விவசாயி பாட்டில் விவசாயி பற்றி..
முன்னேற்ற பாதையிலே மனசை வைச்சு
முழு மூச்சா அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி
(இதன் பாடலாசிரியர்-மருதகாசி)
ஆனந்தஜோதியில்...
ஒருதாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் இனமென்போம்
இறைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்.
ரிக் ஷாக்காரன் படத்தில்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
கணவன் படத்தில்..காங்கிரஸ் ஆட்சி முடிந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்த நேரம்
ஒருபாட்டில் இந்த வரிகள் வரும்
அதிகாரம் செய்தவரோ
ஆட்சியை முடித்தார்
இங்கே அன்பு வழி நடந்தவரோ
ஆட்சியைப் பிடித்தார்
தி.மு.க.ஆட்சிக்கு வர.M.G.R.பாடல்கள் பல உறுதுணையாய் இருந்திருக்கின்றன.
மீண்டும் மேலே சொன்ன ஆனந்தஜோதி படப்பாடலிலேயே மேலும் சில வரிகள்
அன்று மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்-நாளை
மனிதன் ஏழு உலகம் ஆளப்போகிறான்
(தொடரும்)
4 comments:
//அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி//
இவ்வரிகள் ரிக்ஷாக்காரன் படத்தில் வருபவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.ஜி.ஆர் வாழ்க.. தமிழ் வாழ்க..
தவறு திருத்தப்பட்டது.சுட்டிக்காட்டியமைக்கும்,வருகைக்கும் நன்றி டோண்டு சார்
வருகைக்கு நன்றி நசரேயன்
Post a Comment