Wednesday, February 18, 2009

வாய் விட்டு சிரியுங்க...

1.இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?
பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?

2.நான் காலையிலே ஆஃபீஸுக்கு லேட்டாப் போனா அதை சரிகட்ட சாயங்காலம் சீக்கிரம் போயிடுவேன்

3.உன் மனைவி இடது கை பழக்கம் உள்ளவரா?
எப்படி கண்டுபிடிச்சே
உன் வலது கன்னம் வீங்கியிருக்கே

4.நம்மோட தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா
சின்னவீடு ஒன்னையும் வைச்சுண்டு..பெரிய வீட்டோட வாழ்ந்து கிட்டு இருக்கார்.

5.நிருபர்-(நடிகையிடம்) இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி நீங்கதான்
நடிகை-அந்த இளைஞர்கள் விலாசத்தையெல்லாம் சொல்லுங்க..அவங்க கனவில வர நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியமா இருக்கும்.

6.எனக்கு நகைச்சுவை உணர்ச்சியே இல்லை என்கிறார்கள் என் நண்பர்கள்
ஏன் அப்படி
எங்க முதலாளி சொல்ற எல்லா ஜோக்குகளையும் நான் ரசிக்கிறேனாம்

7.அந்த பேச்சாளருக்கு ஒரு கூட்டத்தில் பேச 10000 ரூபாயா?
ஆமாம்..ஆனா.. அவர் கூட்டத்திற்கு 2000 பேரை கூட்டிகிட்டு வந்துடுவாராம்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//3.உன் மனைவி இடது கை பழக்கம் உள்ளவரா?
எப்படி கண்டுபிடிச்சே
உன் வலது கன்னம் வீங்கியிருக்கே//

:)

காஞ்சனா அம்மாவுக்கு வலது கை பழக்கம் தானே !

goma said...

முதல் ஜோக் வாசித்து சிரித்ததில் வாய் விட்டே போச்சு

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் இடது கன்னம் வீங்கியாயிருக்கு கோவி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///goma said...
முதல் ஜோக் வாசித்து சிரித்ததில் வாய் விட்டே போச்சு///