Tuesday, October 21, 2008

தமிழகம் இரண்டாகப் பிரியப்போகிறதா?

திராவிட முன்னேற்ற கழகம் பிறந்த போது..அதன் முக்கிய கொள்கையே..தனி திராவிட நாடு..ஆனால் ஒரு கால கட்டத்தில்..அண்ணா அந்த கொள்கையை கைவிட்டார்.
மும்பையில் சமீபத்திய வட இந்தியரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி பேசும்போதும்..மத்திய அமைச்சர் சிவராஜ் படீல்..'பிரிவினைக் கேட்கும் நபர் யாராய் இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.
இனி தமிழகத்திற்கு வருவோம்...
ஏற்கனவே..மதுரையில் தனிக்காட்டு ராஜாவாக இயங்கிவரும் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.தனியொரு மனிதனைக் கண்டித்து..அதுவும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரை குறிவைத்து இதுவரை எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை.
இந்நிலையில் ..ஒரு சில பத்திரிகைகள் ..எல்லை மீறி ..நடப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு தமிழ் இதழில்..தென் தமிழக முதல்வர் அழகிரி ..என்று கூறியுள்ளது.
நம் கேள்வி எல்லாம்...
1.இதை ஏன் முதல்வர் கண்டிக்கவில்லை.
2.தமிழகத்தில் வருங்காலத்தில்..இரண்டு முதல்வர்கள் வரும் வாய்ப்புண்டா?
3.சாதாரண கருத்துக்கணிப்புக்கே...குடும்ப சண்டை..பிரிவினை எல்லாம் வந்த போது..இந்த விஷயம் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கப்படுகிறது.
4.இல்லை..வட தமிழகத்திற்கு தனியாக ஸ்டாலின் முதல்வர் ஆகிறாரா?

11 comments:

நசரேயன் said...

நெல்லை மாவட்டத்திற்கு எனக்குதான் வாய்ப்பு கொடுக்கணும்

Anonymous said...

இந்நிலையில் ..ஒரு சில பத்திரிகைகள் ..எல்லை மீறி ..நடப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு தமிழ் இதழில்..தென் தமிழக முதல்வர் அழகிரி ..என்று கூறியுள்ளது.
நம் கேள்வி எல்லாம்...
1.இதை ஏன் முதல்வர் கண்டிக்கவில்லை.
2.தமிழகத்தில் வருங்காலத்தில்..இரண்டு முதல்வர்கள் வரும் வாய்ப்புண்டா?
3.சாதாரண கருத்துக்கணிப்புக்கே...குடும்ப சண்டை..பிரிவினை எல்லாம் வந்த போது..இந்த விஷயம் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கப்படுகிறது.
4.இல்லை..வட தமிழகத்திற்கு தனியாக ஸ்டாலின் முதல்வர் ஆகிறாரா? //

உங்கள் கேள்விகளே குழப்பத்தில் உள்ளது ...
தனி திராவிட நாடு.. வேறு தமிழகத்தில் பிரிவு என்பது வேறு ..

யார் யாரையும் வருங்கால முதல்வர் / பிரதமர் என்று கூறலாம் ..இதெற்கெல்லாம் முதல்வர் கண்ணடிக்க வேண்டும் என்றால் ...வரி விளம்பரம் மாதிரி வரி கண்ணடிப்பு கொடுக்க வேண்டி வரும் ..

இரண்டு முதல்வர் என்பது அம்மா + பன்னீர் மாதிரி கூறுகீர்களா ?

இதில் விஷயமே இல்ல ...

வட தமிழ்நாடு என்பது டாக்டரின் கோரிக்கையாகவே இருக்கும்

பூச்சாண்டியார் said...

விட்டா ஊருக்கு ஒரு முதல்வர் இருபாங்க போல.. :D

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பக்கி லுக் ... said...
யார் யாரையும் வருங்கால முதல்வர் / பிரதமர் என்று கூறலாம் ..இதெற்கெல்லாம் முதல்வர் கண்ணடிக்க வேண்டும் என்றால் ...வரி விளம்பரம் மாதிரி வரி கண்ணடிப்பு கொடுக்க வேண்டி வரும் ..//

இந்திய பிரஜை அனைவருக்கும் வருங்கால முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தப்பில்லை..ஆனால் நான் சொல்லவந்தது அந்த பத்திரிகை அவரை இப்போதே தென் தமிழக(!?)முதல்வராய் செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தில் எழுதியதால்தான் இப் பதிவு.
வருகைக்கு நன்றி பக்கிலுக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நெல்லை மாவட்டத்திற்கு எனக்குதான் வாய்ப்பு கொடுக்கணும்//

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பக்கி லுக் ... said...உங்கள் கேள்விகளே குழப்பத்தில் உள்ளது ...
தனி திராவிட நாடு.. வேறு தமிழகத்தில் பிரிவு என்பது வேறு ..//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// T.V.Radhakrishnan said...
//பக்கி லுக் ... said...உங்கள் கேள்விகளே குழப்பத்தில் உள்ளது ...
தனி திராவிட நாடு.. வேறு தமிழகத்தில் பிரிவு என்பது வேறு ..//

:-))))////


நாட்டையே பிரிக்கும் கொள்கையை விட்டவர்..தமிழ்நாடு பிரிவை விரும்புவாரா? என்ற அர்த்ததில் எழுதியது அது

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வருங்கால முதல்வர் said...
வணக்கம்//

வணக்கம்

வரதராஜலு .பூ said...

ஆஹா, பிரச்சனையை சமாளிக்க சூப்பர் ஐடியாவாச்சே? முன்னுதாரணமா அருணாசல் பிரதேஷிலோ மேகாலயாவிலோ இன்று 4 முதல்வர்கள் இருக்கிறார்களாமே? இத அப்பவே யோசிச்சி இருக்கிங்களே நீங்க TVR.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வரதராஜலு .பூ