Saturday, February 14, 2009

வழக்கொழிந்த சொற்கள்...

ஒரு மொழி செம்மொழி ஆக என்ன தகுதிகள் வேண்டும்..

அம்மொழி 2000 வருடங்களுக்கு முன்னதான பாரம்பரியம் பெற்றதாய் இருக்க வேண்டும்.(இப்பொழுது..சில மாநில அரசியல்வதிகள் நிர்பந்தத்தால் இந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது)
அம்மொழி வேற்று மொழி சொற்களை தன்னுள் வாங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த இரண்டு விதிகளும்..நம் தமிழுக்குள் அடக்கம்.வேற்று மொழிச் சொற்கள்..இப்போது நம் பேச்சிலும்..எழுத்துக்களிலும் காணப்பட்டாலும் ..அச் சொற்களுக்கு தமிழ் மொழியில் சரியான சொற்கள் உண்டு.ஆனால் நாம் தான் பயன்படுத்துவதில்லை.தவிர ..நம்மில் பலருக்கு சில தமிழ்சொற்களும்..வடமொழியில் வழங்கிவரும் சொற்களுக்கும் கூட வித்தியாசம் தெரிவதில்லை.

நான் ஒரு சமயம்..மனநல மருத்துவ மனையை சுற்றிப் பார்க்க சென்றேன் நண்பனுடன்.அப்பொழுது அங்கிருந்த ஒருவர்..."ஆரம்பி...புகைப்படக்கருவி...நடவடிக்கை..வெட்டு.." என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.நான் அங்கிருந்த மருத்துவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

மருத்துவர் சொன்னார்...அவர் ஒரு தமிழ் பட இயக்குநர்.தமிழின் மேல் ஆர்வம் கொண்டவர்.அவர் சொன்ன சொற்கள் ஸ்டார்ட், காமிரா, ஆக் ஷன்,கட்...என்பதுதான்.அவர் இவற்றை தமிழில் சொல்வதால்..மன நோயாளி ஆக்கப்பட்டார்.

பாவம்...அவருக்கு..தமிழ் சினிமாவில் தமிழில் படத்திற்கு பெயர் வைத்தால் மட்டுமே போதும்..வரிவிலக்கு உண்டு..என்பது தெரியாது என தோன்றுகிறது எனக்கு.

அது போகட்டும்..தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' படம் பார்த்த போது, திரை அரங்கில் பக்கத்தில் இருந்தவர்..'மடையன்..ஒன்பது ரூபாய் நோட்டே கிடையாது..படத்துக்கு அந்த பெயர் வைச்சிருக்கான் பாரு' என்றார்.நம் தமிழ் அறிவு அந்த அளவுதான்.

சரி..தலைப்புக்கு வருவோம்..

கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் பொறியை பம்ப்..என்கிறோம்..அதற்கான தமிழ்ச் சொல் எக்கி
சர்வே -நில அளவை
லாஜிக் என்ற பாடத்திற்கு அளவையியல்
ஹார்ஸ் பவர்-குதிரைத் திறன்
அக்ராசனர்,,காரியதரிசி,பொக்கிஷத்தார் - முறையே..தலைவர்,செயலர்,பொருளாளர்
எய்ம்- குறி
லஞ்சம்-கையூட்டு
சயின்ஸ்- அறிவியல்
ராக்கெட்-ஏவுகணை
சைக்கிள்- மிதி வண்டி

மைக்ரஸ்கோப்- நுண்ணோக்கி
மோடிவ்- ஊக்கி
டோனர்- வழங்கி

ஒரு மொழி வளர வேண்டுமானால்..பிற மொழிச் சொற்களை தன்னுள் கலப்பது..தவிர்க்க முடியாது என தமிழ் அறிஞர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.ஆனாலும் கூடியவரை தமிழ்ச் சொற்களை பேச தமிழன் கற்க வேண்டும்.

ழ,ர,ல,ற, ள,ண,ன ஆகியவற்றை சரியாக உச்சரித்தாலே போதும்

பின் குறிப்பு-

இந்த பதிவிற்கு என்னை அழைத்த ஜோ(சோ)தி பாரதிக்கு நன்றி

சினிமா இயக்குனர் செய்தி..சும்மா...நகைச்சுவைக்காக சொன்னது

19 comments:

கோவி.கண்ணன் said...

