Tuesday, February 24, 2009

வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..

வண்ணதாசன்...

எஸ்.கல்யாணசுந்தரம்

கல்யாண்ஜி

நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்...நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் ...1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார்.

பழக மிகவும் இனியவர்.....மறந்தும் கடினமான சொற்களைக் கூறாதவர்.இவர் படைத்துள்ள கதைகள் அனைத்தும்..இலக்கியத்தரத்துடன் இருப்பதோடு..அவற்றுள் கருணையும்..பிரியமும்..மெல்லிய நடைபோடும்.

சாதாரணமாக நாம் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை...காரணம் சோம்பேறித்தனம்.ஆனால்..இவர்..அனைவருடன் கடிதத்தொடர்புள்ளவர். 'என்றென்றும் அன்புடன்.." என்ற இவரின் கடிதத் தொகுப்புக்கூட இலக்கிய மணம் வீசும்.

தோட்டத்துக்கு வெளியே சில பூக்கள்,சமவெளி,பெயர் தெரியாமல் ஒரு பறவை,கிருஷ்ணன் வைத்த வீடு..ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள்.எல்லா சிறுகதைகளும் சேர்ந்து..சந்தியா பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இவர் சமீபத்தில் விகடனில் எழுதிய 'அகம் புறம்' அனைவரும் படித்து ஆனந்த அடைய வேண்டிய ஒன்று.இதுவும்..விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

'சின்னு முதல் சின்னு வரை' என்ற ஒரு நெடுங்கதையும் எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள்..பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்..தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்..சாகித்ய அகடமி விருது பெற வேண்டிய எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.

கலைஞரின் படைப்பு ஒன்று(தென் பாண்டி சிங்கம் என்று நினைவு)..சன் டீ.வி.யில் இளையபாரதி (தற்சமயம்..இயல்,இசை,நாடக மன்றத்தில் செயலராக உள்ளார்) தயாரித்த போது..அவருடன் சேர்ந்து வண்ணதாசன் வசன உதவி புரிந்துள்ளார்.

புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்..என சுஜாதா அடிக்கடி கூறுவார்.

ஸ்டேட் வங்கியில்..அதிகாரியாக பணி புரிந்து..ஓய்வு பெற்று..திருநெல்வெலியில் தற்போது வசித்து வருகிறார்..அன்பு மனைவி வள்ளியுடன்.இவருக்கு..சங்கரி என்ற மகளும்..ராஜு என்ற மகனும் உள்ளனர்.

இவருடன் சேர்ந்து..வங்கியில் 3 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்தவன்..நான்...

அந்த நாட்கள்..என் வாழ்வின் வசந்தகாலங்கள்.

அவரின் கவிதை ஒன்று.

இருந்தவை...தொலைந்தவை..

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்துவிடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.

10 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் வண்ணதாசன்.

மாலன் said...

தி.க.சிவசங்க்ரன்(சிவசங்கர் அல்ல)
-மாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி...இலக்கிய ஆர்வலர் அனைவருக்கும் பிடித்த எழுத்தாளர் அவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தட்டச்சு பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..தவறு திருத்தப்பட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாலன்

goma said...

எங்கள் ஊர்காரரைப் பற்றி வாசிக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

நசரேயன் said...

எங்க ஊருக்காரர், படிக்கிறேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

Ramesh D said...

எங்கள் ஊர்காரரைப் பற்றி வாசிக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது