Tuesday, December 16, 2008

கோடீஸ்வர எம்.எல்.ஏ..க்கள்

இந்தியாவின் 5 வட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.

தேர்தல் நடந்த ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,தில்லி,சத்தீஸ்கர்,மிஜோராம் மாநிலங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 629.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 40சதவிகிதம் கோடீஸ்வரர்கள்.
சுருங்கச்சொன்னால்..இன்று இவர்களால்தான் அரசியலில் ஈடுபடமுடியும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அப்துல் கலாம் இல்லை..யார் சொன்னாலும் சரி...பணம் இல்லையேல் அரசியல் இல்லை..அதே சமயம் விரைவில் பணம் சம்பாத்திக்க அரசியலை விட்டால் வேறு தொழிலும் இல்லை.

இந்த கோடீஸ்வரர்களால்...ஏழை மக்களின் தேவை என்ன என்று எப்படி உணரமுடியும்?

இந்த வேட்பாளர்களில்..3 சதவிகிதம் பேரே..5லட்சத்திற்கும் குறைவான சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது உண்மையா என நாம் அறியோம் பராபரமே!

ஆனால் இப்படி அறிவித்தவர்கள் எவரும் தில்லி தேர்தலில் வெற்றிப் பெறவில்லை.தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 31 சதவிகிதம் 5 கோடிக்கும் அதிகம் சொத்து உள்ளவர்கள்.பின் தங்கிய மாநிலமான சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.க்கள் கூட கோடீஸ்வரர்கள்.கடந்த தேர்தலில் நின்ற வேட்பாளர்..இந்த தேர்தலிலும் நிற்கும்போது..சென்ற தேர்தலைவிட 1 கோடி அதிகம் சொத்துக் கணக்கு காட்டியுள்ளார்.

அவருக்கு இது எப்படி வந்தது? எப்படி சம்பாதித்தார்..

சாமான்யன் என்றால்...வருமான வரித்துறை குடைந்தெடுக்கும்..சில ஆயிரங்களுக்கே..

ராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.

மக்களாட்சி என்றால் மக்களால்..மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில்லை இப்போதெல்லாம்..

கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்.

இந்நிலை மாறவேண்டுமானால்...

மக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..

அதுவரை...இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு என்பது ஏட்டளவில்தான் இருக்கும்

14 comments:

குடுகுடுப்பை said...

ராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.//

இதுதான் அசையும் சொத்து,

குடுகுடுப்பை said...

அப்போ நீங்கதான் அடுத்த MLA.இல்லாத எங்க ஓட்டு உங்களுக்குதான்.

நசரேயன் said...

/*
கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்
*/
மக்களுக்கு தெருக்கோடி

rapp said...

நான் பேசாம, வருங்கால முதல்வர்கள் குரூப்பில் ஐக்கியமாகிடலாம்னு பாக்குறேன்:):):)

rapp said...

வரவர இதயெல்லாம் பாத்து எரிச்சல் வராம, வயித்தெரிச்சல்தான் வருது:(:(:(

கோவி.கண்ணன் said...

ஐயா,

ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் தேர்த்தல் செலவு செய்ய வேண்டிய நிலையை அரசியல்வாதிகளே ஏற்படுத்திவிட்டனர். பணக்காரர்களால் தான் அது முடியும். பணம் படைத்தவன் தலைவன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// குடுகுடுப்பை said...
ராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.//

இதுதான் அசையும் சொத்து,///


வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
/*
கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்
*/
மக்களுக்கு தெருக்கோடி///

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

////rapp said...
நான் பேசாம, வருங்கால முதல்வர்கள் குரூப்பில் ஐக்கியமாகிடலாம்னு பாக்குறேன்:):):)////

எங்க ஓட்டு உங்களுக்குதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
அப்போ நீங்கதான் அடுத்த MLA.இல்லாத எங்க ஓட்டு உங்களுக்குதான்.///


உங்க ஒட்டை ராப் பிற்கு போட்டுடுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

///rapp said...
வரவர இதயெல்லாம் பாத்து எரிச்சல் வராம, வயித்தெரிச்சல்தான் வருது:(:(:(///

:-(((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி.கண்ணன் said...
///ஐயா,

ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் தேர்த்தல் செலவு செய்ய வேண்டிய நிலையை அரசியல்வாதிகளே ஏற்படுத்திவிட்டனர். பணக்காரர்களால் தான் அது முடியும். பணம் படைத்தவன் தலைவன் !///


பணம் படைத்தவன் எம்.எல்.ஏ.,
கோடீஸ்வரன் தலைவன்

Vetirmagal said...

இந்நிலை மாறவேண்டுமானால்...

//மக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..//

பல கோடி மக்களின் ஆசையும் இதுதான். ஆனால் எப்படி வேட்பாளரைப் பற்றி தெறிந்து கொள்வது?
ஒரே தொகுதியில் இருந்து கல முறை வெற்றி பெரும் வேடபாளர்களின் சிறப்பு என்ன?. அவர்கள் தொகுதி மிகவும் முன்னேறி உள்ளதா?

ஒரே குழப்பம் தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Vetrimagal