நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாள் முதலாய் தி.மு.க. விற்கே ஓட்டளித்து வந்திருக்கிறேன்.பலர் இது சம்பந்தமாக என்னை கேலியும் செய்திருக்கிறார்கள்.கலைஞர் எது சொன்னாலும்..செய்தாலும் அவரை ஆதரித்து நண்பர்களிடையே பேசிவந்தவன் நான்.,நான் தி.மு.க.உறுப்பினன் அல்ல...ஆனால் தி.மு.க.அனுதாபி.கலைஞரின் நிர்வாகத்திறமை என்னைப்போன்றோரை அசர வைத்ததுண்டு.
ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள் எரிச்சலையே ஏற்படுத்தி வந்திருக்கின்றன.
பத்திரிகைகள்..தேர்தல் காலங்களிலோ அல்லது மற்றசமயங்களிலோ மக்கள் ஆதரவு சம்பந்தமாக அவர்களிடம் வாக்களிப்பு எடுப்பதுண்டு.சமீபத்தில் கூட லாயோலா கல்லூரியில் வழக்கம் போல
வாக்களிப்பு நடந்தது.அதில் தனக்கு சாதகமாக இல்லை என யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? கலைஞரே கூட...இப்படிப்பட்ட முடிவுகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார்.
ஆனால் தினகரன் பத்திரிகை 'முதல்வராக வர யாருக்கு ஆதரவு' என மக்களிடம் வாக்களிப்பு நடத்தியதில் ஸ்டாலினிக்கு பெரும் ஆதரவு இருந்தது..ஆனால் அழகிரிக்கோ...ஒற்றை இலக்க ஆதரவு.இதைப்படித்த அஞ்சாநெஞ்சன் கோபம் அடைந்தார்..அந்த கோபத்தின் விலை..
மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது..
3 ஊழியர் மரணமடைந்தனர்.(தர்மபுரி பஸ் எரிப்பும் இதற்கும் என்ன வித்தியாசம்)
திறம்பட செயல்பட்டு வந்த தயாநிதி மாறன் பதவி பறி போனது.
ஆனால் சமீிப காலங்களில் கலைஞரும் ஸ்டாலினுக்கு ஆதரவாகத்தானே பேசிவருகிறார்.
அடுத்து...கனிமொழிக்கு எம்.பி.பதவி..இதில் பெரும்பாலோருக்கு இணக்கம் இல்லை.
பூங்கோதை லஞ்ச வழக்கு ஒன்றில் தனக்கு வேண்டியவருக்கு உதவப்போனதால் பதவி பறிக்கப்பட்டது.அதுவே டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுக்கள்...அவரை ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்..இப்போது தி.மு.க.விற்கும் மத்திய அரசுக்கும் டில்லி பாலம் அவர்.
எஸ்.சி.வி.க்கு தொந்தரவு கொடுத்து வந்ததுடன் நில்லாது..ராயல் கேபிள் விஷன் ஆரம்பித்தது...காதலில்வீழ்ந்தேன் படம் வெளிவராமல் தடுத்தது..இப்படி..மதுரையில் தனி ராஜ்ஜியமே நடந்து வருவதை இவரால் இன்றுவரை தட்டிக் கேட்கமுடியவில்லை.
இலங்கையிலிருந்து IPKF திரும்பிய போது..அது தமிழர்கள் பலரை அழித்தது..ஆதரவாக செயல்படவில்லை என ..அவர்களை வரவேற்க செல்லாத கலைஞரை அன்று பாராட்டினோம்..அந்த பற்று இன்று குறைந்து விட்டதே ஏன் கலைஞரே?
நம் இஸ்லாமிய சகோதரர்களுக்காக (எல்லோருமே அவர்கள்) பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் உருக்கியவர்கள் நம் ராணுவத்தினர்.ஆனால் இலங்கை பிரச்னையில் அவதிப்படுவது தமிழன் தானே என ஒரு எண்ணம் வேண்டாம்.
நம் ராணுவம் நினைத்தால்..இலங்கையில் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
கலைஞரே..இன்று நீங்கள்சொல்வதை கேட்கும் நிலையில் மத்திய அரசு உள்ளது..இச்சமயத்தில் இப்பிரச்னை சம்பந்தமாக உறுதியான முடிவெடுக்க வையுங்கள்.
அதைவிட்டிவிட்டு எப்போதும் போல மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.என்று சொல்லாதீர்கள்.,மக்களை தந்தி அனுப்பச்சொல்லாதீர்கள்.
