Wednesday, February 4, 2009

எழவு வீட்டில்..இரவு விருந்து..

சாதாரணமாக ..வீட்டில் ஒருவர் இறந்து விட்டால்..அவருக்கு..இறுதிக்கடன்களை முடித்ததும் தான்..ஏதேனும் வயிற்றுக்கு ஈயப்படும்.இதுதான் வழக்கம்.

முல்லைத்தீவில் இலங்கை ராணுவத்திற்கும்..விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.போர்முனையில் 2.5 லட்சத்திற்கு மேல்..அப்பாவி தமிழர்கள் சிக்கியுள்ளனர். குண்டு வீச்சில் காயம் அடைந்தோர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.அந்த மருத்துவ மனை மீது 3 நாட்களாக குண்டு வீசப்படுகிறது.நேற்று முதல் முறையாக பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டது.இதில் மேலும் பலர் காயமடைந்தனர்.

பாஸ்பரஸ் குண்டு போரில் தடைசெய்யப்பட்ட ஒன்று.வெள்ளை பாஸ்பரஸ் அடங்கிய இந்த குண்டு..வீசப்பட்டதும்..சிதறி பறவும்.அதன் துகள்கள் பட்ட இடம் தீப்பற்றி எரியும்.மனிதர்கள் உடலில் பட்டாலும்..தீப்பற்றி எரியும்.கூண்டின் துகள்கள் உடலில் பாய்ந்து ஆறாத காயத்தை ஏற்படுத்துமிந்த வகை குண்டுகள் ஆஃப்கானிஸ்தானில் பின் லாடனை ஒழிக்க அமெரிக்கா வீசியது.வன்னியில் சுரந்தாபுரம் என்னும் இடத்தில்..விமானங்கள் குண்டு வீசியதில் 52 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

சரி தலைப்புக்கு வருவோம்..

இந்திய கிரிக்கட் குழு, தற்சமயம் ஸ்ரீலங்காவில் விளையாடி வருகிறது. நேற்று இரவு இலங்கை அதிபர் ராஜ பக்சே..இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இரவு விருந்தளித்தாராம்.அதில் வீரர்கள் கலந்துக் கொண்டனராம்.

ஒரு பக்கம் தமிழர் பிணக்குவியல்...மறுபக்கம் இந்தியர்களுக்கு விருந்து...

:-((((((((((

8 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்தியனுக்கு வெட்கம்,மானம்,சூடு,சொரணையில்லாம போய்டுச்சு. என்ன பண்றது. முதுகில அடிச்சாலும் வாங்கிக் கிட்டு வருவாங்க. நடக்கட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

மணிகண்டன் said...

இலங்கை தமிழர் முரளிதரன் கூட தான் விளையாடறாரு ! அவர ஏன் திட்டி பதிவு போடமாட்டேன்னு சொல்றீங்க.

இன்னிக்கு al-jazeera நியூஸ் சேனல் பாத்தேன். ஒரு வைத்தியசாலைல மக்கள் அடிபட்டு இருக்காங்க. (warzone ல இருக்கு). Caetar ன்னு ஒரு உதவி நிறுவனம் (வெளிநாட்டு) அங்க உள்ள மக்களை பத்திரமா வேறு இடத்துக்கு மாத்த முயற்சி பண்றாங்க. அந்த வைத்தியசாலைல உள்ள அடிபட்டவங்களும், Caetar நிறுவனத்தாரும் அவங்கள போகவிடாம புலிகள் தான் தடுக்காராங்கன்னு சொல்றாங்க. இதுவே hindu இல்லாட்டி BBC ல வந்து இருந்தா கூட நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு தெரிஞ்சி அங்க உள்ள நிலைமையை ஓரளவுக்கு தைரியமா சொல்லி வரும் சேனல் al-jazeera. அவங்களும் அதே தான் சொல்றாங்க !

சின்னப் பையன் said...

:-((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
இலங்கை தமிழர் முரளிதரன் கூட தான் விளையாடறாரு ! அவர ஏன் திட்டி பதிவு போடமாட்டேன்னு சொல்றீங்க.

இன்னிக்கு al-jazeera நியூஸ் சேனல் பாத்தேன். ஒரு வைத்தியசாலைல மக்கள் அடிபட்டு இருக்காங்க. (warzone ல இருக்கு). Caetar ன்னு ஒரு உதவி நிறுவனம் (வெளிநாட்டு) அங்க உள்ள மக்களை பத்திரமா வேறு இடத்துக்கு மாத்த முயற்சி பண்றாங்க. அந்த வைத்தியசாலைல உள்ள அடிபட்டவங்களும், Caetar நிறுவனத்தாரும் அவங்கள போகவிடாம புலிகள் தான் தடுக்காராங்கன்னு சொல்றாங்க. இதுவே hindu இல்லாட்டி BBC ல வந்து இருந்தா கூட நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு தெரிஞ்சி அங்க உள்ள நிலைமையை ஓரளவுக்கு தைரியமா சொல்லி வரும் சேனல் al-jazeera. அவங்களும் அதே தான் சொல்றாங்க !///

என் பதிவு தமிழ் போராளிகளை ஆதரித்து இல்லை மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ச்சின்னப் பையன் said...
:-((((//

என் கடன் பணிசெய்து கிடப்பதே!!!!!!

மணிகண்டன் said...

சுத்தமா சம்பந்தமே இல்லாத மக்களை திட்டுகிறோமா நாம் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மணிகண்டன் said...
சுத்தமா சம்பந்தமே இல்லாத மக்களை திட்டுகிறோமா நாம் ?///

;-))))))