Tuesday, October 14, 2008

நாத்திகம் பேசும் மதன்..

நாத்திகம் பேசினால்..பிராமனீயம் பர்ரி பேசினால்..அல்லது பதிவிட்டால் உடனே பல கண்டனங்கள்..கையாலாகாதவன் என்ற பட்டங்கள்..ஆனால் சென்ற வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு பதிலில் அவர் நாத்திகவாதியாய் பேசி இருக்கிறார்..அதை கண்டித்து இதுவரை யாரும்..எழுதவோ..பேசவோ இல்லையே..ஏன்?
சிவபெருமானின் டிரஸ் புலித்தோலா? சிறுத்தைத் தோலா? என்ற கேள்விக்கு..பதிலில் அவர் சொன்னதை பாருங்கள்..
யாருக்குத் தெரியும்?அது மனிதக் கற்பனை.ஆனால்..சிறுத்தையைவிட புலி மேலானது.ஆகவே அது புலித்தோலாகத்தான் இருக்க வேண்டும்.வங்காளத்தில்தான் புலிகள் உண்டு..அங்கிருந்து புலித்தோல்கள் கைலாயத்திற்கும்(???!!!!)போயிருக்கலாம்(இது கிண்டல்தானே-நான்)ஐஸ் மலை மீது புலி,சிறுத்தை எதுவும் வாழ வாய்ப்பு இல்லை.மொத்தத்தில் இதையெல்லாம் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் ஒரு கேள்வியில் ..நாத்திகம் பற்றி பேசும்போது..இன்னொரு மதத்தை தாக்கினால்,.காரணங்கள் கற்பிக்கப்பட்டு வாதங்கள் எடுபடாமல் போகலாம்.தவிர ,நம் மதத்தில் உள்ள மூடனம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பிறகு,மற்ற மதங்களுக்குப் போகலாம்.ஆனால் ..எல்லா மதங்கலும் இதைப் பின்பற்றினால் பண்பாக(??!!)இருக்கும்.
இதைத்தவிர....பூஜை,புனஸ்காரங்கள் எல்லாம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக புத்திசாலிகள் கண்டுபிடித்த யுக்தி..என ஜாபாலி ராமனிடம் நாத்திக வாதம் புரிவதை தேவையில்லாமல் இங்கு சொல்லி இருக்கிறார்.
மாமியார் உடைத்தால் மண்குடமா??

18 comments:

கோவி.கண்ணன் said...

மதனும், மத்தவாளும் பேசினால் அது புரட்சி என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தானே மதன் போன்று தெளிவான கருத்தைச் சொல்ல முடியும். நாத்திகர்களுக்கு என்ன தெரியும் ? நான் மதனுக்கு 1000விழுக்காடு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதன் ஆசிரமம் ஆரம்பித்தால் நான் தான் முதல் சீடன்.

நசரேயன் said...

நான் முதல் கண்டனம் தெரிவிச்சுகிறேன்

Thamizhan said...

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கும்,இரண்டு பெண்டாட்டிகள் உள்ள கடவுள் சிலைகளுக்கும் பதில் சொல்லி முடிய வில்லை!
புலியா சிறுத்தையா வெல்லாம் கேட்டு ஏன் உயிரை வாங்குகிறார்களோ.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Thamizhan

மாயவரத்தான்.... said...

//இரண்டு பெண்டாட்டிகள் உள்ள கடவுள் சிலைகளுக்கும் பதில் சொல்லி முடிய வில்லை!//

இதுல என்ன கஷ்டம்? ஒன்னு மனைவி, இன்னொன்னு துணைவின்னு சொல்லிட்டு போங்களேன்.

பூச்சாண்டியார் said...

மதனுக்கு எனது கண்டனங்கள்..

பாவம் அவரும் என்ன பண்ணுவாரு.. பொழப்பு ஆனந்த விகடன்ல ஓடனும் இல்ல. இது ஒரு வாடிக்கையாகவே போச்சு.. :(

குடுகுடுப்பை said...

ஆனந்த விகடன் படிக்கிறதே மறந்து போச்சு இப்போ.

T.V.Radhakrishnan said...

// மாயவரத்தான்.... said...
//இரண்டு பெண்டாட்டிகள் உள்ள கடவுள் சிலைகளுக்கும் பதில் சொல்லி முடிய வில்லை!//

இதுல என்ன கஷ்டம்? ஒன்னு மனைவி, இன்னொன்னு துணைவின்னு சொல்லிட்டு போங்களேன்.//
:-)))))))))))

T.V.Radhakrishnan said...

//பூச்சாண்டியார் said...
மதனுக்கு எனது கண்டனங்கள்..

பாவம் அவரும் என்ன பண்ணுவாரு.. பொழப்பு ஆனந்த விகடன்ல ஓடனும் இல்ல. இது ஒரு வாடிக்கையாகவே போச்சு.. :(//

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்

T.V.Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
ஆனந்த விகடன் படிக்கிறதே மறந்து போச்சு இப்போ.//

தமிழ் படிக்கறதை மறந்துடப்போறீங்க குடுகுடுப்பை

Chandran said...

//Thamizhan- குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கும்,இரண்டு பெண்டாட்டிகள் உள்ள கடவுள் சிலைகளுக்கும் பதில் சொல்லி முடிய வில்லை!//
நல்லாதான் குழந்தைகளிடம் மாட்டிகொண்டீர்கள்.

Madhusudhanan Ramanujam said...

//ஐஸ் மலை மீது புலி,சிறுத்தை எதுவும் வாழ வாய்ப்பு இல்லை.//

இது தவறான ஒன்று. புலி சிறுத்தை ஆகிய இரண்டுமே பனி படர்ந்த மலைகளில் வாழ்ந்து வருகின்றன என்பதே நிஜம். சைபீரியாவின் பனி அடர்ந்த மலைச் சிகரங்களில் வெள்ளை நிறம் கொண்ட புலிகள் உண்டு. நம் இமயமலையில் ஸ்னோ லெப்பர்ட் எனப்படும் சிறுத்தைகளும் உண்டு.

rapp said...

:):):)

T.V.Radhakrishnan said...

////Chandran said...
//Thamizhan- குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கும்,இரண்டு பெண்டாட்டிகள் உள்ள கடவுள் சிலைகளுக்கும் பதில் சொல்லி முடிய வில்லை!//
நல்லாதான் குழந்தைகளிடம் மாட்டிகொண்டீர்கள்.////

:-)))))))

T.V.Radhakrishnan said...

//Madhusudhanan Ramanujam said...
//ஐஸ் மலை மீது புலி,சிறுத்தை எதுவும் வாழ வாய்ப்பு இல்லை.//

இது தவறான ஒன்று. புலி சிறுத்தை ஆகிய இரண்டுமே பனி படர்ந்த மலைகளில் வாழ்ந்து வருகின்றன என்பதே நிஜம். சைபீரியாவின் பனி அடர்ந்த மலைச் சிகரங்களில் வெள்ளை நிறம் கொண்ட புலிகள் உண்டு. நம் இமயமலையில் ஸ்னோ லெப்பர்ட் எனப்படும் சிறுத்தைகளும் உண்டு.//

unmai வருகைக்கு நன்றி

T.V.Radhakrishnan said...

// rapp said...
:):):)//


:-)):-));-))