முகலாய மன்னர் பாபர்..தன் மகன் ஹுமாயூன் உடல் நலம் குன்றி கிடந்த போது..என் உயிரை எடுத்துக் கொண்டு அவன் உயிரைத் தா என வேண்டியதாக படித்ததுண்டு.
ஆனால்...அதுபோல..அறிஞர் அண்ணா அவர்கள்'விஞ்ஞானம்..அனுமதித்தால்..என் உயிரை எடுத்துக் கொண்டு..இவர் உயிர் பிழைக்க என் உயிரைக் கொடுக்கத் தயார்' என்றாராம்.அவர் உயிர்ப்பிக்க விரும்பியது கலைவாணர் என்.எஸ்.கே.,அவர்களை.
தன்னிடம் இல்லை என வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் என்.எஸ்.கே.,ஏதேனும் சமூக சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு வந்தால்..தயங்காமல் பல லட்சம் ரூபாய்கள் உதவி செய்வார்.லட்சம் என்பது..அந்த நாட்களில் பெரிய அளவு பணம்.
அப்போதெல்லாம்..படம் ஓடாது என தயாரிப்பாளர்கள் நினைத்தால்..கலைவாணரை வைத்து,தனி டிராக் எடுத்து படத்தில் சேர்த்து விட்டால்...படம் வெற்றிதான்.
எந்த அரசியல் கட்சியிலும் அவர் அங்கத்தினராய் இருந்ததில்லை.ஆனால்..திராவிட இயக்கம் மீது மா பெரும் பற்று.ஒருசமயம்.சென்னை வானொலியில்..சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி..பாட
இவரைக் கூப்பிட்ட போது..அப்பாட்டில்..பெரியார் பெயர் இல்லை எனக்கூறி.அதைச் சேர்த்தபின்னரே பாடினார்.
மணமகள் என்று கலைவாணர் தயாரித்த படத்திற்கு கலைஞர் வசனம்.சம்பளம் பற்றி பேசிய கலைவாணர்..ஒரு காகிதத்தில் 0000 போட்டு, இந்த சம்பளம் போதுமா என்றாராம்.கலைவாணர் ஏதோ குறும்பு செய்கிறார் என அறிந்துக் கொண்ட கலைஞர் போதும் என்றார்.உடன் கலைவாணர் 0000 பக்கத்தில்1 என்று எழுதி00001 இதுதான் சம்பளம் என்றார்.அந்த காகிதத்தை வாங்கிக் கொண்ட கலைஞர்..அதை தலைகீழாகக் காட்டி..இது போதும் என்றார் (10000)..கலைவாணரின் குறும்பை..கலைஞர் சரிவர புரிந்துக் கொண்டதால்..அங்கு ஒரே சிரிப்பலை.
சுயமரியாதைக் கட்சியை ஆதரித்த கலைவாணர்..நடுனிலையாகவும் இருந்தார்.எல்லாக் கட்சிகளின் கூட்டங்கள்,மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கென தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன.
நான் இப்போ பணக்காரன்...ஆனால்..பிறக்கும் போது ஏழை..அதுபோல இறக்கும் போதும் ஏழையாகத்தான் இறப்பேன் என்ற கலைவாணர்..இறுதி நாட்களில் வறுமையில் வாடினார்.மஞ்சள்காமாலை நோய் தாக்கி..அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தவரிடம்...சிகிச்சைக்கான பணம் இல்லை.அவரைப் பார்க்க வந்த எம்.ஜி.ஆர்.,பணக்கட்டுகளை அவர் தலையணைக்கீழ் வைத்தாராம்.உடனே கலைவாணர்..'ராமசந்திரா..இப்படி ஒருவனுக்கே அதிக பணம் கொடுக்கக்கூடாது..கொடுப்பதை பிரித்துக் கொடுத்தால்...இன்னும் சிலருக்கும் உதவலாமே என்றாராம்.
தனக்குத் தேவை இருந்த போதும்...அவரின் மனப்போக்கை பாருங்கள்.
1957 ல் தாராமங்கலத்தில்..அண்ணாத்துரையின் படத் திறப்பு விழாவில் கலைவாணர் கலந்த்க் கொண்டது..அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதுபோல 1969ல் சென்னையில் கலைவாணர் சிலை திறப்பு விழாவே அண்ணா கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.
12 comments:
நல்ல தகவல் ஐயா
Thanks for this valuable information abou NSK
////1957 ல் தாராமங்கலத்தில்..அண்ணாத்துரையின் படத் திறப்பு விழாவில் கலைவாணர் கலந்த்க் கொண்டது..அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதுபோல 1969ல் சென்னையில் கலைவாணர் சிலை திறப்பு விழாவே அண்ணா கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி. //////
வியப்பிற்கு உரிய செய்தி!பகிர்விற்கு நன்றி சார்!
வருகைக்கு நன்றி நசரேயன்
///சதுக்க பூதம் said...
Thanks for this valuable information abou NSK///
வருகைக்கு நன்றி சதுக்க பூதம்
வருகைக்கு நன்றி
SP.VR. SUBBIAH sir
இணையத் தலைமுறைகள் அறிய வேண்டிய தகவல்கள் !
நன்றி!
/// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இணையத் தலைமுறைகள் அறிய வேண்டிய தகவல்கள் !
நன்றி!///
வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்
எங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி தான் கலைவாணர் வாழ்ந்த வீடு இருந்தது சார். இப்ப ஒரு ரெண்டு வருடம் முன்பு இடிச்சுடாங்க. அவர் வாழ்ந்த எடத்துல ஒரு memorobilla வச்சி இருக்கலாம்.
மிக சுவாரஸ்யமான தகவல்.
///மணிகண்டன் said...
எங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி தான் கலைவாணர் வாழ்ந்த வீடு இருந்தது சார். இப்ப ஒரு ரெண்டு வருடம் முன்பு இடிச்சுடாங்க. அவர் வாழ்ந்த எடத்துல ஒரு memorobilla வச்சி இருக்கலாம்.//
அறிய வேண்டிய தகவல்!மணிகண்டன்
நன்றி!
//மங்களூர் சிவா said...
மிக சுவாரஸ்யமான தகவல்//
வருகைக்கு நன்றி சிவா
Post a Comment