Monday, October 13, 2008

பிராமணர்களும்..தனம் படமும்..

தனம் திரைப்படத்தை இப்போதுதான் dvd ல் பார்த்தேன்.,
படம் எடுத்த இயக்குநர் யாரை திருப்தி படுத்த வேண்டும் ..என்று படம் எடுத்தாரோ..தெரியாது.
படத்தில் தேவையில்லாமல்..ஒரு பிராமண குடும்பத்தை இழுத்துள்ளார்.
அது ஆசாரமான குடும்பமாம்...அவர்கள் ஜோதிடர்..பையனுக்கு தாசி பெண் மருமகளாக வந்தால் லக்ஷ்மி காடாக்ஷம் வரும்?! என சொல்கிறார்.ஏனென்றால் அவர்களது பையன் ஒரு தாசியை காதலிக்கிறான்.,குடும்பம் அதை ஏற்கவில்லை.அந்த ஜோதிடரும் ..அவளிடம் ஒரு முறை போக முயன்றபோது.. அவள் மறுத்து விட..அவளை பழி வாங்க இப்படி ஜோதிடம் சொல்கிறார்.
லக்ஷ்மி வருவாள் என்றதும் ..அந்த குடும்பம் சம்மதித்து விடுகிறதாம் ??!!
அவர்கள் வீட்டு எதிர் வீட்டு திண்ணையில்..ஒரு பிராமண கோஷ்டி..பிறன் மனை என்று தெரிந்தும்..அந்த வீட்டு மருமகளைப் பற்றி பேசுவதும்..ஆபாசமாக பேசுவதும்..
இதுதான் அவர்களின் வேலை என்பது போல் காட்டப்படுகிறது.அந்த பிராமணர்களின் மனைவிமார்தான் வீட்டுப்பொறுப்பை ஏற்று..கடைக்கு செல்வது போன்ற தொழில்களை செய்கிறார்கள்.இவர்கள் வெறும் வெத்து வேட்டு.
இப்போது மீண்டும் ஜோதிடர்..அந்த பெண்ணை நெருங்குகிறார்.அவள் மறுத்து விட...குடும்பத்தாரிடம்..அவல் மூலம் பிறந்த பெண் குழந்தையால் குடும்பத்துக்கு ஆபத்து எனக்கூறி..குழந்தையை கொன்றுவிடச் சொல்கிறார்.அப்படியே நடக்கிறது.பின் அந்த பெண் குடுப்பத்தையும்..அந்த ஜோதிடரையும் விஷம் வைத்துக் கொல்கிறாள்.
என் கேள்வியெல்லாம்
குசேலன் படத்தில்..நாவிதர்களை காமெடி என்ற பெயரில் கேலி செய்திருக்கிறார்கள் என அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
தனம் படத்தில் ஜோதிடர்களை கேவலப் படுத்துகிறார்களே..அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை.
ஜாதியைக்காட்டாமல்..ஒரு குடும்பத்தைக் காட்டி இருக்கலாமே..ஏன் ஒரு பிராமிண் குடும்பத்தைக் காட்ட வேண்டும்? இதை ஏன் அவர்கள் எதிர்க்கவில்லை?
படம் முழுதும் அந்த பிரிவினரை கிண்டல் செய்ய என்றே எடுக்கப்பட்டதாய் தெரிகிறது..தேவையில்லாமல்.எந்த ஜாதியை இழுப்பவர்கள் ஆனாலும்.அவர்கள் கண்டிக்க பட வேண்டியவர்களே!!.

39 comments:

குடுகுடுப்பை said...

நண்பர்களின் அறிவுரைப்படி நான் டிவிடி வாங்கவில்லை. இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறுவதை என்றைக்குதான் நிறுத்தப் போகிறார்களோ

dondu(#11168674346665545885) said...

உயர்சாதீயம் என்று கூறவேண்டியதை பார்ப்பனீயம் என்று கூறி ஜல்லி அடிக்கும் மற்ற உயர்சாதியினரை கண்டிக்காது கையாலாகாது தயங்கி நிற்கும் பார்ப்பனர்கள் இருக்கும் வரை இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள்.

டோண்டு ராகவையங்கார்

சென்ஷி said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நண்பர்களின் அறிவுரைப்படி நான் டிவிடி வாங்கவில்லை. இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறுவதை என்றைக்குதான் நிறுத்தப் போகிறார்களோ//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி dondu//

நசரேயன் said...

ஐயா நான் இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சென்ஷி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி நசரேயன்

Madhu Ramanujam said...

