Friday, December 19, 2008

கல்லூரி மாணவர் சங்கங்களில் அரசியல்...

அரசியல்...

இதில் ஈடுபட 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உரிமை உண்டு.

அதனால் தானோ என்னவோ ..இப்போழுதெல்லாம்..கல்லூரி மாணவர் யூனியன்,இலக்கிய மன்றம் ஆகியவற்றின் நிவாகக்குழு மாணவர்கள்..அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இப்படிப்பட்ட பழக்கம்..எப்போது ஏற்பட்டது..

திராவிட கட்சியினர் பேச்சில்..அப்போதைய என்னைப் போன்றோர் மயங்கியதுண்டு.அண்ணாவின் பேச்சும்,நெடுஞ்செழியன் பேச்சும்..பின்னர் கலைஞர் பேச்சும்..எங்களை கட்டிப் போட்டிருக்கின்றன.அவர்கள் பேச்சைக் கேட்டு அதே போல வீட்டில் வந்து பேசிப்பார்த்ததுண்டு.

ஆகவே..இலக்கிய மன்றங்களில் அவர்கள் பேச அழைக்கப்பட்டனர்.காளிமுத்து அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது அண்ணாவின் பேச்சைக் கேட்டு,மயங்கி தான் தி.மு.க.வில் சேர்ந்தார்.

மாணவர்களிடையே கட்சி புகுந்தது இப்படித்தான்.தி.மு.க.வளர்வதைப் பார்த்து..மற்ற கட்சிகள் விழித்துக்கொண்டு..தங்கள் கிளைகளை திறப்பது போல கல்லூரிகளில் அந்த அந்த கட்சி அணிகள் தோன்ற ஆரம்பித்தன.மாணவர் இடையே..பிளவும்,வன்முறையும்,அராஜகமும் மெல்ல..மெல்ல பரவ ஆரம்பித்தது..கட்சி வேர்கள் ஆழமாக கல்லுரிகளில் ஊடுருவல் ஆயிற்று.

இது தவறு என்று சொல்ல முடியாது..இன்னும் சொல்லப்போனால்..ஆரோக்யமானவை..ஆனால் எதுவரை..

ஒவ்வொரு பிரிவிற்கும்..தேர்தல் முடியும் வரை கட்சி பாகுபாடு..அவர்களிடையே இருக்கலாம்..அதற்குப் பிறகு அவர்கள்..மாணவ சமுதாயத்தினர்..வருங்காலத் தூண்கள்..என்ற எண்ணம் வர வேண்டும்...

இல்லையெனில்...சட்டக்கல்லூரி நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள்...கட்சி,ஜாதி என வேறு..வேறு பெயர்களில் கல்லூரிகளுக்குள் இருந்தே தீரும்.

4 comments:

நசரேயன் said...

உண்மை..உண்மை..உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உண்மை..உண்மை..உண்மை//

வருகை புரிந்தமைக்கு நன்றி நசரேயன்

காரூரன் said...

உண்மை தான். நான் படிக்கும் காலங்களிலும் இந்த நிலை இருந்திருக்கின்றது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கு நன்றி காரூரன்