தமிழ்மண பதிவாளர்கள் அனைவரும் அனேகமாக இவரை அறிந்திருப்பார்கள்.உண்மையில் இவர் இணையத்தை புரிந்துக் கொண்டு..தன் பதிவுகள் மூலம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சமூக அவலம்..மனித நேயம்..கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் மனபாங்கு..தன்னலமற்ற சேவை..இவற்றிற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.,
எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு..இவரின் தொண்டுகள் பாராட்டத்தக்கது
அண்மையில் தில்லியில் அரசு மருத்துவ மனைகளில் இயங்கி வரும் - HIV சோதனை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மிக மோசமாக இயங்கி வருவதாகக் கேள்விப்பட்டு..அவற்றில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட..மங்கை உண்மை நிலை அறிய..தானே பரிசோதனை செய்துக் கொள்ள வந்துள்ளதாகக் கூறி ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.எப்படிப்பட்ட ஒரு முடிவு..எந்த ஒரு மனிதனுக்கும் வராத ஒரு எண்ணம்.
சாதாரண நோயே ..நமக்கு இருப்பது மற்றவர்க்கு தெரியக்கூடாது என்ற எண்ணம் உள்ள சமுதாயத்தில்..இப்படி ஒருவரா...
மங்கை...பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இதுவரை அவர் பக்கங்களுக்கு போகாதவர்கள்..சென்று அவரது ஒவ்வொரு பதிவையும் படியுங்கள்..
எல்லா பதிவுகளும் படிக்கப்பட வேண்டும் என்பதால்..குறிப்பிட்டு எப்பதிவையும் நான் சொல்லவில்லை.
http://manggai.blogspot.com
மங்கை..அனைவர் சார்பிலும் நன்றி.
9 comments:
:)
நானும் சேர்ந்து ஒரு சல்யூட் அடிச்சிக்கிறேன்.. அப்படியே அவங்க என் தோழி என்று சொல்லிக்கிறதுல எனக்கு பெருமை..
அடடா, இதை நான் மிஸ் பண்ணிட்டேனே. சூப்பர். ரொம்ப ரொம்ப நன்றி
வருகைக்கு நன்றி
சென்ஷி
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
வருகைக்கு நன்றி rapp
அன்புள்ள காஞ்சனா அவர்களுக்கு
உங்கள் அன்பிற்கு நன்றி..
ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. நான் அந்தப் பதிவை எழுதியதின் நோக்கமே எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள செல்வது அவ்வளவு பெரிய விஷயமாக கருதக்கூடாது என்பற்காகத்தான்...நான் ஏதோ பெரிய செய்வற்கரிய காரியத்தை செய்ததாக கருதினால், இந்தப் பதிவின் நோக்கமே மாறிவிடும்... it will be like back to sqaure one..
தவறாக நினைக்க வேண்டாம்.. அடி மனதில் இருந்ததை சொல்கிறேன்... செய்யவேண்டியவற்றில் ஒரு சதவீதம் கூட இல்ல என் முயற்சி...
//ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. நான் அந்தப் பதிவை எழுதியதின் நோக்கமே எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள செல்வது அவ்வளவு பெரிய விஷயமாக கருதக்கூடாது என்பற்காகத்தான்...//
:-)))
//தவறாக நினைக்க வேண்டாம்.. அடி மனதில் இருந்ததை சொல்கிறேன்... செய்யவேண்டியவற்றில் ஒரு சதவீதம் கூட இல்ல என் முயற்சி..//.
தங்கள் பதிவுகள் எல்லாம் படிக்கப்பட வேண்டும் என்பதே என் பதிவின் நோக்கம்
Post a Comment