Wednesday, February 18, 2009

என் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...

நான் எழுதி வெளிவந்த நாடகநூல்..'பாரத ரத்னா..'

இது ஒரு தன்னலமற்ற..தமிழாசிரியர் கதை என்பதாலும்..ஆசிரியர்கள் குறித்து உயர்வாய் சொல்லி இருப்பதாலும்..ஆட்சியில் இருப்பவர்களைக் கவர்ந்த புத்தகம் இது என எண்ணுகிறேன்.அதனால்தான் இதை நாட்டுடமையாக்க அரசு அறிவிப்பு வெளியிட இருந்தது.இதை பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்கும் எண்ணமும் அரசுக்கு இருந்திருக்கிறது.

இப்புத்தகம் விலை 35 ரூபாய்தான்..என்பதாலும்..இதை நாட்டுடமை ஆக்கினால்..மற்ற பதிப்பகங்கள் இதை மலிவு விலையாக 5 ரூபாய்க்கே கொடுக்கலாம்.

ஆனால்..எனது வாரிசுதாரர்கள்..இப்புத்தகம் நாட்டுடமை ஆவதை எதிர்க்கிறார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்..

1.அரசு 10 லட்சமாவது கொடுக்கும்

2.புத்தகத்தின் விலை 5 ரூ ஆனாலும்..அதிகம் பேர் வாங்கப் போவதில்லை.அதனால் பதிப்பகத்தாருக்கும் நஷ்டம் எற்படும்

3.தேவையில்லாமல் மக்கள் வரிப்பணத்தை எடுத்து அரசு எங்களுக்கு தருவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவேதான் எதிப்பைத் தெரிவிக்கிறோம் என்கின்றனர்.

ஆமாம்...என் கருத்து என்ன என்று கேட்கிறீர்களா?

என்னைவிட என் மக்களுக்கு ..என் எழுத்துப் பற்றி..என்னைப் பற்றி தெரியும் என்றே நினைக்கிறேன்.

12 comments:

கோவி.கண்ணன் said...

//இப்புத்தகம் விலை 35 ரூபாய்தான்..என்பதாலும்..இதை நாட்டுடமை ஆக்கினால்..மற்ற பதிப்பகங்கள் இதை மலிவு விலையாக 5 ரூபாய்க்கே கொடுக்கலாம்.//

மலிவு விலை என்பதற்கு பதிலாக அடிமாட்டு விலை என்று இருக்க வேண்டும்.

:)

கோவி.கண்ணன் said...

நான் கூட 'காலம்' பதிவை அரசு உடமைக்கு எழுதிக் கொடுக்கப் போறேன்
:))))))))))

புருனோ Bruno said...

//3.தேவையில்லாமல் மக்கள் வரிப்பணத்தை எடுத்து அரசு எங்களுக்கு தருவதை நாங்கள் விரும்பவில்லை.//

அட்ரா சக்கை
அட்ரா சக்கை

--

சார் பின்னீட்டீங்க !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
நான் கூட 'காலம்' பதிவை அரசு உடமைக்கு எழுதிக் கொடுக்கப் போறேன்
:))))))))))//


ஆஹா..அப்படி ஏதும் செய்யாதீர்கள்.காலம் பொன்னானது..பொன் விலை நாளும் ஏறிக்கொண்டிருக்கிறது

:-)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// புருனோ Bruno said...
//3.தேவையில்லாமல் மக்கள் வரிப்பணத்தை எடுத்து அரசு எங்களுக்கு தருவதை நாங்கள் விரும்பவில்லை.//

அட்ரா சக்கை
அட்ரா சக்கை///


வருகைக்கு நன்றி...என்ன இருந்தாலும் மறைமுகமாக புத்தகத்தை சக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன்
:-)))))))))))

தமிழ் said...

:)))))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

புரியவில்லையே ஐயா......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

T.V.ராதாகிருஷ்ணன் said...

28எழுத்தாளர்கள் படைப்பு நாட்டுடமை ஆக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்த செய்திகளை படியுங்கள்.புரியும்.வருகைக்கு நன்றி
SUREஷ்

முரளிகண்ணன் said...

:-))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முரளிகண்ணன்