இதுவரை எங்கள் எண்ணத்தில் உள்ள தமிழினத் தலைவராக இருங்கள்.,
இல்லையேல்..
உங்களை கோபாலபுர வீட்டிற்கும்,சி,ஐ.டி.நகர் வீட்டிற்கும்,கிரீன்வேஸ்சாலை வீட்டிற்கும்,மதுரை வீட்டிற்குமே அக்கறை ஊள்ளவர் நீங்கள் என்ற எண்ணத்தை தோற்றுவீக்காதீர்கள்.
31 comments:
எனக்கு தெரிந்த வரை, நீங்கள் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை, தி.மு.க தொண்டர்களின் மனப்புழுக்கத்தை சிறப்பாக எழுதியிருப்பதாக தோன்றுகிறது.
கடும் எரிச்சலின் காரணமாக நானும் இதைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். நேரமிருந்தால் படித்து பாருங்கள்.
குடும்ப அரசியலில் சிக்கி தி.மு.க(திக்கற்ற மு.கருணாநிதி) அவருக்கு வேண்டுமானால் மத்திய அரசை மிரட்டுவதும், வேண்டாததை அடுத்தவர்கள் மூ லம் தந்தி அடிக்க சொல்லி கேட்பதும் தமிழனின் உயிரை மயிரை போலே மதிக்கிறார் என்றே அர்த்தம். அவராகவே முன்வந்து அரசியலில் ஓய்வு அறிவிக்க வேண்டும்
//அது சரி said...
எனக்கு தெரிந்த வரை, நீங்கள் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை, தி.மு.க தொண்டர்களின் மனப்புழுக்கத்தை சிறப்பாக எழுதியிருப்பதாக தோன்றுகிறது.
கடும் எரிச்சலின் காரணமாக நானும் இதைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். நேரமிருந்தால் படித்து பாருங்கள்.//
வருகைக்கு நன்றி அதுசரி..உங்கள் பதிவையும் படித்தேன்
//நசரேயன் said...
குடும்ப அரசியலில் சிக்கி தி.மு.க(திக்கற்ற மு.கருணாநிதி) அவருக்கு வேண்டுமானால் மத்திய அரசை மிரட்டுவதும், வேண்டாததை அடுத்தவர்கள் மூ லம் தந்தி அடிக்க சொல்லி கேட்பதும் தமிழனின் உயிரை மயிரை போலே மதிக்கிறார் என்றே அர்த்தம். அவராகவே முன்வந்து அரசியலில் ஓய்வு அறிவிக்க வேண்டும்//
வருகைக்கு நன்றி நசரேயன்
கருணாநிதி ராஜினாமா செய்தால் ஈழபிரச்சனை தீர்ந்துவிடுமா?
1991ல் ஈழபிரச்சனைக்காக திமுக ஆட்சி பறிபோனது.தமிழர்கள் எல்லோரும் அலைகடலென திறன்டு மீண்டும் கருனாநிதியையா ஆட்சியில் அமர்த்தினர்?இரட்டை இலைக்கு தான் குத்தித்தீர்த்தனர்.ஜம்மென்று அம்மா ஆட்சிக்கு வந்தார்.
1977ல் மிசாவுக்காக திமுக ஆட்சியை இழந்தது.அப்போதும் நீங்கள் கருனாநிதிக்கா ஓட்டுபோட்டீர்கள்?இலைக்கு தானே குத்தினீர்கள்?
இப்போது உங்கள் பேச்சை கேட்டு ஆட்சியை இழந்து,மத்திய அட்சியையும் கவிழ்த்துவிட்டால் அடுத்து தமிழ்நாட்டில் அம்மாவும் டில்லியில் பாஜகவும் ஆட்சிக்கு வருவார்கள்.அப்புரம் நீங்கள் எல்லோரும் சேர்ந்து "கொள்கைக்கு ஆட்சியை இழந்த மகான்" என்று கூறி மெரினாவில் சிலையா வைக்க போகிறீர்கள்?
நடக்கற மேட்டரை பேசுங்க சாமிகளா..
பேரனுக்கு பதவி கேட்டு அரசை மிரட்டுவதும் அயல்விவாகார கொள்கையில் மிரட்டுவதும் வேறு வேறு.காம்யூனிஸ்டுகள் இம்மாதிரி மிரட்டித்தான் "போய்க்கோ மவராசா" என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.முலாயம் கூட்டணிக்குள் வந்துவிட்டார்.