பிராமணனை திட்டினால் மதச்சார்பின்மை அற்றவர், பார்ப்பனீய எதிர்ப்பாளி, பகுத்தறிவுக் குஞ்சு என பலவாறாய் பட்டம் குடுத்துக் கொள்ளலாம். இன்ன பிற சாதிகளையோ அல்லது மதங்களையோ இப்படி வம்புக்கு இருந்தால் இந்து மத வெறியன் என்று பட்டம் வந்து சேர்ந்துவிடுமே. வேறு யாரை வம்புக்கு இழுத்தாலும் அவர் பாடு திண்டாட்டம் தான். பிராமணர்கள் எல்லாம், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போவாதால் தான் இப்படி. யார் காண்டார், ஒரு வேளை அந்த இயக்குனர் எலக்‌ஷன் டிக்கெட் வேண்டுகிறாரோ என்னவோ!

மணிகண்டன் said...

சார், நானும் தனம் படம் பார்த்தேன். கிறுக்குத்தனமான திரைக்கதை. மகா அறுவையான படம். அதை தவிர அந்த படத்தில் ஒன்றும் இல்லை. அதற்கு தாங்கள் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியம் இல்லை. இதில் எல்லாம் ஜாதியை பார்க்காமல் இருக்க நாம் பழகி கொள்ளவேண்டும்.

டோண்டு சார் :- ஜாதி துவேசத்தை அணுகும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். எங்கள் ஊரில் (திருச்சியில்) ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு கீழே ஒவ்வொரு வாரமும் (புதன்கிழமை) கோவிலுக்கு செல்லும் மக்களை கண்ட கண்ட கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள். அது திராவிடக்கழக கூட்டமாக இருக்கும். ஜாதியை சொல்லி கேலி செய்வார்கள். மாமிகள் அணிந்து வரும் புடவைகளை கிண்டல் செய்வார்கள். வடஇந்தியர்களை கண்ட கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள். ஆனால் அவற்றை பார்த்து யாரும் வெகுண்டு எழுந்தது இல்லை. அதை ஒரு ரசிப்புத்தன்மையோடு பார்த்துக்கொண்டே செல்வார்கள். மிகவும் சிரிப்பாக இருக்கும். அதன் பிறகு பெரியார் மூலமாக இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. அவருடைய சிலை நிறுவப்பட்டது. அதனால் கூட்டங்களை அவரின் சிலைக்கு முன்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.கோவில் கோபுரத்துக்கு சற்று தள்ளி இருப்பதால் கோவிலுக்கு போகிறவன் நிம்மதியாக போகலாம். காவல்துறை அலுவலகத்துக்கு வாசலில் சிலை இருப்பதால் கூட்டங்களிலும் பேச்சு சற்று அளவாகவே இருக்கிறது. அவர்கள் இத்தனை வருடம் திட்டியதால் யாரும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. ஆனால் ஒரே இரவில் பெரியார் சிலையை உடைத்து முட்டாள்த்தனமாக நடந்து கொண்ட சிலரால் அங்கே சில தினங்களுக்கு பதற்ற சூழ்நிலை உருவானது.

Being indifferent is not always a bad policy !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
Madhusudhanan Ramanujam

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்..
டோண்டுசார் பின்னூட்டத்திற்கு நானும் விரிவாக பதில் எழுத ஆசைப்பட்டேன்.,பிறகு மனம் மாறினேன்.
புரிதல் இல்லையெனில்..யாருக்கு என்ன சொல்லி என்ன பயன்?

vellayan said...

vanakkam naan dhanam padam paarkkavillai. matrenda saadhiyinaraiyum vidavum bramnarkal uyarnthavarkal endru thangalai patri perumai pesikolkirarkal. avarkalaey panathirkaha vesiai manakka sammadhkirarkalal enbadhum, jothidathil ulla mooda nambikkaikalai nambukirarkal enbadhuvum enakku seidhiyaka mandhil pattadhu. nandri.

vellayan said...

vanakkam naan dhanam padam paarkkavillai. matrenda saadhiyinaraiyum vidavum bramnarkal uyarnthavarkal endru thangalai patri perumai pesikolkirarkal. avarkalaey panathirkaha vesiai manakka sammadhkirarkalal enbadhum, jothidathil ulla mooda nambikkaikalai nambukirarkal enbadhuvum enakku seidhiyaka mandhil pattadhu. nandri.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வெள்ளையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிராமணர்கள் எல்லாம், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போவாதால் தான் //
நீங்கள் சொல்வது உண்மைதான்

Madhusudhanan Ramanujam

suvanappiriyan said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்
இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறுவதை என்றைக்குதான் நிறுத்தப் போகிறார்களோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சுவனப்பிரியன் ///

Unknown said...

