Wednesday, October 15, 2008

இலங்கை தமிழர் பிரச்னை...நான் விடைபெறுகிறேன்..நன்றி

இலங்கை தமிழர் பிரச்னை குறித்து..அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றதும்...அதில் மத்திய அரசுக்கு இரண்டு வார அவகாசம் கொடுப்பதாகவும்..அதற்குள் மைய அரசு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் ...தவறினால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கனிமொழியும்..தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக...ராஜினாமா கடிதத்தை கலைஞரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது போன்ற சமயங்களில் கலைஞரின் கரத்தை பலப்படுத்த வேண்டியது..ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதால்..நானும் பதிவுகள் இனி இடுவதில்லை என தீர்மானித்து..ராஜினாமா கடிதத்தை என் மனைவியிடம் கொடுத்துள்ளேன்.இரண்டு வாரங்களில் மைய அரசு முடிவெடுக்கவில்லை எனில் என் ராஜினாமா ஏற்கப்படும் என என் மனைவி தெரிவித்துள்ளார்.

18 comments:

ச்சின்னப் பையன் said...

முடியல... முடியவேயில்ல..... :-)))

சுரேஷ் ஜீவானந்தம் said...

முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களை விட்டால் இணையத் தமிழினத்துக்கு வேறு நாதியில்லை. வாழும் தமிழ் நீங்கள்.

வேண்டுமானால் உங்கள் மகனிடமிருந்தோ, மகளிடமிருந்தோ ஒரு இராஜினாமாக் கடிதத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குடுகுடுப்பை said...

ரொம்பதான் குசும்பு உங்களுக்கு. நான் தினமும் படிக்கும் ஒரு தளம் உங்களுடையது. அம்மா , ஐயாவோட ராஜினாமா கடிதத்தை திருப்பிக்கொடுத்திருங்க

T.V.Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
முடியல... முடியவேயில்ல..... :-)))
//
நன்றி ச்சின்னப்பையன்
:-)))

T.V.Radhakrishnan said...

//சுரேஷ் ஜீவானந்தம் said...
முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.//


உடன் பிறப்பே..உனக்கு என் மீது உள்ள மதிப்பை உணர்கின்றேன்.,ஆனாலும் அண்டை நாட்டில் தாக்கப்படுவது நமது சகோதர ,சகோதரிகள்., ஆகவே..அன்னை சோனியா வேண்டிக்கொண்டால் உனது எண்ணம் ஈடேற வாய்ப்பு உண்டு

T.V.Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
ரொம்பதான் குசும்பு உங்களுக்கு. நான் தினமும் படிக்கும் ஒரு தளம் உங்களுடையது. //

தினமும் டீ போட்டுக்கிட்டே என் தளம் தான் படிப்பீங்களா? நன்றி

நசரேயன் said...

ஐயா கலைஞர் முன்னோருதடவை சொன்ன அரசியல் முழுக்கு மாதிரியா?

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
ஐயா கலைஞர் முன்னோருதடவை சொன்ன அரசியல் முழுக்கு மாதிரியா?//


அரசியல் முழுக்கு..இதுதான் என் கடைசி தேர்தல் இப்படி பல உண்டு

கோவி.கண்ணன் said...

பதவியில் இருந்தால் தான் அதிகாரத்தை வைத்து எதாவது செய்ய முடியும், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
பதவியில் இருந்தால் தான் அதிகாரத்தை வைத்து எதாவது செய்ய முடியும், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.//


என் ராஜினாமா கேள்விப்பட்டு அலைகடலாய் கோவி தலைமையில் திரண்டு ..என் எண்ணத்தை மாற்றிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும்...உடன்பிறப்புகளே..என்னை நம்பும் உங்களை நட்டாற்றில் விட,,என் மனசாட்சி இடம் கொடுக்கும் என நீங்கள் எப்படி நினைக்கலாம்..பொறு..நல்லதே நடக்கும்

பூச்சாண்டியார் said...

அய்யய்யோ.. என்ன கொடுமை சார் இதெல்லாம்.. நாங்கெல்லாம் எவ்ளோ அரசியல் ஸ்டண்ட பார்த்திருப்போம்.

அத்திரி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ அப்ப்ப்ப்பா பா ........ முடியலை///

இப்பவே கண்ணைக் கட்டுதே........!!!!!!!!!

கண்ணுல தண்ணி வந்துரிச்சி

Dr.Rudhran said...

good.

T.V.Radhakrishnan said...

// பூச்சாண்டியார் said...
அய்யய்யோ.. என்ன கொடுமை சார் இதெல்லாம்.. நாங்கெல்லாம் எவ்ளோ அரசியல் ஸ்டண்ட பார்த்திருப்போம்.//

காமாலாலைக்கண்களுக்கு பார்ப்பவை அனைத்தும் மஞ்சளாகத்தான் தெரியும்.உண்மைக்கும்..பொய்க்கும் வித்தியாசம் தெரியாத உன்னைப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

T.V.Radhakrishnan said...

//அத்திரி said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ அப்ப்ப்ப்பா பா ........ முடியலை///

இப்பவே கண்ணைக் கட்டுதே........!!!!!!!!!

கண்ணுல தண்ணி வந்துரிச்சி//

அத்திரி கண்களில் தண்ணீர்வர எத்திரியைப்போட்டாய்..உடனே விரைந்திடுவாய் இலவச கண் சிகிச்சை முகாமுக்கு?பின் கண்கள் சிந்தனையே உனக்கு இருக்காது.

T.V.Radhakrishnan said...

//Dr.Rudhran said...
good.//
nanri sir

பொடியன்-|-SanJai said...

:)))

உங்க மனைவி ஏத்துக்கிட்டாங்கன்னா இன்னொரு வலைப்பூ ஆரம்பிப்பிங்களா?

நம்ம தலைவர்களும் அடுத்த தேர்தல்ல நிக்காமலா போய்டுவாங்க? :))

T.V.Radhakrishnan said...

/// பொடியன்-|-SanJai said...
:)))

உங்க மனைவி ஏத்துக்கிட்டாங்கன்னா இன்னொரு வலைப்பூ ஆரம்பிப்பிங்களா?

நம்ம தலைவர்களும் அடுத்த தேர்தல்ல நிக்காமலா போய்டுவாங்க? :))///


இது ஜனநாயக நாடு...இதில் யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது..இன்று சிங்கத்தைப் பார்த்து சிரிக்கும் நரிகளுக்கு சரியான பதில் உரைத்திட புதிய வலைப்பூ ஆரம்பிப்பேன்.அப்போது உடன்பிறப்பே உன் பாச மழைக்கும் தலை வணங்குவேன்