கருணாநிதி இம்மாதிரி மிரட்டினால் கூட்டணிக்குள் வர அம்மாவும் விஜயகாந்தும் தயாராக இருக்கிறார்கள்.
எடுத்ததெற்கெல்லாம் அரசை குற்றம் சாட்டுவது எளிது.தனக்கு என்று வரும்போது செயல்படுத்துவது சிரமம்.
கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறும் அன்பர்கள் எல்லாம் ஈழபிரச்சனைக்காக தாம் பார்த்து வரும் வேலைகளை ராஜினாமா செய்ய முன்வருவார்களா?எத்தனை பேர் தயார்?கைகளை உயர்த்துங்கள்.
கோடிக்கணக்கான தொண்டர்களையும் மக்கள் ஆதரவை பெற்றவர் எப்படியெல்லாம் செயல்படலாம் ?
கலைஞரும், ஜெயலலிதாவும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. :(
வருகைக்கு நன்றிசெல்வன்
//கோவி.கண்ணன் said...
கோடிக்கணக்கான தொண்டர்களையும் மக்கள் ஆதரவை பெற்றவர் எப்படியெல்லாம் செயல்படலாம் ?
கலைஞரும், ஜெயலலிதாவும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை//
அழ அழ சொல்வார்கள் நம் மனிதர்கள்...புரிந்துக்கொள்ள சிலர் மறுக்கிறார்களே கோவி
//செல்வன் said...
எடுத்ததெற்கெல்லாம் அரசை குற்றம் சாட்டுவது எளிது.தனக்கு என்று வரும்போது செயல்படுத்துவது சிரமம்.//
நீங்கள் கூறுவது உண்மைதான்..பொறுப்பில் உள்ளவர்களும் தனக்கென வரும்போது சுயநலவாதிகள் ஆகிவிடுவது உண்மைதான்
செல்வன் அவர்களின் பின்னூட்டம் தான் நிதானமான கருத்துக்களின் தொகுப்பு. குறிப்பாக,
////கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறும் அன்பர்கள் எல்லாம் ஈழபிரச்சனைக்காக தாம் பார்த்து வரும் வேலைகளை ராஜினாமா செய்ய முன்வருவார்களா?எத்தனை பேர் தயார்?கைகளை உயர்த்துங்கள்.//
இந்தக் கருத்து யோசிக்க வேண்டிய ஒன்று.
நம் இருவருடைய "தமிழன் என்றால் இளிச்சவாயனா..?" பதிவுகள் சூடான இடுகையில் வந்தது தான் நமது புலம்பலில் கிடைத்த லாபம் !
:)
தமிழீழ சிக்கலுக்கு “தமிழீழம்” என்ற தனி நாடு மட்டுமே தீர்வு. இதை வலியுறுத்தியே தமிழக மக்களாகிய நாம் குரலெழுப்ப வேண்டும்.
நடுவண் அரசுக்கு தந்திகள் அனுப்புவது ஒன்றும் தவறான செயலல்ல. சனநாயக நாட்டில் கோரிக்கையை வலியுறுத்த இதுவும் ஒரு வழிதான்.
ஆனால் நாம் அனுப்பும் தந்தியில் உள்ள கோரிக்கைதான் வேடிக்கையாக உள்ளது. “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்” என்ற வாசகமே தி.மு.க. அனுப்பும் தந்தியில் இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு துணைபுரியும் இந்திய அரசை கண்டிக்கும் வகையில்தான் நமது தந்திகள் இருக்கவேண்டும்.
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதி வடிப்பது நீலிக்கண்ணீர் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.. ஆனால் உங்களைப்போன்ற போல் சிலர் இதை மெச்சுவது எப்படி என்று தெரிய வில்லை. இதில் அவர் அடித்த கோமாளி கூத்துகளை கூற ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. அவர் ஈழ தமிழருக்காக இதுவரை ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறாரா.
நண்பருக்கு ,
கலைஞர் வடிக்கும் நீலிக்கண்ணீரா இல்லையா என்ற ஆராய்ச்சியை விட இன்றைய அளவில் அவரைத்தவிர வேறு யாரால் ஈழத்தமிழர்களுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட முடியும் என்று சொல்ல முடியுமா உங்களால்..????
ஆதரவை விலக்கணும் , ஆட்சியிலிருந்து வெளியேறணும் நு கூவற மக்களே , இது என்ன எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக்கூடிய விடயமா என்று எண்ணிப்பாருங்கள்.......
