Friday, February 20, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(21-2-09)

1.பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்..அதன் நிழல் தரையை தொட்டுத்தான் ஆகணும்

2.நாடு நலமுடன் இருக்க மன்னர்கள் அமைச்சரிடம் மாதம் மும்மாரி பொழிகிறதா? என்பார்கள்.அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒன்பது நாள் வெயில் காய வேண்டும்.ஒரு நாள் மழை பெய்ய வேண்டும்.அப்போதுதான் பூமி வளமை கொண்டதாக திகழும்.ஒரு மாதத்திற்கு 27 நாட்கள் வெயில்.3 நாட்கள் மழை.

3.உண்மைக்கும்...வாய்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என ஒரு சிஷ்யன்..தன் குருவைக் கேட்டான்.
'உண்மையைச் சொன்னால்..உயிருக்கு அழிவு வரலாம்..என்றால்..அதைச் சொல்லாமல் ..அதே சமயம் உயிருக்கு ஆபத்து வராத சொல்லைக் கூறுதல் வாய்மை எனப்படும்.
உதாரணமாக..ஒரு பசு ஒடி வருகிறது.முனிவர் அதைப் பார்க்கிறார்..சில மணித்துளிகள் கழித்து..ஒரு கசப்பு கடைக்காரன் வந்து..சுவாமி..இந்த பக்கமாக ஒரு பசு வந்ததா? என்கிறான்.முனிவர்..ஆமாம் என்றால்..பசு இறந்துவிடும்.எனவே..
பசுவா..என்கிறார்..
ஆமாம்...பார்த்தீரா
கண் பார்க்கும்...ஆனால் அதற்கு சொல்லத் தெரியாது
நடந்ததைச் சொல்லும்
நாக்கு பார்க்காது..அதற்கு சொல்லத் தெரியும்..அதாவது..பார்ப்பதற்கு சொல்லத் தெரியாது..சொல்வதற்கு பார்க்கத் தெரியாது
கசாப்பு கடைக்காரன்..எதும் புரியாமல்..திரும்பினான்.
குரு சொன்னார்..அந்த முனிவர் கையாண்ட முறையே..வாய்மை எனப்படும்.

4.ஒரு தலைவனின் கருத்துக்களையும்,கொள்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் ..புகழலாம்.ஆனால்..அத்தகைய தலைவர்களையே..கடவுள் அவதாரமாகக் கருதி..அவரின் கொள்கைகளையும்
கடவுள் வாக்காக கருதுவது தவறு.முன்னது..எந்த ஆபத்தையும் உருவாக்குவது..பின்னது பொல்லாத பெரும் கேடு உருவாக்கும். - டாக்டர்.அம்பேத்கர்

5. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு ஏதுமில்லை.பிள்ளை தன்னுடைய அன்பை பிரதிபலிக்காவிடினும்..தாய் அதை பொர்ட்படுத்த மாட்டாள்.துஷ்டப் பிள்ளை உண்டு.துஷ்ட அம்மா கிடையாது.

6.ஒரு கவிதை-

மகனே
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும்பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும்..சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்.
-தமிழருவி மணியன்

7.ஒரு ஜோக்..

கேடி கபாலி -(போலீஸ் அதிகாரியிடம்) என் பையன் பெரிய தாதா வாக்கும்
போலிஸ் அதிகாரி-அதனாலென்ன..என் பையன் யார் தெரியுமா? வக்கீலாக்கும்

24 comments:

நிஜமா நல்லவன் said...

இறுதி ஒன்று நன்று...:)

Namakkal Shibi said...

/7.ஒரு ஜோக்..

கேடி கபாலி -(போலீஸ் அதிகாரியிடம்) என் பையன் பெரிய தாதா வாக்கும்
போலிஸ் அதிகாரி-அதனாலென்ன..என் பையன் யார் தெரியுமா? வக்கீலாக்கும்//

டைமிங் ஜோக்!

:))

Anonymous said...

தமிழருவி மணியன் கவிதை அருமை. எனக்குப் பிடித்த பேச்சாளர் அவர்.

கடைசி நகச்சுவை அருமை. பொருத்தமான ஒன்று

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
நிஜமா நல்லவன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சிபி...
ஜோக்கின் தொடர்ச்சி...

கேடி கபாலி - அப்போ..அப்பனுக்கும்...மகனுக்கும் ஆவாதுன்னு சொல்லு

goma said...

என் ஜோக்ஸ் எல்லாம் சிரிக்கும்படியா இருந்துச்சா?

