ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, February 11, 2009
மனிதரில் இத்தனை வகையா?! பகுதி - 1
மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.
பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...
வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.
வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.
வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.
ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.
உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.
அவன்தான் உங்கள் தோழன்.
அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.
Labels:
நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
me the first.
சார், நாளைக்கு 50 ஆயிரம் தொட்டுடுவீங்க. அதுக்கு என்ன ட்ரீட் ?
நன்றி...உங்களுக்கு ..எப்ப..என்ன டிரீட் கேட்டாலும் கொடுக்க நான் தயார் மணி
50K ஆயிரம் எல்லாம் ஒரு கணக்கா? நீங்க தொட வேண்டிய செல்ல வேண்டிய தூரம் எல்லாம் ஒன்னும் இல்லீங்க . வாழ்த்தூஸ்!
நான் எந்த வகைன்னு தெரியலையே !!!!
நன்றி... ILA
/// நசரேயன் said...
நான் எந்த வகைன்னு தெரியலையே !!!!///
நான் உங்களை நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன் நசரேயன்.
//"மனிதரில் இத்தனை வகையா?! பகுதி - 1"//
நல்ல தொடர்.
அஞ்சுவெறலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆனால் ஐஞ்சும் சேர்ந்தால் தான் கை :) வந்ததுக்கு தத்துவம் !
//மணிகண்டன் said...
சார், நாளைக்கு 50 ஆயிரம் தொட்டுடுவீங்க. அதுக்கு என்ன ட்ரீட் ?
//
ஒருத்தருக்கா கொடுத்தார்...அவர் ஊருக்கே கொடுப்பார். கண்டிப்பாக கொடுப்பார்
:)
வருகைக்கும்...தத்துவத்திற்கும்...பாராட்டுக்கும்...அப்புறம்ம்..அப்புறம்...ஞாபகம் இல்லை... எல்லாவற்றிற்கும் நன்றி
ஏராளமான வகைகளில் இருக்காங்க.
எவ்ரி டே மனிதர்கள் என்று ஒரு 25 பகுதி எழுதியிருந்தேன்.
சந்தித்தவர்களில் எழுதியது ஒரு துளிதான். மீதி ஒரு கடல்.
வருகைக்கு நன்றி madam
Post a Comment