Tuesday, December 2, 2008

பாகிஸ்தானில் உள்ள தீவிரமுகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் : ஒபாமா

வாஷிங்டன் : மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், அந்நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, தனது நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாகவும், தீவிரவாதிகள் தாக்குதல் மூலம் இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என்றும் கூறினார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா, குண்டு வீசித்தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவிற்கு நீதி கிடைக்க அமெரிக்கா பாடுபடும் என்று தெரிவித்த ஒபாமா, மும்பை நிலவரம் குறித்து, தான் நடத்திய முதல் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். தான், அமெரிக்காவின் அதிபராக, தான் வரும் ஜனவரி 20ஆம் தேதி தான், பதவி ஏற்க இருப்பதால், இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தற்போது தன்னால் முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நன்றி -குமுதம் செய்திகள்

3 comments:

அக்னி பார்வை said...

அட போங்கப்பா,

அடுத்த குண்டு வெடிக்கும் 500 பேர் சாவர்கள், பகிஸ்த்தான் மறுக்கும், இந்திய கண்டனம் தெரிவிக்கும்...

மீண்டும் ..மீண்டும் குண்டு வெடிப்புகள் , திவிரவாதியின் அட்டூழியங்கள் தான்....

அரசியல்வாதிகள் பதுகாப்பாக இருப்பார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அக்னி பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா