Monday, February 9, 2009

பதிவுகளும்...பின்னூட்டங்களும்..

நாம் நமது..எண்ணங்களை, உணர்ச்சிகளை,சமுக சிந்தனைகளை,நகைச்சுவை நிகழ்ச்சிகளை..நமது ப்ளாகில் பதிவிடுகிறோம்.

நமது கருத்துக்கள்..எவ்வளவு நண்பர்களால்...ரசிக்கப்படுகிறது...என்பதை நமக்கு வரும் பின்னூட்டங்களும்..நாம் பிறர் கருத்தை எப்படி ரசிக்கிறோம் என்பதை..அவர்களுக்கு நாம் இடும் பின்னூட்டங்களும் சொல்கின்றன.இதிலும் நமக்கு வேண்டாத பின்னூட்டங்கள் நீக்கவும் செய்கிறோம்.சில சமயங்களில் ஆரோக்யமான வாதங்களும் செய்யப்படுகிறது.

ஒரு கட்டத்தில்...பதிவிற்கான கருத்துக்கள் தான் பின்னூட்டங்கள் என்ற நிலைமாறி..நமக்கு வேண்டிய பதிவர் என்றால்...ஒருவரே..பல பின்னூட்டங்கள் இடும் நிலைமை ஏற்பட்டது.தமிழ்மணத் திரட்டி...அதை மட்டுறுத்தி..40 பின்னூட்டங்கள் வரை முகப்பில் தெரியும் நிலையை ஏற்படுத்தியது.

பின்னூட்டம்..நாம் ரசிக்கும் ஒன்று என்பதைவிட..ஒருவரின் பதிவு..நீண்ட நேரம் முகப்பில் இருக்க உதவி செய்யும் ஒரு நண்பன் எனலாம்.ஒருவர் பதிவிற்கு..ராப்,மங்களூர் சிவா..போன்றவர்கள் பின்னூட்டம் இட்டிருந்தால்..அப்பதிவு அதிகம் பேர் பார்த்திருப்பார்கள் என சொல்லலாம்...வேறு வார்த்தைகளில் சொல்வதானால்..பின்னூட்டங்களின் அத்தாரிட்டி இவர்கள் எனலாம்.ஆனால்..சமீப காலங்களாக.. பின்னுட்டங்கள் முன்புபோல..எந்த பதிவர்களுக்கும்..அதிகமாக வருவதில்லை.ஏன் என்று தெரியவில்லை.

இதனிடையே..அனானி என்ற பெயரில்...பதிவிடுபவரை..அநாகரிகமாகவும்..ஆபாசமாகவும் திட்டி வரும் பின்னூட்டங்கள்.profile இல்லாமல்...புனைப்பெயரில்..வரும் ஆபாச பின்னூட்டங்கள்.இவை..பொது கழிப்பிடங்களில் மன வக்கிரத்தையும்,விகாரங்களையும்..எழுதி வடிகால் தேடும் நபர்களை விட கேவலமானவையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவை..publish செய்வது ..நம் கைகளில் இருந்தாலும்..இவற்றைப் படிக்கும் போது மனம் வேதனை அடையவே செய்கிறது.

ஆகவே..அப்படிப்பட்ட நண்பர்களுக்கு..ஒரு வேண்டுகோள்...எங்கள் பதிவை படிப்பதும்..படிக்காததும் உங்கள் விருப்பம்..என்பதுபோல்..எங்கள் எண்ணங்களை பதிவிடுவது எங்கள் விருப்பம்.உங்களுக்கு பதிவுி பிடிக்கவில்லை எனில்...படிக்காதீர்கள்..மவுஸ் உங்கள் கையில்...மாற்றிக் கொள்ளுங்கள் வேறு பக்கத்திற்கு.

32 comments:

முரளிகண்ணன் said...

மிக வருத்தமாய் இருக்கிறது சார்.

சின்னப் பையன் said...

:-(((

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்குப் போய் யார் சார் அப்படி பின்னூட்டம் போடுறாங்க??
:((

Unknown said...

பதிவுலகில் இது நீக்கமற நிறைந்திருக்கும் காற்றுப் போன்றது.
ஒரு வகையில் வலைப்பதிவு தொடங்கும் பொழுதே இது போன்ற செயல்களுக்கு நாம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது கூட்டத்தில் யாரும் அறியாமல் நின்று கொண்டு கல்லடிக்கும் மனோபாவம்.இது பிரபல பதிவர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருக்கும் சிலரிடம் கூட இருப்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

நம் கடன் சொல்ல வேண்டியதை சொல்லிச் செல்வது;அதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.தூற்றுபவர்கள் தூற்றட்டும்,அதனால் எனக்குப் பாதிப்பில்லை என்ற மனோபாவம்தான் நமக்குத் தேவை.

