Monday, February 2, 2009

கலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..

ஐயா

வணக்கம்.

தங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது.சிலர் நீங்கள் பிரச்னைகளுக்கு பயந்து சும்மாவேனும் மருத்துவ மனையில் போய் படித்திருப்பதாக கூறுகின்றனர்.அதை நான் நம்பவில்லை.உங்களது அரசியல் வாழ்வில்...நீங்கள் சந்திக்காத பிரச்னைகளா? நீங்கள் சந்திக்காத போராட்டங்களா?நீங்கள் பார்க்காத மத்திய அரசா? அல்லது..நீங்கள் பார்க்காத எதிர்க்கட்சிகளா?

என்ன ஒன்று...அப்போதெல்லாம்...உங்களுக்கு கட்டுப்பட்ட பிள்ளைகள் இருந்தனர்...இப்போதோ அது இல்லை அவ்வளவுதான்.

கட்சியை அண்ணாவிற்குப் பிறகு...பல சோதனைகள் வந்த போதும்..கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என கட்டிக்காத்தவர் நீங்கள்.ஒரு சமயம் ,அண்ணா வின் மறைவிற்குப் பின் அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கி வைத்திருந்த நீங்கள்...சமீப காலத்தில் அதை தொலைத்து விட்டீர்களோ...என சந்தேகம் எங்களுக்கு.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்..தீக்குளித்த வீரர்களை வைத்து அரசியல் பண்ணவில்லையா நீங்கள்? இலங்கை தமிழனுக்காக உயிர் நீத்த முத்துகுமாரின் மரணத்தை அரசியல் பண்ண வேண்டாமென்கிறீர்களே! ஏன்.,இது உங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதாலா...அல்லது..நடக்கும் ஆட்சியில் நீங்கள் முதல்வர் என்பதாலா?

சேது சமுத்திர திட்டத்திற்கு..முழு அடைப்புக்கு குரல் கொடுத்த..நீங்கள்..அ,தி.மு.க.,உச்ச நிதிமன்றம் சென்றதாலும்..நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததாலும்..வெறும் உண்ணாவிரதத்துடன் நிறுத்திக்கொண்டதாக அறிவித்தீர்கள்.(இல்லை..பந்த் இருந்தது என்றும்..நீதிமன்ற அவமதிப்பு என்றும் அ.தி.மு.க.முறையிட அந்த வழக்கு நிலுவையில் உள்ளது)

இந்நிலையில்...வருகின்ற 4ஆம் தேதி..பந்த் அறிவித்துள்ளனர் சில இயக்கங்கள்.உடனே ..எங்கே..அவர்கள் வெற்றிப்பெற்றுவிடுவார்களோ..என ..'பந்த் கூடாது...நீதிமன்ற அவமதிப்பு'என ஓலமிடு
கிறீர்கள்.மாமியார் உடைத்தால் மண்குடம்....என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் வேறு வருகிறதே..என்ற கவலை வேறு உங்களுக்கு..காங்கிரஸ் உங்களை கழட்டி விட்டால் நன்றாய் இருக்கும் என எண்ணுகிறோம்..அப்போதாவது..வீரமான..எங்கள் முதல்வரைப் பார்க்க எங்களால் முடியும்.

இலங்கை தமிழர்கள் பற்றி மறந்து விடுங்கள்...உங்கள் வீட்டில்..உறவினர் பலருக்கு..இன்னும் கட்சிப் பதவி கொடுக்கப் படவில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.இன்னும்..வட மண்டல செயலர் பதவி,தென் மண்டல,வட மண்டல பொருளாளர்கள் பதவிகள் காலியாக உள்ளன. உறவு காத்திருக்கிறது.

விரைவில்..உடல் நலம் தேறி...வந்து..கழகப்பதவிக்கான இடங்களை நிரப்புங்கள்.

என்றும் நீங்கள் சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும்

அப்பாவி தொண்டர்களில் ஒருவன்.

22 comments:

ராஜ நடராஜன் said...

பெரும்பாலோரின் மனநிலைகளை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது.கலைஞர் இவ்வளவு சாதித்து விட்டு ஏன் குழம்புகிறார் எனத் தெரியவில்லை.

Unknown said...

http://girirajnet.blogspot.com/2009/02/blog-post.html

சிவாஜி த பாஸ் said...

"கலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்.."
'
மன்னாதி மன்னர் கருணாநிதி மற்றும் மன்னர் மன்னர் குடும்பம் தொடர்ந்து ஆள இருக்கும் போது நம்மை போன்ற சில கோடி அடிமை தமிழனுக்கு கவலை ஏது...? (நீங்கள் மன்னருடைய தொண்டரா? உங்கள் தலைப்பு!)

மோகன் said...

கருணாநிதியை 'இன்ன்ன்ன்ன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அன்புத் தொண்டரெ....கவலைக்கொள்ளாதீர்..
கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் விரைவில் வெளிப்படும்.3ம் தேதி நடக்கயிருக்கும் கட்சிக்கூட்டத்தில் தடாலடியாக தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் ராஜினாமா என்ற குறைந்தப்பட்ச அறிவிப்போ அல்லது முதல்வர் பதவி ராஜினாமா என்ற அறிவிப்போ வெளியிட்டு, முத்துக்குமார் மரணத்தால் ஏற்ப்பட்டுள்ள உணர்ச்சித்தீயை பயன்படுத்தி,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடையை நடத்தி 40 தொகுதியிலும் வெற்றிப்பெற முயற்சிப்பார்.