Still I did not watch the film, I don't know from where this people getting the plot, because days are gone, brahimin families livig as joint family, they have grown well, and they are crossed from middle class family to higher middle class, soft ware jobs gave them better earnig and lifestyle. Moreover I grown up in brahmin nieghbourhood(irrattai mall street in tiruchy) I studied in brahmin school i was part of Seshupatti's family(thoughu i am a muslim). Her Son Nagaraja Iyer got me +2 seat in bishop heber school around in 1983) , whenver there is cricket match i used sit with their kids and watch.Used to take food and drinks like their kid. When her grand daughter get married she invited us to the marriage. When we went to marriage, she came out for us take care of us. I never forget such things in my life,even i am working in saudi arabia, surrounded with Malapuram(kerala) muslims, whome dont know what is the meaning of religous harmony.
any how don't worry east or west tamil nadu is the best. we will be with you sir, this things will come and go, our relationships will never change.

மணிகண்டன் said...

நான் ஒருமுறை வெனீஸ் போயிருந்தபோது திருச்சி இரட்டைமால் தெரு தான் ஞாபகம் வந்தது நவாப் !

திருச்சில பிராமண ஸ்கூல் எல்லாம் கிடையாதே ! எத சொல்றீங்க ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//nawab said...
we will be with you sir, this things will come and go, our relationships will never change.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி nawab

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
நான் ஒருமுறை வெனீஸ் போயிருந்தபோது திருச்சி இரட்டைமால் தெரு தான் ஞாபகம் வந்தது நவாப் !

திருச்சில பிராமண ஸ்கூல் எல்லாம் கிடையாதே ! எத சொல்றீங்க ?//
-))))

Unknown said...

it was behind saradas- school name nangawaram school, my first teacher was mr.sandanam it was happened before 35 years still i cant forget, morever that school was closed and shifted near to teppakulam gate. saradas bought the land long ago, and still structure is existing. thank you for your comments.

Unknown said...

pazuttha maramthan kalladi padum.

T.V.ராதாகிருஷ்ணன் said...

nanri nawaab

துளசி கோபால் said...

நானும் இந்தப் படத்தை நேற்றுப்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனேன்.

படத்தில் நாயகி செய்யும் 7 கொலைகளைப் பற்றி , கேஸை மறுவிசாரணைக்கு
இன்வெஸ்டிகேட் பண்னவரும் போலீஸ் ஆஃபீசர் எட்டு கொலை எட்டு கொலைன்னு சொல்றார்.

எண்ணி எண்ணிப் பார்த்தாலும் 7தானே வருது. மூளையைக் கசக்கியபின் புரிஞ்சு
போச்சு. அந்த எட்டாவது கொலை என்னைத்தான்!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி..துளசி .,
குழ்ந்தையையும் தனமே கொலை செய்ததாக காவல்துறை நினைக்கிறது என எடுத்துக் கொள்வோம்.
குப்பை படம்..அநாவசியமாக நம்ம மூளைக்கு ஏன் வேலை கொடுக்கணும் சொல்லுங்க..

lovely said...

தனம் படம் பற்றி சொல்லும்போது, ஷங்கர் படங்களில் பெரும்பாலும் நல்லவர்கள் (Heros) அவாளாக இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள், அப்போதுதான் (Equation) சமன்படும்.


அதேபோல் மற்ற படங்களில் அவாளை, சாமி சாமி என்று மற்ற characters சொல்கிறார்கள். அதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதலில் ஷங்கர் 'அவாள்'இல்லை.
இரண்டாவது.. சாமி..என்பது.பண்ணையார்..ஜமீந்தார் ஆகியவர்களைப்பார்த்து...'ஏஜமான்' 'முதலாளி'என்று சொல்வதுபோலத்தான் இதுவும்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு
பாரதிராஜா..எந்த பாத்திரத்தை சொல்லச் சொன்னார்.
ஒரு ஜாதியை கிண்டல் செய்வதற்கும்...இவற்றுக்கும் எல்லாம் வேறுபாடு உண்டு இல்லையா?
கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் நான் சொல்ல வருவது தங்களுக்கு புரியும்.
வருகைக்கு நன்றி லவ்லி

lovely said...

ஷங்கர் அவாள் இல்லையா? பின்பு ஏன் அவாளை மட்டும் நல்லவர்களாக (பெரும்பாலான படங்களில்) காட்டுகிறார்? (அடிவருடி?, இவ்வார்த்தை இணையத்தில் கற்றுக்கொண்டது).

சாமி என்பது ஜமீதரர்களையும் குறிக்கும் என்பது சரிதான், அதையும் நான் தவறு என்கிறேன்.