இவ்வளவு விரைவாக வெளிச்ச பதிவரின் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டிங்க. நான் ஒரு வாரம் சென்று இடலாம் என்றிருந்தேன்.
:)

T.V.Radhakrishnan said...

நன்றி கோவி

பூச்சாண்டியார் said...

// இப்பொழுது..சில மாநில அரசியல்வதிகள் நிர்பந்தத்தால் இந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது

என்ன செய்வது.. இல்லையென்றால் ஓட்டு விழாதே..

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்..ஆமாம் எங்கே ரொம்ப நாளாக காணோம்

பூச்சாண்டியார் said...

எல்லாம் பணி சுமைதான் ஐயா. ஆனாலும் தங்களின்/மற்றவர்களின் பதிவுகளை படிக்க தவறுவதில்லை. நீங்கள் தமிழ் மணத்தின் நட்சத்திர பதிவாளராக தேர்தேடுகபட்டதற்கு வாழ்துக்கள். ரொம்ப காலம் கடந்து சொல்கிறேன். :(

T.V.Radhakrishnan said...

நன்றி

ஜோதிபாரதி said...

//நான் ஒரு சமயம்..மனநல மருத்துவ மனையை சுற்றிப் பார்க்க சென்றேன் நண்பனுடன்.அப்பொழுது அங்கிருந்த ஒருவர்..."ஆரம்பி...புகைப்படக்கருவி...நடவடிக்கை..வெட்டு.." என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.நான் அங்கிருந்த மருத்துவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

மருத்துவர் சொன்னார்...அவர் ஒரு தமிழ் பட இயக்குநர்.தமிழின் மேல் ஆர்வம் கொண்டவர்.அவர் சொன்ன சொற்கள் ஸ்டார்ட், காமிரா, ஆக் ஷன்,கட்...என்பதுதான்.அவர் இவற்றை தமிழில் சொல்வதால்..மன நோயாளி ஆக்கப்பட்டார்.//


ஐயகோ! அருமை!!
நல்ல பதிவு!!

சிறப்பாக, எனது வேண்டுகோளை ஏற்று முதலில் பதிவிட்ட ஐயாவிற்கு நன்றி!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

திகழ்மிளிர் said...

பல சொற்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது தங்களின் இடுகையின் வாயிலாக

அழைப்பு யாருக்கும் இல்லையா?

/கூடியவரை தமிழ்ச் சொற்களை பேச தமிழன் கற்க வேண்டும்./

சரியாகச் சொன்னீர்கள்

வாழ்த்துகள்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

goma said...
This comment has been removed by the author.
goma said...

ஒரு மொழி செம்மொழியாக இன்னொரு தகுதி,
தாய் மொழிப் பற்று.

பலர் நடுவே,தாய்மொழியில் பேச தயங்கி நிற்பவர்கள் ,அதிகரிக்க அதிகரிக்க அம்மொழி செம்மொழியாகும் தகுதியை இழந்து நிற்கும் .
தாய்மொழியை மதிக்காத பட்சத்தில் ,

அம்மொழி,
செம்மொழியானால் என்ன எம்மொழியானால் என்ன?

February 15, 2009 5:41:00 AM PST

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை கோமா

புருனோ Bruno said...

என் தொகுப்பு

T.V.Radhakrishnan said...

நன்றி doctor

படகோட்டி said...

தொலைக்காட்சியில் மெகாத் தொடர் என்று தொடர் நாடகங்களை அழைக்கிறார்கள். மெகா என்பது தமிழ் வார்த்தையா என்று யாராவது சொல்லா விட்டால் சிறு வயதுக் குழந்தைகளுக்கு மெகா என்பதும் தமிழ் வார்த்தை என்று தான் சத்தியம் செய்யும்.இத்தனைக்கும் இது தமிழாய்ந்த தமிழன் வகையறாக்களின் தொலைக்காட்சிகள் தான். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்

T.V.Radhakrishnan said...

இதைத்தான் இப்போது நெடுந்தொடர் என ஒரு கால்வாயில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

வருகைக்கு நன்றி படகோட்டி

அமுதா said...

/*ழ,ர,ல,ற, ள,ண,ன ஆகியவற்றை சரியாக உச்சரித்தாலே போதும்*/
உண்மை தான்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அமுதா