Sunday, December 7, 2008

தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள்

இலங்கை தமிழர் பிரச்னைக்காக பிரதமரை தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் சென்று பார்த்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இலங்கை போர்ப்படைத்தளபதி பொன்சேகா ..தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமரிசனம் செய்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும் போர்ப் படைத்தளபதி பொன்சேகாதான்.

அவர் இப்படி கீழ்த்தரமாக தமிழக தலைவர்களை விமரிசனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்க்ஷவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை தூதரை இது சம்பந்தமாக இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், வருத்தம் தெரிவிக்க அவர்கள் தவறினால் இலங்கை தூதரையும்,இதர அதிகாரிகளையும் வெளியேற்றுவோம் என எச்சரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

12 comments:

வெத்து வேட்டு said...

would these tamilnadu politicians issue their regrets for calling Singala politicians and public as "monsters"???

மங்களூர் சிவா said...

:)))))))))
தலைப்பு சூப்பர்!

மங்களூர் சிவா said...

இவிங்களை எல்லாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற நாமதான் கோமாளிகள்னு நான் நினைச்சிகிட்டிருந்தேன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வெத்து வேட்டு said...
would these tamilnadu politicians issue their regrets for calling Singala politicians and public as "monsters"???///



தமிழக அரசியல்வாதிகள் குணமே தங்களைத் தாங்களே ஒருத்தொருக்கொருத்தர் திட்டிக்கொள்வதுதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
:)))))))))
தலைப்பு சூப்பர்///


நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
இவிங்களை எல்லாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற நாமதான் கோமாளிகள்னு நான் நினைச்சிகிட்டிருந்தேன்!///


அதிலென்ன சந்தேகம் சிவா

நசரேயன் said...

இந்திய அரசியல் தலைவர்கள் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
இந்திய அரசியல் தலைவர்கள் ?///

அடடா....

Pulliraaja said...

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கோமாளியாக்கியது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுதான். எம். கே நாரயணன் சொல்வதை கலைஞர் தலையாடி ஏற்கின்றார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவருக்கு அதிகாரி உத்தரவிடும் கொடுமை தமிழகத்தில்தான் உண்டு.

1) ஒரு மாநிலத் தலைவர்களைப் பகிரங்கமாகக் கிண்டல் செய்தும் தமிழகத்தில் எத்தனை தலைவர்களுக்கு கோபம் வந்திருக்கின்றது? 2).
மத்தியில் உள்ள தலைவர்கள் யாரேனும் இலங்கையிடம் கண்டனங்களைக் கூற முன்வந்தார்களா?

கோமாளிகளாக்கியதே மத்திய அரசுதான். ஆரம்பித்து வைத்திருக்கின்றார் பொன்சேகா
காலப்போக்கில் இந்தியாவின் மற்ற மாநிலக்காரகளும் இதே சொல்லைத் தமிழகத்திற்கு எதிராக விரைவில் பயன்படுத்துவார்கள்.

புள்ளிராஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Pulliraaja

தமிழ் சசி | Tamil SASI said...

பொன்சேகா மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். இந்த விடயத்தில் நான் பொன்சேகாவை ஆதரிக்கிறேன். கலைஞரும் மற்ற காங்கிரஸ் ஆதரவு தமிழக தலைவர்களும் அடித்த கூத்துகள் திரைப்பட காமெடிகளை விட சிரிப்பை வரவழைத்தது. வேதனையாகவும் இருந்தது. இவர் இங்கிருந்து டெல்லி போவதும், உடனே பிரணாப் கொழும்பு போவதும், பிறகு திரும்பி வந்து ஏதோ சொல்வதும், தனக்கு முழு திருப்தி ஏற்பட்டு விட்டது என்பது போல கருணாநிதி கூறுவதும் சகிக்க முடியவில்லை.

தற்பொழுது பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சரியாகவே கூறியிருக்கிறார்.

தமிழக தலைவர்கள் முதலில் அறிக்கை விடுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு தங்களுடைய எம்.பி. பதவிகளை உதறி தள்ள வேண்டும். மைய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தால் பொன்சேகா கூறுவது போல இவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் தான்.

பொன்சேகாவின் கருத்து மிகச் சரியானது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..ருத்துக்கும் நன்றி தமிழ் சசி