உங்கள் பதிவை நான் மீண்டும் படித்தேன். தனம் என்ற படத்தில் அவாளை தாழ்த்திக் காட்டுகிறார், என்று சொல்லி இருக்கிறீர்கள், நான் சொல்வது சில படங்களில் இப்படியும் பெரும்பாலான படங்களில் உயர்தியும் காட்டுகிறார்கள். தட்ஸ் ஆல்.

ஒரு வேலை, ஜோதிடத்தை அதிகமாக நம்புகிறவர்கள் அவாள் (If I am not wrong, Astrology is introduced by them, right?) என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்.

உங்கள் நேரம் எடுத்து பதில் கொடுத்தமைக்கு நன்றி.

Anonymous said...

//திருச்சில பிராமண ஸ்கூல் எல்லாம் கிடையாதே ! எத சொல்றீங்க ?//

தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும்.

திருச்சியில் எனக்கு தெரிந்த பிராமணக் பள்ளிகள்.



இடையாத்துமங்கலம் இரங்கசாமி அய்யர் மேநிலைப் பள்ளி. மேலச்சிந்தாமணி. திருச்சி- 620002. (இங்குதான் வாராவாரம் ஷாகாக்கள் நடைப் பெறுகின்றன). நான் படித்தவரை இப்பள்ளியில் ஒருநாளும் தேசிய கீதமோ தமிழ்த் தாய் வாழ்த்தோ பாடப்பட்டது கிடையாது (என்னே தேசப்பக்தி? என்னே தமிழ்ப் பற்று). ”வானோர் வணங்கும் அன்னையே” என்னும் சரஸ்வதி வாழ்த்து மட்டும்தான்.

சேஷய்யங்கார் மேநிலைப் பள்ளி, உறையூர், திருச்சி- 620003.

dondu(#11168674346665545885) said...

//”வானோர் வணங்கும் அன்னையே” என்னும் சரஸ்வதி வாழ்த்து மட்டும்தான்.//
இது தமிழ்ப் பாட்டுத்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி லவ்லி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///லெமூரியன் said...
//திருச்சில பிராமண ஸ்கூல் எல்லாம் கிடையாதே ! எத சொல்றீங்க ?//

தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும்.///



சொன்னது நான் இல்லை..திருச்சி பற்றி எனக்குத் தெரியாது...
வருகைக்கு நன்றி லெமூரியன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
//”வானோர் வணங்கும் அன்னையே” என்னும் சரஸ்வதி வாழ்த்து மட்டும்தான்.//
இது தமிழ்ப் பாட்டுத்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்//


இப்பொழுதெல்லாம்..தமிழ்த்தாய் வாழ்த்துத்தான் பாடுகிறார்கள்.தேசிய கீதம் பாடுவதில்லை..என்று ப.சிதம்பரம் தான் கலந்துக் கொண்ட கூட்டம் ஒன்றில் வருத்தப்பட்டார்.அவருக்கும் தேசபக்தி இல்லை போலும்...விடுங்கள் டோண்டு சார்

Arun Kumar said...

//இடையாத்துமங்கலம் இரங்கசாமி அய்யர் மேநிலைப் பள்ளி. மேலச்சிந்தாமணி. திருச்சி- 620002. (இங்குதான் வாராவாரம் ஷாகாக்கள் நடைப் பெறுகின்றன). நான் படித்தவரை இப்பள்ளியில் ஒருநாளும் தேசிய கீதமோ தமிழ்த் தாய் வாழ்த்தோ பாடப்பட்டது கிடையாது (என்னே தேசப்பக்தி? என்னே தமிழ்ப் பற்று). ”வானோர் வணங்கும் அன்னையே” என்னும் சரஸ்வதி வாழ்த்து மட்டும்தா//

excuse me

நானும் ER school old student தான். தினமும் நீராரும் கடல் தமிழ் தாய் வாழ்த்தும், தேசியகீதமும் பாடி முடித்த பின்னர் தான் பள்ளி தொடங்குகிறது. உங்களுக்கு மட்டும் தனியாக அங்க வேற ஏதாச்சும் நடக்கிறதா?

லக்கிலுக் said...

அட.. அட.. அட.. என்னா பதிவு? என்னா பதிவு?

நன்னா சொன்னேள் போங்கோ...

Kanchana Radhakrishnan said...

சூர்யா..தங்கள் வருகைக்கு நன்றி...
எனக்கு ஒன்று புரியவில்லை...
நீங்கள் சொல்லியுள்ளது நான் சொல்லவில்லை..பின்னூட்டம் இட்ட ஒருவர் சொன்னது..அதற்கு என்னை சாடினால் எப்படி?

Kanchana Radhakrishnan said...

//லக்கிலுக் said...
அட.. அட.. அட.. என்னா பதிவு? என்னா பதிவு?

நன்னா சொன்னேள் போங்கோ...//


வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி லக்கிலுக்