமே பத்திரிகைகள்..தொலைக்காட்சி இணையம் உள்ளிட்டவை ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்..உங்களுக்கு எப்படி இருக்கும்..தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அடடா..இந்த கேள்விகேட்டவர்களுக்கு ஏன் இப்படி ஒரு கொல வெறி..என்னை விடுங்கள்..எனக்கு ஒன்றும் ஆகாது..
பொதுவாக இவை எல்லாம் இன்று இல்லாவிட்டால்..மக்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள்.நாட்டில் மன நல மருத்துவர் பாடு கொண்டாட்டம்.நாட்டின் ஜனத்தொகை 200 கோடியை விரைவில் எட்டிவிடும்.அவ்வளவுதான்.

இத்தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
மணிகண்டன்
நசரேயன்

4 comments:

நசரேயன் said...

அருமை.. என்னையும் ஒரு மனுசனா மதிச்சு கூப்பிட்ட உங்களுக்கும் குடுகுடுபையாருக்கும் நன்றி, சிக்கிரமே இந்த பதிவை அரங்கேற்றி விடுகிறேன்

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
அருமை.. என்னையும் ஒரு மனுசனா மதிச்சு கூப்பிட்ட உங்களுக்கும் குடுகுடுபையாருக்கும் நன்றி, சிக்கிரமே இந்த பதிவை அரங்கேற்றி விடுகிறேன்//

நன்றி

மணிகண்டன் said...

புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிக்கணும். நிச்சயமா ட்ரை பண்றேன்.

kanchana Radhakrishnan said...

வருகைக்கும்...அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றி