நாம் வருந்துகிறோம் என்று காட்டுவது கூட இது போன்று விலங்குளின் செயலுக்கு அங்கீகாரம் கொடுப்பதாகிவிடும்;ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் விளைவு அதுதான்.

அதற்கு நாம் பலியாகக் கூடாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அலட்சியப்படுத்தப்பட்ட இலட்சியநடிகர்..பதிவிற்கு 4 பின்னூட்டங்கள். அவர்கள் நான் குறிப்பிட்ட ஒரு தலைவரை விமரிசனம் செய்வதுபோல எண்ணி...இவரை..விமரிசனம் செய்வாயா? அவரை செய்வாயா? என அன் பார்லிமென்டரி வார்த்தைகள் உபயோகித்து பின்னூட்டம்..என்ன செய்வது.
வருகைக்கு நன்றி முரளி,ச்சின்னப்பையன், எம்.எம்.அப்துல்லா
.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சிலசமயம் வேதனையை அடக்கமுடிவதில்லை..அதற்கு நமக்கு வடிகால்தான்..இந்த பதிவு அறிவன்.
வருகைக்கு நன்றி

நசரேயன் said...

உங்க வருத்ததிலே நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் ஐயா

அன்புடன் அருணா said...

அட...இதுக்குப் போய் கவலைப் பட்டுக்கிட்டு....???just ignore them.....thats it!!
அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அருணா

அன்பு said...

//பின்னூட்டம்..நாம் ரசிக்கும் ஒன்று என்பதைவிட..ஒருவரின் பதிவு..நீண்ட நேரம் முகப்பில் இருக்க உதவி செய்யும் ஒரு நண்பன் எனலாம்//

முகப்பில் பதிவு வருவதற்கு உங்கள் நண்பர்கள் உதவி இருக்கலாம் ஆனால் அது மேலே போவதற்கு நாங்களும் கூட காரணம். உங்கள் பதிவு மேலே போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருந்தால் அதில் எங்கள் பங்கும் இருக்கிறது. ஆனால் எங்கள் விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது உங்களுக்கு. பெரிய பெரிய சுஜாதா, மாலன் போன்றவர்களையே கேள்வி கேட்ட உலகம் வலைச்சர உலகம். இங்கே வந்து அழுகுணி ஆட்டம் உங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது

அபி அப்பா said...

நல்லா சொன்னீங்க ராதா!

அசிங்கமா பின்னூட்டம் போடுபவன் தன் குடும்ப சூழ்நிலை சரியில்லாததால் மனநோயாளி ஆனவன் என நாம் எடுத்துக்க கூடாது?

கோவி.கண்ணன் said...

//ஆகவே..அப்படிப்பட்ட நண்பர்களுக்கு..ஒரு வேண்டுகோள்...எங்கள் பதிவை படிப்பதும்..படிக்காததும் உங்கள் விருப்பம்..என்பதுபோல்..எங்கள் எண்ணங்களை பதிவிடுவது எங்கள் விருப்பம்.உங்களுக்கு பதிவுி பிடிக்கவில்லை எனில்...படிக்காதீர்கள்..மவுஸ் உங்கள் கையில்...மாற்றிக் கொள்ளுங்கள் வேறு பக்கத்திற்கு.//

என்னத்த சொல்வது, தெருவில் சாமி ஊர்வலம் சென்றாலும் மேலே பறந்து கொண்டே அவற்றின் மீது எச்சமிடும் காக்கை நிறுத்திக் கொள்ளுமா ?

இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள், அது மனவியாதி முற்றினால் தன்னையே மறக்கப் போகிறவர்கள் அவர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஐயா..புலிகேசி...நான் உங்கள் பின்னூட்டத்தை மட்டும் குறை சொல்லவில்லை..மிகவும் அநாகரிகமாக எழுதப்பட்ட வேறு பின்னூட்டங்களும் இருந்தன.ஆரோக்கியமான..எதிர் விமரிசனங்களும் என் பதிவுகளுக்கு வந்து..விமரிசனம்..இரு பிரிவினராலும் செய்யப்பட்டிருக்கிறது.கலைஞரை பாராட்டி நான் எழுதியுள்ள பதிவுகளும் உண்டு.அதையும் ஞாபகம் வையுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அபி அப்பா

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி.

அன்பு said...

//என்னத்த சொல்வது, தெருவில் சாமி ஊர்வலம் சென்றாலும் மேலே பறந்து கொண்டே அவற்றின் மீது எச்சமிடும் காக்கை நிறுத்திக் கொள்ளுமா ?//

அந்த காக்கையை படைத்ததும் அதே சாமி தானே (உங்கள் கூற்றுப்படி) அப்படி என்றால் அதில் தவறு ஏதும் இல்லையே

அன்பு said...

//கலைஞரை பாராட்டி நான் எழுதியுள்ள பதிவுகளும் உண்டு.அதையும் ஞாபகம் வையுங்கள்//

100 பதிவுகள் கலைஞரை குறை சொல்லி, 1 பதிவு பாராட்டி, இது தானே உங்கள் வாதம், ரொம்ப நல்லாயிருக்கு

narsim said...