கண்பார்க்கும் ஆனா அதுக்கு சிரிக்கத் தெரியாது,
வாய் வாசிக்கும் ஆனா அதுக்கு பார்க்கத் தெரியாது

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலில் கொஞ்சம் மசாலா சேர்த்தேன் .சரியா இருக்கா?

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி..வேலன்

T.V.Radhakrishnan said...

//goma said...
என் ஜோக்ஸ் எல்லாம் சிரிக்கும்படியா இருந்துச்சா?

கண்பார்க்கும் ஆனா அதுக்கு சிரிக்கத் தெரியாது,
வாய் வாசிக்கும் ஆனா அதுக்கு பார்க்கத் தெரியாது

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலில் கொஞ்சம் மசாலா சேர்த்தேன் .சரியா இருக்கா?//

மசாலா..கொஞ்சம் தூக்கல்..
வருகைக்கு நன்றி கோமா..

அடியார் said...

அருமையான பதிவு....

அதிலும் இன்றுதான் மும்மாரி என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்...

முரளிகண்ணன் said...

சுவையான சுண்டல்

கோவி.கண்ணன் said...

//5. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு ஏதுமில்லை.பிள்ளை தன்னுடைய அன்பை பிரதிபலிக்காவிடினும்..தாய் அதை பொர்ட்படுத்த மாட்டாள்.துஷ்டப் பிள்ளை உண்டு.துஷ்ட அம்மா கிடையாது.
//

பெற்றோர் அன்பு என்று சொல்வதே மேலும் சிறப்பு.

மனிதன் தவிர்த்து பிற உயிர்களுக்கு தாய் அன்பு மட்டுமே கிடைக்கும்.

கோவி.கண்ணன் said...

//துஷ்டப் பிள்ளை உண்டு.துஷ்ட அம்மா கிடையாது./

துஷ்டமா ? ரொம்ப கஷ்டம் கஷ்டம். இந்த சொல் வழக்கிழந்து ஆண்டுகள் ஆகிவிட்டது 'கெட்ட' என்ற தமிழ்ச் சொல் அதற்கு மாற்றாக உரைநடைகள், பேச்சுத்தமிழில் வழங்கி வருகிறது.

'அவன் ரொம்ப கெட்ட பையன்' :)

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அடியார்

T.V.Radhakrishnan said...

நன்றி.. முரளிகண்ணன்

T.V.Radhakrishnan said...

தாயன்போடு..தந்தை அன்பு ஒரு மாற்று குறைவுதான் கோவி

T.V.Radhakrishnan said...

என் பதிவுகளை நீங்கள் விடாமல் படிப்பதில்லை என்று தெரிகிறது.நான் அவ்வப்போது வழக்கிழந்த சொற்களை உபயோகிக்கும் வழக்கம் உள்ளவன்

மணிகண்டன் said...

****
என் பதிவுகளை நீங்கள் விடாமல் படிப்பதில்லை என்று தெரிகிறது.நான் அவ்வப்போது வழக்கிழந்த சொற்களை உபயோகிக்கும் வழக்கம் உள்ளவன்
****

கலக்கறீங்க சார்.

கடைசி ஜோக் செம டைமிங்.

தாமிரா said...

அத்தனையும் அழகு.. தமிழருவியின் கவிதை ஹைலைட்.!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மணிகண்டன் said...

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தாமிரா

நிஜமா நல்லவன் said...

/T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சிபி...
ஜோக்கின் தொடர்ச்சி...

கேடி கபாலி - அப்போ..அப்பனுக்கும்...மகனுக்கும் ஆவாதுன்னு சொல்லு/


ஹா...ஹா..ஹா...

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

Seemachu said...

எல்லாமே அருமை !!

தமிழருவி மணியனின் கவிதை கண்ணை நினைத்தது. என் அம்மா இறந்த போது நான் அருகில் இல்லை. பிற்கு போய் எல்லாம் செய்தேன்.

//ஒரு தலைவனின் கருத்துக்களையும்,கொள்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் ..புகழலாம்.ஆனால்..அத்தகைய தலைவர்களையே..கடவுள் அவதாரமாகக் கருதி..அவரின் கொள்கைகளையும்
கடவுள் வாக்காக கருதுவது தவறுமுன்னது..எந்த ஆபத்தையும் உருவாக்குவது..பின்னது பொல்லாத பெரும் கேடு உருவாக்கும். - டாக்டர்.அம்பேத்கர்//

இன்றைய தேவை.. இதை பெரிதாக எழுதி எல்லா தொண்டர்களுக்கும் புரிய வைப்பது

சீமாச்சு

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி
Seemachu