அன்றும்..இன்றும்..என்றும்..மறக்கமுடியாத தமிழ் நகைச்சுவை சித்திரம் 'காதலிக்க நேரமில்லை'
கொடுத்த ஸ்ரீதர் மரணச்செய்தி..எல்லா வயதினரையும் துயரடையச் செய்திருக்கிறது.
முதன் முதல்..தனது 'ரத்தபாசம்' நாடகத்தை T.K.சண்முகத்திடம் எடுத்துப்போனார்.அதைப்படித்த சண்முகம்..அதை நாடகமாக நடித்ததுடன்..திரைப்படமாகவும் எடுத்தார்.அப்போது ஆரம்பித்த ஸ்ரீதரின் முன்னேற்றம்...கடைசிவரை நின்றது.
இவரைப்போல..இன்றும் நினைவில் நிற்கும் படங்களை வேறு இயக்குநர்கள் யாராவது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..
எதிபாராதது இவர் கதை வசனம்..காதலித்த பெண்ணே அம்மாவாகிறார்..(இதன் தாக்கம்தான் பாலச்சந்தருக்கு மூன்றுமுடிச்சு கொடுத்திருக்க வேண்டும்).திரை உலகில் திருப்பம் ஏற்படுத்திய படங்களில் ஒன்று..
அவர் கதை..வசனத்தில்.. வந்த படங்கள்..
புனர்ஜென்மம்,(கதை-வசனம் மட்டும்)
அமரதீபம்(கதை-வசனம் மட்டும்)
மீண்ட சொர்கம்(கதை-வசனம் மட்டும்)
கல்யாணபரிசு
காதலிக்க நேரமில்லை
நெஞ்சில் ஓர் ஆலயம்,காதலிக்க நேரமில்லை
சுமைதாங்கி,கலைக்கோயில் ,வெண்ணிற ஆடை
நெஞ்சிருக்கும் வரை,நெஞ்சம் மறப்பதில்லை
சிவந்த மண்
அவளுக்கென்று ஒரு மனம்
தேன்நிலவு
இளமை ஊஞ்சலாடுகிறது
துடிக்கும் கரங்கள்
தந்துவிட்டேன் என்னை
ஊட்டிவரை உறவு
உரிமைக்குரல்
மீனவநண்பன்
தவிர..நெஞ்சில் ஓர் ஆலயம்,கல்யாணபரிசு,சிவந்தமண்,காதலிக்க நேரமில்லை இந்தியில் வந்துல்ள படங்கள்.
தற்சமயம் எனக்கு ஞாபகம் வந்த படங்கள் இவை..இதுபோல வேறுஇயக்குநர் படங்கள் ஞாபகம் இருக்குமா?தெரியவில்லை.
கடைசிவரை..திரும்ப வந்து படம் கொடுப்பேன் என்று சொல்லிவந்தார்..
பல நடிகர்களை அறிமுகம் செய்தவர்.
சிலரது பெருமை ..வாழும்போது தெரிவதில்லை..அதில் ஸ்ரீதரும் ஒருவர்.
தேசிய அளவில் அங்கீகாரம் ஏற்படுத்திக்கொள்ள தெரியா இயக்குநர்.
பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டதுபோல இவரது சில முக்கிய படங்கள் அரசுடமை ஆக்கப்படவேண்டும்.
அரசு செய்யுமா?
17 comments:
பட்டியலில் போலிஸ்காரன் மகள்..கொடிமலர் படங்கள் விட்டுப்போய்விட்டன.
ஒரு நல்ல கலைஞரை தமிழ் திரை உலகம் இழந்து விட்டது.
:-((
வருந்துகிறேன்
நெஞ்சம் மறப்பதில்லை :(
//நசரேயன் said...
ஒரு நல்ல கலைஞரை தமிழ் திரை உலகம் இழந்து விட்டது.//
:-((((
// முரளிகண்ணன் said...
:-((
வருந்துகிறேன்//
-((((
//நல்லதந்தி said...
நெஞ்சம் மறப்பதில்லை :(//
பட்டியலில் சேர்த்துவிட்டேன்..நன்றி..மேலும் சில படங்களும் விட்டுப்போயிருக்கக்கூடும்.தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
//நசரேயன் said...
ஒரு நல்ல கலைஞரை தமிழ் திரை உலகம் இழந்து விட்டது.//
ஆம் நசரேயன்
நீங்க கூப்பிட்ட தொடருக்கு நான் பதிவு எழுதி இருக்கேன் சார். அதுவும் புது ப்ளாக்ல. படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க.
விடிவெள்ளி...
உத்தமபுத்திரன்(கதை..வசனம்)
இவை விட்டுப்போயுள்ளன
நெஞ்சில் ஓர் ஆலயம் -- Fantastic movie. Great director!
அன்றைய மணிரத்தினம்!
அண்மையில் கூட தான் மிக விரைவில் நலம்பெற்று வந்து ஒரு படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார்....
அருமையான இயக்குனர், இவரது படங்களில் வரும் பாடல்கள் எல்லம் காலத்தை கடந்தவை
// SurveySan said...
நெஞ்சில் ஓர் ஆலயம் -- Fantastic movie. Great director!
அன்றைய மணிரத்தினம்!//
அன்றைய மணிரத்னம்னு சொல்றதைவிட மணிரத்னத்தை இன்றைய ஸ்ரீதர் எனலாம்..
முதல்முறையாக வருகை புரிந்தமைக்கு நன்றி சர்வேசன்
//அருண்மொழிவர்மன் said...
அண்மையில் கூட தான் மிக விரைவில் நலம்பெற்று வந்து ஒரு படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார்....//
:-(((((
விடுபட்ட வேறு படங்கள்
தென்றலே என்னைத்தொடு,ஒரு ஓடை நதியாகிறது,அழகே உன்னை ஆராதிக்கிறேன்
அவரும் கிளம்பிட்டாரா.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஊட்டி வரை உறவோ, காதலிக்க நேரமில்லையோ, எதிர்பாராதது,
நெஞ்சினில் புகுந்த போலீஸ்காரன் மகள், நெஞ்சில் ஒர் ஆலயம்.
அவருக்கு நோய் வந்தே இருக்கக் கூடாது:(((((
///வல்லிசிம்ஹன் said...
அவரும் கிளம்பிட்டாரா.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஊட்டி வரை உறவோ, காதலிக்க நேரமில்லையோ, எதிர்பாராதது,
நெஞ்சினில் புகுந்த போலீஸ்காரன் மகள், நெஞ்சில் ஒர் ஆலயம்.
அவருக்கு நோய் வந்தே இருக்கக் கூடாது:(((((///
:-((((((
Post a Comment