கலைஞருக்கு எதிராக அரசியல் செய்வோர் அவர் அளவிற்கு முடியாவிட்டாலும்..ஓரளவு புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய வேண்டும்.
வைகோ கைது மீண்டும் இதை நிரூபித்துள்ளது.
சங்கரராமன் கொலை ஆன போது..அதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால்..தி.மு.க.,ஆர்ப்பாட்டம் செய்யும் என்றதுமே..அவசர அவசரமாக ஜெ அரசு..ஜெயேந்திரரை ஹைதராபாத்தில் கைது செய்தது.இதன் காரணமாக ஜெ ஒரு சாராரின் ஆதரை இழந்தார்.
இப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்களை..தி.மு.க.,அரசு விட்டு வைத்திருக்கிறது..என் ஆட்சிக் காலத்தில் பொடா சட்டத்தில் இவர்களை கைது செய்திருக்கிறேன்..என்று ஜெ சொல்லப்போக...அவர் இப்படி சொன்னதால்தான் வைகோ கைதானாற்போல ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. கலைஞரும்..ஜெ க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கூட்டணிக் கட்சிக்கு வேட்டு வைத்து விட்டார்.,
ஜெ..தனித்து விடப்பட்டுள்ளார்..
நுணலும் தன் வாயாற் கெடும்...
15 comments:
allam nalladhuguthan
அவர் ஒரு அரசியல் சாணக்கியர்
வருகைக்கு நன்றி sundarmeenakshi
//நசரேயன் said...
அவர் ஒரு அரசியல் சாணக்கியர்//
உண்மைதான்
:-)))
வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்
அது மட்டுமல்லாமல் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு ஆளாளுக்கு நினைத்தவுடன், பேரணி-கண்டனம் என்று இஷ்டத்திற்கு முயற்சிக்கும் ஒரு போக்கு சமீபத்தில் ஆரம்பித்தது. இனி அது போன்ற துக்கடா முயற்சிகள் பட்டென்று காணாமல் போய்விடும்.
அடுத்தது வரப்போகும் நடிகர்கள் உண்ணாவிரதத்தில் ஆளாளுக்கு, இராமேஸ்வரம் போல அல்லாமல் அடக்கி வாசிப்பார்கள்.
நீங்கள் சொல்வது உண்மை...பா.ம.க.,ஏற்கனவே இவ்விஷயத்தில் பல்டி அடித்துவிட்டது..இனி ஆளாளுக்கு பேசமாட்டார்கள்.நீங்கள் சொல்வது உண்மை...பா.ம.க.,ஏற்கனவே இவ்விஷயத்தில் பல்டி அடித்துவிட்டது..இனி ஆளாளுக்கு பேசமாட்டார்கள்.வருகைக்கு நன்றி r.selvakkumar
:-))))
ஈழ விசயத்தில் இன்னும் நான் பதிவு எழுதவில்லை. காரணம் நம்ம ராச தந்திரர் கலைஞர் கெடு இன்னும் முடியவில்லை. அதற்குள் இத்தனை நாடகம் ? நல்லாவே நடக்குது. நடக்கட்டும் அய்யா
// அத்திரி said...
ஈழ விசயத்தில் இன்னும் நான் பதிவு எழுதவில்லை. காரணம் நம்ம ராச தந்திரர் கலைஞர் கெடு இன்னும் முடியவில்லை. அதற்குள் இத்தனை நாடகம் ? நல்லாவே நடக்குது. நடக்கட்டும் அய்யா//
நாடகம் நடக்குது.
:-))))
வைகோ மற்றும் கண்ணப்பன் பேசியது பிரிவினைவாதம். அதற்கு அவர்களை சிறையில் அடைத்திருப்பது சரியே. அரசியல் முலாம் பூசாதீர்கள்.
திரைப்படத்துறை நடத்தும் போராட்டங்களிலும் இதே தவறு நடக்கிறது. அதற்கும் கலைஞர் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதை encourage செய்வது நாம் அனைவருக்கும் நல்லது அல்ல. நேற்று தான் ராமேச்வரத்தில் நடந்த கூட்டத்தை பார்த்தேன். அதில் பேசப்பட்ட பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. உணர்ச்சியை தூண்டுவதாகவும் / தேவையற்ற பிரிவினைவாதமும் மிகுதியாகவே இருந்தது. பேசியவர்கள் சினிமாகாரர்கள்.
2 MP கொண்ட வைகோ பேசுவது அபத்தம். பிரிவினைவாத பேச்சினால் ஈழத்தமிழ் மக்களின் நலன் மேலும் பாதிப்படையக்கூடும்.
செல்வகுமார் பின்னூட்டத்தையும்..அதற்கு என் பதிலையும் பாருங்கள் மணி...பிரிவினைவாதிகள் தண்டிக்கப்படவேண்டும் அதில் சிறிதும் சந்தேகமில்லை..ஆனால் சீமான்..அமீர்..ஏன் மௌனமாய் இருக்கவேண்டும்?சட்டம் அனைவருக்கும் சமம்..இதில் மாற்றுக்கருத்து இல்லை.
*********** சீமான்..அமீர்..ஏன் மௌனமாய் இருக்கவேண்டும்? *************
மௌனமாய் இருக்க வேண்டாம். ஆனால் இந்தியாவில் சிறிது அளவேனும் உள்ள ஈழத்தமிழ் மக்களின் மேல் ஆதரவை பிரித்து எடுக்காமல் இருக்கலாம். அதைத்தவிர, அவர்கள் பேச்சில் உள்ள புத்திசாலித்தனத்தை கொஞ்சமேனும் குறைத்து கொள்ளலாம். உளவுத்துறையை வம்பிழுக்காமல் இருக்கலாம். காவலில் நிற்கும் போலீஸ் பி சிக்களை "தமிழன் தானே அவர்கள்" ? இல்லை குஜராத்தியரா, சீக்கியரா என்று கேள்வி கேட்காமல் இருக்கலாம். ராமேஸ்வரம் கடலைத் தாண்டி வந்து "ராஜபக்ஷயே : உன்னை தமிழர்கள் சும்மா விட மாட்டார்கள்" என்று உதார் விடாமல் இருக்கலாம். இவ்வாறான பேச்சுக்கள் எந்தளவில் தமிழ் ஈழ மக்களை காப்பாற்றும் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை அடக்குமுறையை தூண்டி அதன் மூலம் மேலும் ஆதரவு சேர்க்க முற்படுகிறார்களா ? அதைத்தவிர, இவ்வாறான கூட்டங்களில் அனைவரும் ஒரே கருத்தை வெளிப்படுத்துவது சற்று உறுத்துகிறது. பேச்சு சுதந்திரத்தின் அர்த்தத்தை சற்று சீர்தூக்கிப் பார்க்க வைக்கிறது.
வருகைக்கு நன்றி மணிகண்டன்
வருகைக்கு நன்றி vatha
Post a Comment