Thursday, October 16, 2008

சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி?

பதிவர்கள் பதிவிடும் போதே ..அப்பதிவு சூடான இடுகையில் வர..என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிப்பதுண்டு.பதிவில் எழுதும் விஷயங்கள் பற்றி கவலைப் படுவதில்லை.மலையாள படம் தமிழில் டப் செய்யும் போது..வைக்கப்படும் தலைப்புகள் போல்..'அவளுடைய இரவுகள்''மாமனாரின் மன்மத லீலைகள்' இப்படி வைக்கலாம்.தமிழ்மணம் அனுமதிக்குமா தெரியவில்லை.ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.
எனது இடுகைகள் சில சூடான இடுகையில் வருவதுண்டு..ஆனால் அப்படி வர..இடுகை இட்டு சில மணி நேரங்கள் ஆகின்றன.ஆனால்..சில நட்சத்திர பதிவர்கள்..என்ன எழுதினாலும்..அடுத்த பத்தாவது நிமிடம் ..சூடாகி விடுகிறது.
சூடான இடுகையில் வர பதிவர்களுக்கு ஏன் ஆசை?
இப்பொழுதெல்லாம்..நாளொன்றுக்கு சராசரி 270 இடுகைகள்
இடப்படுகின்றன.நம் பதிவு வந்த அரை மணி நேரத்தில் முகப்பில் இருப்பதில்லை.யாராவது பின்னூட்டமிட்டால்..வலப்பக்கத்தில் சில நேரம் இருக்கும்..இல்லையேல் அதுவும் இல்லை.அதுவே ..பின்னூட்டம் இல்லையென்றாலும்..அதிகம் பேர் பார்த்தால்..அது சூடான இடுகை.சிறிது நேரம் பதிவு இருந்துக் கொண்டே இருக்கும்.அந்த ஆசை தான் ஒவ்வொரு பதிவரையும் அதற்கு இழுக்கிறது.
அடுத்தது..பதிவிடும் நேரம் மிக முக்கியம்.நமது மென் பொருள் வல்லுநர்களுக்கு அது அலுவலக நேரமாய் இருக்க வேண்டும்.இவர்கள்தான் பதிவுலக அச்சாணிகள்.இவர்கள் படிக்காவிட்டால்..எந்த பதிவாய் இருந்தாலும் கோவிந்தா தான்.
சிலருக்கு..தொடர்ந்து பழைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இருந்துக் கொண்டேயிருக்கின்றன.அவை..நூறு நாட்கள் 3 காட்சிகளுடன் ஓடும் படங்களாயில்லாமல்...1000 நாட்கள் பகல் காட்சி மட்டுமே ஓடும் படங்கள் போல.
என் பதிவுகள் எல்லாம் மினிமம் காரண்டி பதிவுகள் ..
இப்படி ஒரு பதிவு போட்டு...சூடான இடுக்கைக்கான தலைப்பும் வைத்து விட்டேன்.
பார்ப்போம் இது சூடான இடுகையில் வருகின்றதா என்று.

17 comments:

குடுகுடுப்பை said...

வந்தே ஆகனும், இல்லாட்டி விடுங்க நான் சூடா ஒரு டீ போட்டு தரேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
வந்தே ஆகனும், இல்லாட்டி விடுங்க நான் சூடா ஒரு டீ போட்டு தரேன்.//

;-))))))))

rapp said...

ஆமாங்க சார், இதே மாதிரி நெறயப் பேர் ****** கதைகள் பிரச்சினயப்பவே சொன்னாங்க, ஹி ஹி ஆனா நான் சூடான இடுகைக்கு ஆசைப்படரதில்லைப்பா(ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்குது:):):))

நசரேயன் said...

இது மட்டும் சூடான இடுகைக்கு வரலைனா, நான் உண்ணா விரத போராட்டம்,கடை அடைப்பு எல்லாம் அறிவிப்பேன் :):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
இது மட்டும் சூடான இடுகைக்கு வரலைனா, நான் உண்ணா விரத போராட்டம்,கடை அடைப்பு எல்லாம் அறிவிப்பேன் :):)//

என் முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு நசரேயன்

Subash said...

ஃஃவந்தே ஆகனும், இல்லாட்டி விடுங்க நான் சூடா ஒரு டீ போட்டு தரேன்.ஃஃ

ஹிஹிஹிஹிஹி

சூடான இடுகையில் வர வா்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூடான இடுகையிலே வரணும்னு தானே இந்த தலைப்பைப் போட்டேன்..சுபாஷ்..அப்பறம் வரலேன்னா எப்படி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//rapp said(ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்குது:):):))//

இப்படி சொல்லிக்கிட்டே சூடான இடுகையிலே வந்துடறீங்க

கோவி.கண்ணன் said...

பலரகசியங்களை போட்டு உடைக்கிறிங்க.

போச்சு இனி பலமான போட்டிதான் !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
பலரகசியங்களை போட்டு உடைக்கிறிங்க.

போச்சு இனி பலமான போட்டிதான் !//


போட்டி பலமாயிருந்து அதிலே ஜெயிக்கிறதுதானே.சிறப்பு..

நவநீதன் said...

பத்து நாளைக்கு ஒரு முறை இதே அர்த்தம் வர்ற தலைப்புல ஒரு பதிவு வருது...
அது சரி எல்லோருக்கும் சூடான இடுகையில இடம் பிடிக்க ஆசைதான் போல இருக்கு.

நானும் முடிவு பண்ணிட்டேன் இதே தலைப்புல பதிவு எழுத....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நவநீதன்

குடுகுடுப்பை said...

என்னோட டியூசன் டீச்சர் சூடான பதிவுல வந்துருச்சு. இன்னக்கி சூடா காப்பிதான் அதுக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
என்னோட டியூசன் டீச்சர் சூடான பதிவுல வந்துருச்சு. இன்னக்கி சூடா காப்பிதான் அதுக்கு//
(ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்குது:):):))

அத்திரி said...

//ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.//

உண்மையைச் சொல்லி பல பதிவர்களின் வயித்துல புளிய கரைச்சுட்டீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அத்திரி said...
//ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.//

உண்மையைச் சொல்லி பல பதிவர்களின் வயித்துல புளிய கரைச்சுட்டீங்க.///
வருகைக்கு நன்றி