சில சக பதிவர்களும், என் நண்பர்களும்.சொல்கிறார்கள்..
மதுவிற்கு அடிமை ஆவது போல, புகை பிடிப்பதற்கு அடிமை ஆவது போலத்தான்..இந்த பதிவும்.,இதற்கு அடிமை ஆகி விட்டால் கணிணி விட்டு எழுந்திருக்க முடியாது என்று.
அது தவறு..மன உறுதி இருந்தால், எந்த பழக்கத்திலிருந்தும், வேண்டாம் என்னும் போது வெளியே வந்து விடலாம்.
இன்று காலை எழுந்ததும்..என் வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டேன்..நான் இன்னிக்கு முழுதும் கணிணி பக்கமே போகப்போவதில்லை.உனக்கு வேண்டுமானால் சமையல் குறிப்பு போட்டுக்கொள் என்று.என்னை அவங்களும் வினோதமாக பார்த்துவிட்டு..அன்றாட வேலைக்கு அடுக்களைக்குள் நுழைஞ்சிட்டாங்க.
உட்கார்ந்து..ஒரு புத்தகத்தை கையில் எடுத்த நான்...ஒரு பக்கம் படித்திருப்பேன்..திடீரென..பதிவுதானே போடமாட்டோம் என்றோம்..நேற்று போட்ட பதிவிற்கு ஏதேனும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்ப்போம்..என..அடுக்களைக்குள் ஒரு பார்வையை வீசி விட்டு கணிணி முன் அமர்ந்து அதை இயக்கி, தமிழ்மணத்திற்கு வந்தேன்.
நாம என்ன கோவியா,பரிசலா,தாமிராவா இல்லை வேலனா ..பின்னூட்டம் வந்து குவிய..எப்பவும் போல நசரேயனும்,குடுகுடுப்பையும் பின்னூட்டம் போட்டிருந்தனர்.
"என்ன ஆச்சு..உங்க தீர்மானம்" உள்ளிருந்து குரல்.
பின்னூட்டம் பார்க்கிறேன்...என்றவன் கை கீ போர்டில் தாளம் போட்டது..
பிறகு...இன்று மட்டும் பதிவு போட்டிடுவோம்...எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக்கூடாது என்று தீர்மானித்தேன்..
காலையிலிருந்து இதே சிந்தனையில் இருந்து விட்டதால் பதிவிட மேட்டர் யோசனை செய்யவில்லை (ஆமாம்..இவர் பதிவிலே எல்லாம் ரொம்ப மேட்டர் இருக்கு...அப்படின்னு ஏன் முணுமுணுக்கிறீங்க)
சரி இதையே ஒரு பதிவா இன்னிக்கு போட்டுடலாம்..நாளைக்கு பார்த்துக்கலாம்..
எனக்கு மன உறுதி அதிகம் ..ஆமாம் சொல்லிட்டேன்.
தனக்குத்தானே என்ன பேசிக்கறீங்க..அடுக்களையிலிருந்து குரல் கேட்கிறது.
23 comments:
எழுத தெரிஞ்சவங்களுக்கு இது ஒரு பிரச்சனை போல இருக்கு !
யப்பா நம்ம பேரும் பதிவுல வந்துருச்சு.
ஆனாலும் தமிழ்மணம் ஒரு மாதிரி போதைதான்.
//(ஆமாம்..இவர் பதிவிலே எல்லாம் ரொம்ப மேட்டர் இருக்கு...அப்படின்னு ஏன் முணுமுணுக்கிறீங்க)//
நீங்களும் சுப்பையா ஐயாவும் சளைக்காமல் ஆடுற ஆட்டத்தில், நாங்களெல்லாம் எம்மாத்திரம்.
கலக்குறிங்க ஐயா !
எழுத்துப் போதை - தீரவே தீராதுங்க.
/*
எழுத்துப் போதை - தீரவே தீராதுங்க.
