Wednesday, December 17, 2008

டாக்டர் அம்பேத்கர் ..சில செய்திகள்..

மாபெரும் லட்சியத்தையும்..வெற்றியில் நம்பிக்கையும்..வாழ்க்கையில் ஏற்றுக்கோண்டால்..உயர்ந்த நிலையை எவரும் அடையலாம் - அம்பேத்கர்

நமது தேசியக் கொடியில் நடுவில் காங்கிரஸ் சின்னமான ராட்டைதான் வரவேண்டும் என காந்தியும்..அவர் சீடர்களும் கூறினர்.ஓம் வரவேண்டும் என சாவக்கர் கூற...அம்பேத்கர் சொன்னார்
அசோகரின் தர்மச் சக்கரம் தான் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் சரியான சின்னமாக இருக்கும் என்று.அதில் உறுதியாக நின்று அதை நிறைவேற்றினார்.

நாட்டில் மதம்,மொழி,ஜாதி,இனம் என பல இருக்கும் நிலையில்..அனைவரின் உரிமைகளையும் பாதுகாத்து..சட்டங்கள் வடிவமைக்க ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.வேலை பளு காரணம் காட்டி..ஒவ்வொருவரும் நழுவிக் கொள்ள..தனி மனிதனாக..அம்பேத்கர் அக்காரியத்தை செய்து முடித்தார்.

மனு சாஸ்திரத்தால் தான் மனிதர்கள் மனிதர்களை சாதிக்காரணங்களால் வெறுக்கும் அவலம் ஏற்படுகிறது.ஆகவே தீண்டாமைக்கு முதல் எதிரி மனுதான் என்று கூறி..மனு சாஸ்திரத்தை தீ வைத்துக் கொளுத்தி..தீண்டாமைக்கு எதிரான யுத்தத்தை துவக்கி வைத்தவர் அம்பேத்கர்.

புத்த மதம்தான் கடவுள் வழிபாட்டைத் துறந்து அறத்தையும்,மனிதனது நல்ல எண்ணங்களையும் முன்னிறுத்துவதாகவும், அம்மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் எண்ணியவர்,
மேலும் தான் இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் 10லட்சம் பேரை 1956ல் புத்த மதத்திற்கு மாற்றினார்.

இந்தியாவில்...இல்லை..இல்லை..உலகிலேயே அதிக சிலைகள் உள்ள ஒரே தலைவர் இவர் தான்.

அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

வரலாறு எவ்வளவு உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது என அறிவீர்கள்.

9 comments:

Jeyapalan said...

மனு தர்மத்தின் மீது எனக்குக் கூடக் கோபம் இருந்திருக்கிறது, முன்னர். இப்பொழுது அது சிறு கோடாக மாறி விட்டது. காரணம், அண்மையில் நடந்த சட்டக் கல்லூரிச் சண்டையும் கொலையும். சாதிப் பிரச்சனைகள் மிகப் பெரிய அளவில் நடப்பது இப்பொழுது மனுவின் தர்மத்திற்கு அப்பாற்பட்டவர்களிடையே தான். அவர்களைத் திருத்த வேண்டும்.

நசரேயன் said...

/*
அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
*/
வழிமொழிகிறேன்

குடுகுடுப்பை said...

அம்பேத்கார் ஒரு ஜாதித்தலைவராக பார்க்கப்படும் அவலம் எப்போது ஒழியுமோ தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் கூட அவருடைய பெயரை பிள்ளைகளுகளுக்கு வைக்கமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மட்டும் தன் சாதியை பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது.இந்த நிலை எப்போது மாறும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செயபால் said...
மனு தர்மத்தின் மீது எனக்குக் கூடக் கோபம் இருந்திருக்கிறது, முன்னர். இப்பொழுது அது சிறு கோடாக மாறி விட்டது. காரணம், அண்மையில் நடந்த சட்டக் கல்லூரிச் சண்டையும் கொலையும். சாதிப் பிரச்சனைகள் மிகப் பெரிய அளவில் நடப்பது இப்பொழுது மனுவின் தர்மத்திற்கு அப்பாற்பட்டவர்களிடையே தான். அவர்களைத் திருத்த வேண்டும்//


வருகைக்கு நன்றி செயபால்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
இந்த நிலை எப்போது மாறும்.//

:-(((
????!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செயபால் said
சாதிப் பிரச்சனைகள் மிகப் பெரிய அளவில் நடப்பது இப்பொழுது மனுவின் தர்மத்திற்கு அப்பாற்பட்டவர்களிடையே தான். அவர்களைத் திருத்த வேண்டும்.//

unmai

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// நசரேயன் said...
/*
அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
*/
வழிமொழிகிறேன்///

repeateyyyy

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// நசரேயன் said...
/*
அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
*/
வழிமொழிகிறேன்///

repeateyyyy