1.ரசிகமணி டி.கே.சி.யின் மணிவிழா இலஞ்சி குமரன் கோவிலில் நடைபெற்றதாம்.அதற்கு தந்தை பெரியார் வந்திருந்தார்.'முருகன் கோவிலுக்குள் வந்திருக்கிறீர்களே..என ஒருவர் கேட்டபோது..'அறுபதாம் கல்யாணம்..முதலியாருக்குத்தானே...முருகனுக்கில்லையே..' என்றார் பெரியார்.கோவிலில் வழங்கிய சித்ரான்னம் சாப்பிட்டு ..நிழற்படமும் எடுத்துக்கொண்டார். பெரியாருக்கு மனித நேயமும் முக்கியம்.
2.நமது உடலில்..புற்று நோய் தாக்காதஒரு பகுதி இருக்கிறது..அதுதான் இதயம்.
3.சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி.ஆனால்..நாட்டில் 4635 ஜாதிகள் உள்ளனவாம்..அதை எப்படி இல்லை என்று சொல்ல முடியும் என்கிறார் ஒரு அரசியல்வாதி.
4.தமிழன்னையை எப்படி அலங்கரித்துள்ளார்கள்..நம் புலவர்கள்
தலைக்கு சூளாமணி,
மார்புக்குச் சிந்தாமணி
காதுக்கு குண்டலகேசி
கைக்கு வளையாபதி
இடைக்கு மணிமேகலை
காலுக்கு சிலப்பதிகாரம்
இப்படிச் சொன்னவர் தமிழ்த் தாத்தா..உ.வே.சா.
5.உன்னால் முடியாதது ஏதுமில்லை என்றார் ஒரு ஞானி...ஆனால் நம்மால் முடியாதது பல உண்டு.உதாரணத்துக்கு..நம் தலையைத் திருப்பி..நம் முதுகை நம்மால் பார்க்க முடியுமா?
6.பாராளுமன்றம் என்பது..தவறு.ஆங்கிலேயன் பாரெல்லாம் ஆண்டான்..ஆகவே பாராளுமன்றம் அவனுக்கு..பொருந்தும்.நாம் ஆள்வது இந்த நாட்டினை..ஆகவே நாடாளுமன்றம் என்பதே சரி..என்றார்
ராஜாஜி
7.ஒரு கவிதை
முள்ளின் கீறல் வலி என்று
முனகுவதில்லை இசைத்தட்டு
பள்ளம் பறித்த பூமியில் தான்
புத்துயிர் தோன்றும் முளைவிட்டு
பட்ட வலிகளே பாடங்கள்
பழித்தவர் சொற்கள் வேதங்கள்
விட்டிடு காயம் ஆறட்டும்
வாழ்வின் போக்கே மாறட்டும்.
-மரபின் மைந்தன்..முத்தையா
12 comments:
//நமது உடலில்..புற்று நோய் தாக்காத ஒரு பகுதி இருக்கிறது..அதுதான் இதயம்//
துணுக்குகள் நன்றாக இருக்கிறன,ஆனால் உடலில் புற்றுநோய் தாக்காத உறுப்பு என்று எதுவுமில்லை.மனித உடலில் உயிருள்ள எந்த செல்லும் புற்றாக மாற வாய்ப்புள்ளது. இதயப் புற்று நோய் (angiosarcoma/cardiac cancer) அரிது அவ்வளவுதான்.
super sir. beachla korikkira maathiri addakaasam
நல்லா இருக்கு
தகவலுக்கும்...வருகைக்கும் நன்றி..தெனாலி
வருகைக்கு நன்றி..முரளி
நன்றி நசரேயன்...ஆமாம்..குடுகுடுப்பையை எங்க காணோம்?
நல்ல தகவல்கள்
//நாடாளுமன்றம் என்பதே சரி// மிகச் சரி
வருகைக்கு நன்றி
Arnold Edwin
மரபின் மைந்தன் - முத்தையா கவிதை- வலியை மிக அருமையாக சொல்லியிருக்கு.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி வடுவூர் குமார் said...
நன்றாக இருக்கிறது. காரம் கம்மி
வருகைக்கு நன்றி ரமேஷ் வைத்யா
Post a Comment