அவ்வாறு செய்வதால் இங்கேயும் காங்கிரஸ் ஆதரவின்றி திமுக அரசு கவிழ்ந்தால் அதன்பின் ஜெயல்லலிதா வந்தால் ( இதற்கே ஆறுமாதங்கள் ஆகிவிடும் என்பதால் அதற்குள் பாதி ஈழத்தமிழன் வன்னியில் மரித்திருப்பான்) இன்றைக்கு நீங்களும் , நானும் எழுப்புகின்ற குரலுக்காக நம்மை குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் அடைப்பர்!!!!! பிறகென்ன செய்ய....ஆகவே இப்போதாவது நாம் அரசியல் காழ்ப்புணர்வுகளை தள்ளி வைப்போம்....
இதுவரை கலைஞர் புடுங்கிய ஆணி என்ன என்று கேள்வி கேட்பவர்கள் , இன்று வரை அவர்கள் ஈழப்பிரச்சினையில் புடுங்கிய ஆணி என்ன என்று பட்டியலிட்ட பின்னர் அக்கேள்வியை கேட்பதே நியாயமாக இருக்கும்!!!!!
// RATHNESH said...
செல்வன் அவர்களின் பின்னூட்டம் தான் நிதானமான கருத்துக்களின் தொகுப்பு. குறிப்பாக,
////கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறும் அன்பர்கள் எல்லாம் ஈழபிரச்சனைக்காக தாம் பார்த்து வரும் வேலைகளை ராஜினாமா செய்ய முன்வருவார்களா?எத்தனை பேர் தயார்?கைகளை உயர்த்துங்கள்.//
இந்தக் கருத்து யோசிக்க வேண்டிய ஒன்று.//
ஐயா..
அரசியல்வாதிகளுக்கும்....மாத சம்பாத்யத்தில் கைக்கும் ,வாய்க்கும் எட்டும் வகையில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா? இவன் வேலையை விட்டால் நடுவீதியில் நிற்பான்.அரசியல்வாதிகளின் நிலை இன்று அப்படியா இருக்கிறது?
nanri vaalai
// கரிகாலன் said...
தமிழீழ சிக்கலுக்கு “தமிழீழம்” என்ற தனி நாடு மட்டுமே தீர்வு.//
ராணுவத்தைப் பற்றி பதிவில் குறிப்பிட்டுள்ளது எதற்கு என எண்ணுகிறீர்கள் கரிகாலன்
//
//Rajaraman said...
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதி வடிப்பது நீலிக்கண்ணீர் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.. ஆனால் உங்களைப்போன்ற போல் சிலர் இதை மெச்சுவது எப்படி என்று தெரிய வில்லை. இதில் அவர் அடித்த கோமாளி கூத்துகளை கூற ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. அவர் ஈழ தமிழருக்காக இதுவரை ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறாரா.//
உங்கள் கருத்துக்களை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
//மதிபாலா said...
இதுவரை கலைஞர் புடுங்கிய ஆணி என்ன என்று கேள்வி கேட்பவர்கள் , இன்று வரை அவர்கள் ஈழப்பிரச்சினையில் புடுங்கிய ஆணி என்ன என்று பட்டியலிட்ட பின்னர் அக்கேள்வியை கேட்பதே நியாயமாக இருக்கும்!!!!//!
கலைஞரை குறைசொல்வதற்கான பதிவாக இதைப்பார்க்காதீர்கள்.,அவரால் மட்டுமே இன்று முடியும் என்பதாக படியுங்கள்
கலைஞரை குறைசொல்வதற்கான பதிவாக இதைப்பார்க்காதீர்கள்.,அவரால் மட்டுமே இன்று முடியும் என்பதாக படியுங்கள்///
இல்லை நண்பரே..நானும் இதை குறை சொல்லும் பதிவாக பார்க்கவில்லை....இதே கருத்தில் தான் என்னுடைய பதிவும் இருக்கிறது......இதோ உங்கள் பார்வைக்கு....ஆனால் அதே சமயம் அவரின் முயற்சிகளை பாராட்ட மனம் வேண்டாம் ....கொச்சைப்படுத்தவாவது வேண்டாம் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலேயே எனது பின்னூட்டம் அமைகிறது...
விளக்கமளிக்க வாய்பளித்தமைக்கு நன்றிகள்!!!
http://baluindo.blogspot.com/2008/10/blog-post.html
// கோவி.கண்ணன் said...
நம் இருவருடைய "தமிழன் என்றால் இளிச்சவாயனா..?" பதிவுகள் சூடான இடுகையில் வந்தது தான் நமது புலம்பலில் கிடைத்த லாபம் !
