Wednesday, October 8, 2008

M.G.R., ன் உண்மையான வாரிசு யார்?

M.G.R.,
தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான் இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட்ட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.து.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..
பாக்யராஜ்..தான் தான் அவர் வாரிசு என ஒரு கட்சி ஆரம்பித்தார்..நிலை?
டி.ராஜேந்திரன் கட்சி பெயரளவில் இருக்கிறது
சரத்குமார் கட்சி
விஜய்காந்த் கட்சி
கார்த்திக் கட்சி
ரஜினியை ரசிகர்கள் எதிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்க்கும் ஆசை வந்திருக்கிறது.
இவர்களெல்லாம்..நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி அவர்களே ஒரு கட்சி ஆரம்பித்து தோல்வி கண்டதை மறந்துவிடக்கூடாது.

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...என் முன் பதிவு ஒன்றை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

எம்.ஜி.ஆர். ..உண்மையான வாரிசு யார்?

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருனவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.எம்.ஜி.ஆர்.வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் இவர்..மதுராந்தகம் அருகே 403 ஏக்கரில் பண்ணை வீடு வைத்துள்ளார்.(நில உச்ச வரம்பு சட்டப்படி ஒருவர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கூடாது)அதில் 30ஏக்கர் புறம்போக்கு.இதை அரசு கையகப்படுத்தியுள்ளது இப்போது.இப்படிப்பட்டவர் அவர் வாரிசா?
சரத்குமார்- சமீபத்தில் கட்சி ஆரம்பித்த இவர் தன்னை எம்.ஜி.ஆர். என நினைக்கிறார்.இது வேண்டுமானால் அரசியல் கவர்ச்சியை உண்டாக்கலாம்.ஆனால் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஜெயலலிதா-எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.விஜய்காந்த் தான் வாரிசு என்றதும் தான் ஜெ விழித்துக்கொண்டார்.உடன் ராமாபுரம் சென்றார்..தான் தான் வாரிசு என்றார்.
ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

17 comments:

குடுகுடுப்பை said...

me the first ராப் தான் அடுத்த தமிழக முதல்வர். அவர்தான் எல்லா இடத்திலும் first.

நசரேயன் said...

சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் ஐயா..
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் மாதிரி கட்சி ஆரமிச்ச எல்லாரும் எம்.ஜி.ஆர் வாரிசுன்னு தான் சொல்லுறாங்க. இது எங்க பொய் முடியுமோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

// rapp said...
me the first//

வருகைக்கு..அதுவும் முதல் வருகைக்கு நன்றி ராப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
me the first ராப் தான் அடுத்த தமிழக முதல்வர். அவர்தான் எல்லா இடத்திலும் first.//


செட்டியார் கடையிலே உப்பு இருக்கான்னா ,புளி இருக்குன்னு சொல்ற மாதிரி..பத்வை படிச்ச்ட்டு ராப்பை பாராட்டுறீங்க

கோவி.கண்ணன் said...

//மதுராந்தகம் அருகே 403 ஏக்கரில் பண்ணை வீடு வைத்துள்ளார்.(நில உச்ச வரம்பு சட்டப்படி ஒருவர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கூடாது)அதில் 30ஏக்கர் புறம்போக்கு.இதை அரசு கையகப்படுத்தியுள்ளது இப்போது.இப்படிப்பட்டவர் அவர் வாரிசா?//

தமிழகத்தில் இருந்து கொண்டு இப்படி எழுதுறிங்களே ஆட்டோ, ஷேர் ஆட்டோவெல்லாம் ஸ்ட்ரைக்கில் இருக்கா ? இப்பதான் வடிவேலு அடிபட்டு இருக்கார். எதுக்கும் பத்திரமாக இருங்க, பேசாமல் சிங்கைக்கு எங்க வீட்டுக்கு வந்துடுங்க.

:)))

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு டிவிஆர் சார். பொதுவா அரசியல் விசயங்கள்னா நமக்கு கொஞ்சம் பயம் அதுதான். அதோட நானே வருங்கால முதல்வர் ஆசையோட இருக்கேன், அதுனால் எல்லோர் ஆதரவும் எனக்கு தேவை உங்கள் ஆதரவு உட்பட , ஒரு காலத்தில் நானே எம்ஜியாரின் அரசியல் வாரிசு என அறிவிப்பேன் என்ன அய்யா புரிஞ்சுதா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
நல்லா இருக்கு டிவிஆர் சார். பொதுவா அரசியல் விசயங்கள்னா நமக்கு கொஞ்சம் பயம் அதுதான். அதோட நானே வருங்கால முதல்வர் ஆசையோட இருக்கேன், அதுனால் எல்லோர் ஆதரவும் எனக்கு தேவை உங்கள் ஆதரவு உட்பட , ஒரு காலத்தில் நானே எம்ஜியாரின் அரசியல் வாரிசு என அறிவிப்பேன் என்ன அய்யா புரிஞ்சுதா//


