முறுக்குகளில் கை முறுக்கு தவிர..தேங்குழல்.முள்ளு முறுக்கு ஆகியவையும் முறுக்கு ஜாதியில் சேரும் (இதிலும் ஜாதியா)
நம் வாழ்வில் பல வேளைகளில் நம்முடன் பின்னி பிணைந்து விட்டது இது.
கல்யாணம் போன்ற விஷேசங்களில் சீர் வரிசையில் முறுக்குக்கு முதலிடம் உண்டு.
9 சுற்று முறுக்கு,7 சுற்று முறுக்கு,5 சுற்று முறுக்கு என கை முறுக்கில் மட்டும் பல வகை உண்டு.சுற்றுகள் அதிகமாக..அதிகமாக..முறுக்குகளுக்கு முறுக்கு அதிகமாகிவிடும்.கடையில் வாங்கும் முறுக்கு இரண்டு சுற்று என்பார்கள்..ஆனால்..ஒன்றரை தான் இருக்கும்.
முறுக்குக்கு பந்தா என்றும் பெயர் உண்டு.
மாப்பிள்ளை முறுக்குப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.மாப்பிள்ளை மாமனார் வீட்டில் காட்டும் பந்தாவிற்கு அந்த பெயர்.ஆனால் இப்ப எல்லாம் மாப்பிள்ளை முறுக்குப் போய் மணப்பெண் முறுக்கு வந்து விட்டது.
நான் படிக்கும் போது முதல் ராங்க் (நம்புங்க வாங்கியிருக்கேன்) வாங்கும் போது..சக மாணவர்களுடன் முறுக்கிக்கொண்டது உண்டு..அதே சமயம் ராங்க் இறங்கும் போது முதலில் வந்த மாணவன் காட்டும் முறுக்கிற்கு..எவ்வளவு அகம்பாவம் பார் அவனுக்கு என்றதுண்டு.
கலைஞர் கூட..வைகோ..தி.மு.க.விலிருந்து போய் ம.தி.மு.க.,ஆரம்பித்தபின்..தேற்தலில் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தபோது..வைகோவைப் பார்த்து..ரொம்ப முறுக்கிக்காதே என்றதுண்டு.
வீடுகட்டும் போது முறுக்கு ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்தப்படும்.
சரி..சரி..இந்த பதிவை படிச்சுட்டு,,ஏன் முறுக்கிக்கிட்டு போறீங்க..
என்ன இவன் கூட இப்படி கேட்கிறானே(ரே ன்னு மரியாதை குடுப்பீங்கன்னு தெரியும்) னு நினைக்கிறீங்களா?
என்ன பண்றது...வாயுள்ள பிள்ளைதானே பிழைச்சுக்கும்.

8 comments:
முறுக்குல இவ்வளவு முறுக்கு இருக்கா
நாங்க ஸ்டீல் பாடின்லாம் சொல்லமுடியாது போல.
முறுக்கு நறுக்குன்னு இருக்கு, சூடான முறுக்கு ஆகுதான்னு பார்ப்போம்
// நசரேயன் said...
முறுக்குல இவ்வளவு முறுக்கு இருக்கா//
நான் சொல்லியிருக்கிறது கொஞ்சம்...சொல்லாமல் விட்டது நிறைய...
// குடுகுடுப்பை said...
முறுக்கு நறுக்குன்னு இருக்கு, சூடான முறுக்கு ஆகுதான்னு பார்ப்போம்//
இப்பவெல்லாம் சொல்லமுடியலை..சூடாயிடும் நினைக்கிறது நமுத்துடுது.
முறுக்கு (பதிவு) ஒன்னைத் தேடிக்கிட்டு இணையத்துலே புகுந்து பார்க்கவந்த என்னை அந்த முறுக்கே அஞ்சரை வருசமாக் கட்டிப் போட்டுவச்சுருக்கு.
பதிவுகள் எழுது உங்களுக்கெல்லாம் ரம்பம் போடறேன்னு என்னைக் குத்தம் சொல்ல ஏலாது.
எல்லாப் புகழும் முறுக்குக்கே:-)))))
///துளசி கோபால் said...
முறுக்கு (பதிவு) ஒன்னைத் தேடிக்கிட்டு இணையத்துலே புகுந்து பார்க்கவந்த என்னை அந்த முறுக்கே அஞ்சரை வருசமாக் கட்டிப் போட்டுவச்சுருக்கு.
பதிவுகள் எழுது உங்களுக்கெல்லாம் ரம்பம் போடறேன்னு என்னைக் குத்தம் சொல்ல ஏலாது.
எல்லாப் புகழும் முறுக்குக்கே:-)))))////
varukaikku nanri thulasi amma
///குடுகுடுப்பை said...
நாங்க ஸ்டீல் பாடின்லாம் சொல்லமுடியாது போல.///
இப்படிச் சொல்லி பாடியை முறுக்கி காட்ட முடியாது
Post a Comment