*/
உண்மைதான்
பின்னூட்ட போதைத்தனம்!
:))))
/
நாம என்ன கோவியா,பரிசலா,தாமிராவா இல்லை வேலனா ..பின்னூட்டம் வந்து குவிய..எப்பவும் போல நசரேயனும்,குடுகுடுப்பையும் பின்னூட்டம் போட்டிருந்தனர்.
/
என் பின்னூட்டம் எங்கே!?!?!?!?!?
வரவில்லையா?????
//எனக்கு மன உறுதி அதிகம் ..ஆமாம் சொல்லிட்டேன்.//
ஆமாமா ....மன உறுதி கொஞ்சம் அதிகம்தான்..ஹஹஹஹா...
அன்புடன் அருணா
//குடுகுடுப்பை said...
ஆனாலும் தமிழ்மணம் ஒரு மாதிரி போதைதான்.
//
ஆமாமா, நடுநிசியில பதிவு போடுறதிலிருந்தே தெரியுதே?!
pinnoottam #12..
Aha..
This blog does not allow anonymous comments.
பொது சேவை விளம்பரம் தருவது Google
This blog does not allow anonymous comments.
very good taste for you.
I like it.
///மணிகண்டன் said...
எழுத தெரிஞ்சவங்களுக்கு இது ஒரு பிரச்சனை போல இருக்கு !///
மணி நீங்க சொல்றது உண்மைதான்...அதனால எனக்கு பிரச்னை இல்லை!!!!!!
வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி கோவி
// ILA said...
எழுத்துப் போதை - தீரவே தீராதுங்க.//
உண்மைதான் இளா
///குடுகுடுப்பை said...
ஆனாலும் தமிழ்மணம் ஒரு மாதிரி போதைதான்.///
நீங்க சொல்றது உண்மைதான்...
// நசரேயன் said...
/*
எழுத்துப் போதை - தீரவே தீராதுங்க.
*/
உண்மைதான்//
எழுத தெரிஞ்சவங்களுக்கு
///மங்களூர் சிவா said...
பின்னூட்ட போதைத்தனம்!
:))))///
:-))))))
////மங்களூர் சிவா said...
/
நாம என்ன கோவியா,பரிசலா,தாமிராவா இல்லை வேலனா ..பின்னூட்டம் வந்து குவிய..எப்பவும் போல நசரேயனும்,குடுகுடுப்பையும் பின்னூட்டம் போட்டிருந்தனர்.
/
என் பின்னூட்டம் எங்கே!?!?!?!?!?
வரவில்லையா?????////
சிவா...நீங்க நம்ம வீட்ல ஒருத்தர்..உங்களைப்பற்றி எழுதினா...நம்மளை நாமே புகழ்ந்துக் கொள்வது போல ஆகி விடுமே!!!
///அன்புடன் அருணா said...
//எனக்கு மன உறுதி அதிகம் ..ஆமாம் சொல்லிட்டேன்.//
ஆமாமா ....மன உறுதி கொஞ்சம் அதிகம்தான்..ஹஹஹஹா...
அன்புடன் அருணா///
வருகைக்கு நன்றி அருணா...இப்படி அடிக்கடி வந்து சிரிச்சுட்டுப்போங்க..!!!
ஹஹஹஹா...
/// பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
ஆனாலும் தமிழ்மணம் ஒரு மாதிரி போதைதான்.
//
ஆமாமா, நடுநிசியில பதிவு போடுறதிலிருந்தே தெரியுதே?!///
வருகைக்கு நன்றிபழமைபேசி
///தமிழ்நெஞ்சம் said...
very good taste for you.
I like it.///
வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்
///தமிழ்நெஞ்சம் said...
pinnoottam #12..
Aha..
This blog does not allow anonymous comments.
பொது சேவை விளம்பரம் தருவது Google
This blog does not allow anonymous comments.///
:-)))))
Post a Comment