உணவு விடுதி ஒன்றில்
நான் வெஜிடேரியன்
என்றான் ஒருவன் - மற்றவனோ
நான்வெஜிடேரியன் என்றான்
நான் வெஜிடேரியன் என்பவன்
நானிலத்திலும் இல்லை - எல்லோரும்
நான்வெஜிடேரியனே
விடுதிக்காரன் மேலும் உரைக்கிறான்
அவணியில் விழுந்ததுமே
அன்னை உதிரத்தால் பால் - பின்
ஆவின் உதிரப்பால்
உதிரத்தை சுவைத்தவன்
உண்மையில் நான்வெஜிடேரியன் தானே
வாய் மூடி மௌனியானான்
நான் வெஜிடேரியன் உரைத்தவன்
ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்
நான்வெஜிடேரியன்.
14 comments:
கறி சோறு சாப்பிடவா வேண்டாமா?
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் ஐயா... கலக்குங்க...
நல்ல உரைநடைக்கவிதை.
பொருளில் தவறு உள்ளது !
ஐயா, நாங்களெல்லாம் எல்லாத்தெய்யும் வெச்சு சாப்புடுவோம். நாங்க வெச்சு தாவே
//நசரேயன் said...
கறி சோறு சாப்பிடவா வேண்டாமா?//
இதில் சொல்வதற்கு ஏதுமில்லை..நசரேயன்...அவரவர் விருப்பம் அவ்வளவுதான்
//ச்சின்னப் பையன் said...
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் ஐயா... கலக்குங்க...//
லேட்டா வந்தாலும்..லேட்டஸ்டா வந்துட்டீங்க..நன்றி சத்யா..
///குடுகுடுப்பை said...
நல்ல உரைநடைக்கவிதை.///
நன்றி
//மணிகண்டன் said...
பொருளில் தவறு உள்ளது !//
நக்கீரரே! கவிதை..விடுதிக்காரன் பார்வையில்
///SUREஷ் said...
ஐயா, நாங்களெல்லாம் எல்லாத்தெய்யும் வெச்சு சாப்புடுவோம். நாங்க வெச்சு தாவே///
நாங்களும் வைச்சுதான் சாப்பிடுவோம்...
சுரேஷ்..
super:):):)
நன்றி rapp
எல்லாம் முறைப்படி கிடைத்தால் தவறு அல்ல :)
பால் கரக்கும் பொழுதி ஆவினத்திற்கு எந்த வலியும் இல்லை. அதை அதனால் வைதிருக்கவும் முடியாது.
கருவில் வளருவது உதிரத்தினால் தான், எனவே அதன் தொடர்பில் குழந்தைக்கு முதலுணவாக பால் ஏற்பாடு இயற்கையாக அமைந்த ஒன்று.
பாலையும் இரத்தத்தையும் என்னால் ஒன்றாக நினைக்க முடியவில்லை. இரண்டிற்கும் மூலப் பொருள் ஒன்று என்றாலும், இயற்பியல் கூறுகள் வேறு வேறு.
பால் சாப்பிடுகிறவர்கள் நான் வெஜ்ஜிடேரியன் என்பதை ஏற்க முடியாது. நான் வெஜ்ஜிடேரியன் எல்லோரும் இரத்தத்தை அப்படியே உறிஞ்சுகிறார்களா என்ன ?
கவிதை..விடுதிக்காரன் பார்வையில்
KOVI...
Post a Comment