அடப்பாவி குடுகுடுப்பை..ராப் தான் முதல்வர்னு சொல்லிட்டு..உடனேயே முடிவை மாத்திக்கிட்டு நான் முதல்வர் என்கிறீர்களே..ஒருவேளை நாளைக்கு இதுதான் நடக்கப்போகுதுன்னு சூட்சகமா ஜக்கம்மா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் ஐயா..
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் மாதிரி கட்சி ஆரமிச்ச எல்லாரும் எம்.ஜி.ஆர் வாரிசுன்னு தான் சொல்லுறாங்க. இது எங்க பொய் முடியுமோ//

புதுசா ஒருத்தர் நான்தான் எம்.ஜி.ஆர்.வாரிசுன்னு வரப்போறார் பாருங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி.கண்ணன் said...
//மதுராந்தகம் அருகே 403 ஏக்கரில் பண்ணை வீடு வைத்துள்ளார்.(நில உச்ச வரம்பு சட்டப்படி ஒருவர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கூடாது)அதில் 30ஏக்கர் புறம்போக்கு.இதை அரசு கையகப்படுத்தியுள்ளது இப்போது.இப்படிப்பட்டவர் அவர் வாரிசா?//

தமிழகத்தில் இருந்து கொண்டு இப்படி எழுதுறிங்களே ஆட்டோ, ஷேர் ஆட்டோவெல்லாம் ஸ்ட்ரைக்கில் இருக்கா ? இப்பதான் வடிவேலு அடிபட்டு இருக்கார். எதுக்கும் பத்திரமாக இருங்க, பேசாமல் சிங்கைக்கு எங்க வீட்டுக்கு வந்துடுங்க.

:)))////


கோவி..அப்படி ஏதாவது நடந்தா...நான் தேர்தலில் போட்டியிடுவேன்.சுயேச்சையாக....அனைத்துக் கட்சிகளின் ஆதரவை நாடுவேன்...
என்மீது அக்கறையுடன் சிங்கை வரச்சொன்னதற்கு நன்றி..கண்டிப்பாக ஒருநால் வந்து விடப்போகிறேன் பாருங்கள்.
நான் எப்ப வருவேன்..எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது!!!!!

ரங்குடு said...

எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக வந்தது
தமிழகத்தின் துரதிருஷ்டம். இதில் அவரது பெயரைச் சொல்லி
நாடாண்ட ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகத்தின்
போதாத காலம். இதற்கும் மேலாக வாரிசுகள் என்று வந்து
இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ?

rapp said...

அப்போ நானெல்லாம் முதல்வராகுறதுன்னா, யாரோட வாரிசுன்னு சொல்றது? வர வர நாட்ல இதுக்குன்னு இல்லாம எல்லாத்துக்கும் தட்டுப்பாடா ஆகிடுச்சி:):):)

சரவணகுமரன் said...

வரலாறுடன் கூடிய கட்டுரை அருமை.

MSK / Saravana said...

//யாருமே இல்லை..
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.//

ரொம்ப சரி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//rangudu said...
எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக வந்தது
தமிழகத்தின் துரதிருஷ்டம். இதில் அவரது பெயரைச் சொல்லி
நாடாண்ட ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகத்தின்
போதாத காலம். இதற்கும் மேலாக வாரிசுகள் என்று வந்து
இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ?//


வருகைக்கும்..கருத்தை பரிமாறிக்கொண்டதற்கும் நன்றி ரங்குடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// rapp said...
அப்போ நானெல்லாம் முதல்வராகுறதுன்னா, யாரோட வாரிசுன்னு சொல்றது? வர வர நாட்ல இதுக்குன்னு இல்லாம எல்லாத்துக்கும் தட்டுப்பாடா ஆகிடுச்சி:):):)//

NDTV ந் வாரிசுன்னு சொல்லிக்கொள்ளுங்கள் ராப்
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// சரவணகுமரன் said...
வரலாறுடன் கூடிய கட்டுரை அருமை.//

வருகைக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றி சரவணகுமரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Saravana Kumar MSK said...
//யாருமே இல்லை..
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.//

ரொம்ப சரி..//

நன்றி சரவணன்