மிக ஆச்சர்யமாய் இருக்கிறது..இப்பொழுதுதான் இதே வார்த்தைகளை எனக்கு பின்னூட்டமிட்ட அனானிக்கு பதிலாக சொல்லிவிட்டு வந்தேன்..உங்களுக்கும் அதே வார்த்தைகள் தோன்றி இருக்கிறது.. ஒத்த சிந்தனை.. நல்ல பதிவு

மணிகண்டன் said...

நான் கூட இந்த பதிவ காலைல கூகிள் ரீடர்ல படிச்சேன். ஆனா பின்னூட்டம் போட முடியல. இது மாதிரி பதிவு எழுதினா அனானி அநாகரிகம் இன்னும் கொஞ்சம் கூடுமே !

புலிகேசி,

கலைஞர திட்டறது புடிக்கலையா இல்லாட்டி இவரு கலைஞர திட்டறது புடிக்கலையா ? இதுக்கு பதில் சொல்லுங்க நீங்க.

மணிகண்டன் said...

********
ஆனால் எங்கள் விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது
********
விமர்சனம்ன்னு எத சொல்றீங்க ? ஏண்டா பார்ப்பன நாயே, கலைஞர பேசறதுக்கு உனக்கு என்னடா அருகதைன்னு எழுதறதா ?

அன்பு said...

//Blogger மணிகண்டன் said...
விமர்சனம்ன்னு எத சொல்றீங்க ? ஏண்டா பார்ப்பன நாயே, கலைஞர பேசறதுக்கு உனக்கு என்னடா அருகதைன்னு எழுதறதா ?//

அய்யா மணிகண்டா, இந்த மாதிரி நான் எழுதவில்லை ஆனால் திரு.இராதாகிருட்டிணன் அவர்கள் என் பின்னூட்டத்தையும் சேர்த்தே அழித்து இருக்கிறார். அதை தான் விமர்சனத்தை ஏற்று கொள்ள பக்குவம் இல்லாதவர் என்று சொல்லி இருக்கிறேன். என் பின்னூட்டங்கள் அநாகரீகமாக் இல்லை என்று இவரே இங்கு சொல்லி இருக்கிறார். பின் ஏன் அவற்றை அழித்தார் என்று சொல்ல முடியுமா?

//கலைஞர திட்டறது புடிக்கலையா இல்லாட்டி இவரு கலைஞர திட்டறது புடிக்கலையா ? இதுக்கு பதில் சொல்லுங்க நீங்க//

யாராக இருந்தாலும் யாரையும் குறை சொல்லலாம் ஆனால் கலைஞரை திட்டும் பலரும் ஜெயலலிதா என்றால் அமுக்கி கொண்டு பொய்விடுகிறார்களே, ஏன்?

anujanya said...

எதிர் கருத்துகள் கண்ணியமாயிருக்கும் வரையில் அனுமதிக்கலாம். இல்லாவிட்டால் மட்டுறுத்தி விடுங்கள் (நீங்கள் அதை செய்தும் விட்டீர்கள்). இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க சார். பாவம், கட்டணம் கட்டவேண்டிய கழிப்பறைகளில் மன வக்கிரங்களை எழுத முடியாதவர்கள், இங்கு இலவச இடங்களில் கொட்டிவிட்டுப் போகிறார்கள். அருணா சொல்வது போல் ஒதுக்கி விடுங்கள்.

அனுஜன்யா

அன்பு said...

//பாவம், கட்டணம் கட்டவேண்டிய கழிப்பறைகளில் மன வக்கிரங்களை எழுத முடியாதவர்கள், இங்கு இலவச இடங்களில் கொட்டிவிட்டுப் போகிறார்கள். அருணா சொல்வது போல் ஒதுக்கி விடுங்கள்//

கருணாநிதி ஒழிக என்று பொது கழிவறையில் எழுதுபவருக்கும் இங்கே வலைச்சரத்தில் எழுதும் இவருக்கும் என்ன வித்தியாசம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் நன்றி narsim

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மணிகண்டன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அனுஜன்யா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நாம் சாலையில் செல்லும் போது நிறைய நிகழ்வுகள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும். அதில் நமக்கு பிடித்தவைகள் இருக்கலாம். பிடிக்காதவைகள் இருக்கலாம். நாகரிகாமனவைகள் இருக்கலாம் அநாகரிகமானவைகள் இருக்கலாம். பிடித்தவ்கைகளையும் நாகரிகமானவற்றையும் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உள்வாங்கிக் கொள்ளுங்கள் திரு டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா!
அநாகரிகப் பேர்வழிகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி

அன்பு said...

//டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா!//

வெள்ளத்தனைய மலர்நீட்டம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி புலிகேசி