:)//
தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது ..அது தமிழர்கள் அல்ல..என்று சொல்லும்மத்திய அமைச்சர்களைக் கூட கலைஞர் இப்போது கண்டிப்பதில்லை.அதை நாம் சுட்டிக்காட்டினால் உடனே மற்றக் கட்சிக்காரர்களின் அடிவருடியாக சித்தரிக்கப் படுகிறோம் என்பது வேதனையான விஷயம்.
//மதிபாலா said...
கலைஞரை குறைசொல்வதற்கான பதிவாக இதைப்பார்க்காதீர்கள்.,அவரால் மட்டுமே இன்று முடியும் என்பதாக படியுங்கள்///
இல்லை நண்பரே..நானும் இதை குறை சொல்லும் பதிவாக பார்க்கவில்லை....//
நன்றி மதுபாலா
கடிதம் எழுதுவது, தந்தி கொடுக்க சொல்வது, மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழருக்காக என்று மீட்டிங் போட்டு, துதிபாடிகளை விட்டு தன்னை தானே புகழ்ந்து கொள்வது போன்ற Lip Service தவிர வேறு என்ன உபயோகமாய் கிழித்தார் அல்லலுறும் ஈழ தமிழருக்கு. ஐந்து முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்??? இதில் வேறு உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் என்று அடிவருடிகளை விட்டு கூச்ச நாச்சமின்றி பீத்திக்கொள்வது.. ஏதோ மத்திய அரசே இவரின் கண்ணசைவில் தான் நடக்கிறது என்று கதை அளக்கிரார்களே அப்புறம் எதுக்கு தந்தி வெங்காயம் எல்லாம் நேரடியாக ஆணை இடுவது தானே யார் தடுத்தது.
என்ன ஆனாலும் என்னால தலைவர விட்டுக்கொடுக்க முடியாது
வருகைக்கும்,கருத்து பரிமாறலுக்கும் நன்றி ராஜாராமன்
// rapp said...
என்ன ஆனாலும் என்னால தலைவர விட்டுக்கொடுக்க முடியாது//
தலைவரை விட்டுக்கொடுக்க வேண்டாம்.,தலைவரும் தமிழரை விட்டுக்கொடுக்க வேண்டாம் ராப்
//செல்வன் said...
கருணாநிதி ராஜினாமா செய்தால் ஈழபிரச்சனை தீர்ந்துவிடுமா?//
கலைஞர் ராஜிநாமா செய்ய வேண்டும் என நான் என் பதிவில் சொல்லவே இல்லையே
//கரிகாலன் saidஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு துணைபுரியும் இந்திய அரசை கண்டிக்கும் வகையில்தான் நமது தந்திகள் இருக்கவேண்டும்.//
Yes you are correct
//1991ல் ஈழபிரச்சனைக்காக திமுக ஆட்சி பறிபோனது.தமிழர்கள் எல்லோரும் அலைகடலென திறன்டு மீண்டும் கருனாநிதியையா ஆட்சியில் அமர்த்தினர்?இரட்டை இலைக்கு தான் குத்தித்தீர்த்தனர்.ஜம்மென்று அம்மா ஆட்சிக்கு வந்தார்.//
1991ல் அம்மா ஆட்சிக்கு வந்ததற்கு காரணம்..ராஜிவ்காந்தி கொலையானதால்.,
கலைஞர் தோற்றது ஈழபிரச்னை காரணம் இல்லை.
என் அப்பா தன்னுடைய திருமணத்தன்று தி.மு.க கரை போட்ட வேட்டி கட்டும் அளவுக்கு கட்சி வெறியர்.ஆனால் இன்று ஓட்டு மட்டும் தி.மு.க வுக்கு போடுவார்.காரணம் அனைவரும் அறிந்ததே.
//குடுகுடுப்பை said...
என் அப்பா தன்னுடைய திருமணத்தன்று தி.மு.க கரை போட்ட வேட்டி கட்டும் அளவுக்கு கட்சி வெறியர்.ஆனால் இன்று ஓட்டு மட்டும் தி.மு.க வுக்கு போடுவார்.காரணம் அனைவரும் அறிந்ததே.//
நானும் அப்படித்தான்..தி.மு.க. வேட்பாளருக்கு வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டதுண்டு...ஆனால் இன்றோ ..தேர்தல் அன்று ஓட்டுப் போடுவதோடு சரி
Post a Comment