கலைஞருடன் தில்லி சென்ற அனைத்துகட்சித் தலைவர்களும் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி பிரதமரிடம் பேசினர்.வழக்கம் போல விளக்கெண்ணெய் தரத்துடன்..நாத்தழு தழுக்க பிரதமர் அனைத்தையும் கேட்டார்.பின் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.இது செய்தி..இலங்கையில்,ப்ரனாப் ,ராஜபக்க்ஷே சந்திப்பு எப்படி என நமது சரடு நிருபர்.
ராஜ- வாங்க பிரனாப்..நாம இப்பத்தானே 15 நாட்களுக்கு முன் இந்தியாவில் சந்தித்தோம்.
பிர-ஆமாம்..ஆனாலும்..கலைஞர் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்..அவருக்காகத்தான் பிரதமர் உங்களிடம் என்னை இப்போது அனுப்பியிருக்கிறார்.
ராஜ_மும்பையில் குண்டுவெடிப்பு...(என இழுக்க)
பிர-ஆம்..அப்பாவி மக்கள் 197 பேர் மரணம்..500க்கும் மேற்பட்டோர் காயம்
ராஜ-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி..
பிர_ஆமாம்..ஆமாம்..உலநாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தூள்ளார்களே..
ராஜ-இன்னொரு நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் உங்கள் நாட்டில் புகுந்து அப்பாவி மண்ணின் மைந்தர்களை கொன்றிருக்கிறார்களே..
பிர-ஆமாம்..அது போகட்டும்..நான் வந்த வேலை..
ராஜ-தெரியும்..முதலில் வேற்று நாட்டான் உங்கள் நாட்டுக்குள் வந்து..உங்கள் மக்களை கொன்றிருக்கிறான்.அதைப்பற்றி முதலில் கவலைப் படுங்கள்.விடுத்து எங்கள் நாட்டுக்குள் தமிழர்
அழிவது பற்றி..பிறகு பேசலாம்
பிர-நீங்கள் சொல்வதும் சரி..ஆனால் பிரதமரிடம் என்ன சொல்ல..
ராஜ-போர் நிறுத்தம் இல்லை என்று சொல்லுங்கள்
பிர-கலைஞர் கேட்டால்....
ராஜ-40வருட போராட்டம் 14 நாட்களில் முடியுமா? என்று சொல்லிவிடுங்கள்.
பிர-அப்போது நான் வருகிறேன்..நம் சந்திப்பு இவ்வளவு வெற்றி அடையும் என நான் எதிர்பார்க்கவில்லை..
(பிரனாப் விடைபெறுகிறார்0
8 comments:
என்னதான் தீர்வு இதுக்கு. இந்தியா மாதிரியான ஒரு தீர்வு கூட கிடையாதா?
//என்னதான் தீர்வு இதுக்கு. //
வெளக்கெண்ணைய் தனமா இருக்கும். வேற எப்படி இருக்கும்?
//என்னதான் தீர்வு இதுக்கு.//
:-(((((((((
/// ILA said...
//என்னதான் தீர்வு இதுக்கு. //
வெளக்கெண்ணைய் தனமா இருக்கும். வேற எப்படி இருக்கும்?///
:-(((((((
நடந்தாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை
//நசரேயன் said...
நடந்தாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை//
:-))))
ம்.. ம்... சுண்டைக்காய் இலங்கைக்கு கட்டளையிட வல்லரசாகப் போகிற இந்தியாவிற்கு தில் இல்லை எனச் சொல்லாமல் சொல்கிறீர்கள், வாழ்க பாரதம்.
வருகைக்கு நன்றி Sinnathamby
Post a Comment