உங்களைப் போன்ற தொண்டர்களும்,அவரின் தமிழினப்பற்று, பதவியை தோள்துண்டுப்போல துச்சமென நினைத்து உதறியப்பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர்சார்ந்தக் கூட்டணிக்கு ஓட்டளிப்பீர்கள்.

எப்படியோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.எம்பி பதவி,அமைச்சர் பதவி இழப்பால் அவருக்கு பெருத்த நஷ்டம் கிடையாது. தமிழீழ மக்களுக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என்கிற அவரது கோஷம்,வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அவரின் 'தமிழி(ஈ)னத் தலைவர்' என்ற இமேஜிற்கு பங்கம் வராமல்,பெரும்பாலான தொகுதியில் வெற்றிப்பெற்று,மீண்டும் காங்கிரஸோ,பிஜேபியோ ஏதாவதொரு கூட்டணியில் சேர்ந்து அவரின் புதல்விக்கும்,பேரன்களுக்கும் மந்திரிப்பதவி வாங்கிக்கொடுத்து, குடும்பங்களையும்,தொழில்களையும் செவ்வன செய்துக்கொள்வார்கள்.

கருணாநிதிக்கு அவர் கையில் சுக்கான் இருக்கவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கானஎவ்விதப்போராட்டமும் அவர் தலைமையில் நடந்தால்தான் அவரால் ஓட்டு அறுவடை செய்யமுடியும்.அவரின் ஒரேப் பிரச்சனை... முத்துக்குமாரின் மரணமும், அதையொட்டி எழுந்துள்ள இளைநர்களின் எழுச்சியும்.அவர் கண்டிப்பாக எதிர்ப்பாராத அதிர்ச்சி திருப்பம்.இதை நீர்த்துப்போகச் செய்யவே,கல்லூரிகள் காலவரையற்ற மூடல், முழுஅடைப்புக்கு எதிர்ப்பான அரசின் அறிவிப்பு.

பொறுத்திருந்துப் பார்க்கலாம்...என் கணிப்புகள்,நிஜமாகப்போகிறதா..இல்லையா என்பதை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ராஜ நடராஜன் said...
பெரும்பாலோரின் மனநிலைகளை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது.கலைஞர் இவ்வளவு சாதித்து விட்டு ஏன் குழம்புகிறார் எனத் தெரியவில்லை.///


உன்னால நான் கெட்டேன்..என்னால நீ கெட்டாய் கதைதான்..
இவருக்கு காங்கிரஸை விட்டால் வேறு கதி இல்லை...அங்கும் அப்படித்தான்...அதுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வாமுகோமு said...
http://girirajnet.blogspot.com/2009/02/blog-post.html//

படித்தேன்...நல்ல அலசல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சிவாஜி த பாஸ் said...
...? (நீங்கள் மன்னருடைய தொண்டரா? உங்கள் தலைப்பு!)//

:-))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் said...
உங்களைப் போன்ற தொண்டர்களும்,அவரின் தமிழினப்பற்று, பதவியை தோள்துண்டுப்போல துச்சமென நினைத்து உதறியப்பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர்சார்ந்தக் கூட்டணிக்கு ஓட்டளிப்பீர்கள்.//

:-))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனது முந்தைய பதிவுகளை படித்திரிக்கிறீர்களா...மோகன்

நசரேயன் said...

அவரிடம் சேர்க்கப் பட வேண்டிய கடிதம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
அவரிடம் சேர்க்கப் பட வேண்டிய கடிதம்//

வருகைக்கு நன்றி நசரேயன்

ILA (a) இளா said...

சாணக்கியனாவே இருந்துப் பழகிவிட்ட தலைவருக்கு இது ஒரு சோதனைக்காலம். அவ்வளவே, மீண்டு வருவார், பொறுப்பை சரியான இடங்களில் ஒப்படைப்பார்..


எதைச் சொன்னாலும் நம்பும் உண்மை Woodenபிறப்பு

இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ILA said...
சாணக்கியனாவே இருந்துப் பழகிவிட்ட தலைவருக்கு இது ஒரு சோதனைக்காலம். அவ்வளவே, மீண்டு வருவார், பொறுப்பை சரியான இடங்களில் ஒப்படைப்பார்..


எதைச் சொன்னாலும் நம்பும் உண்மை Woodenபிறப்பு

இளா//

வருகைக்கு நன்றி இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ILA said...
Woodenபிறப்பு///

:-)))))))

தமிழன் said...

தமிழா தமிழா நான் கலைஞரின் தீவிர தொண்டன் எப்படிப்பட்ட தொண்டன் தெரியுமா தேர்தலில் பல லட்சங்களை வாரி இறைத்து கட்சி உழைத்தவன் ( சத்தியமாக நான் கட்சி பெயரை சொல்லி இதுவரை சம்பாதித்து இல்லை) . நான் இறந்தால் கூட தி.மு.கவின் கொடி போர்த்தி எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் ஏன் தெரியுமா கலைஞரின் தமிழிற்காக நான் சொல்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக அவரின் அறிக்கைகள் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு புரியும் அவர் பதவிக்கு அடிமையாகிவிட்டார். இப்போது சொல்கிறேன் தி.மு.கவிற்கு முடிவுரை கருணாநிதியின் காலத்திலே அரங்கேறிவிடும்.


:-(((((((((((((

kurinjil said...

ennaga sir ippadi porupilama pesuringa ...nega solra mathiri ellam yochicha eppadi uthayanithi payanuku posting kodukirathu...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///திலீபன்- said...
தமிழா தமிழா நான் கலைஞரின் தீவிர தொண்டன் எப்படிப்பட்ட தொண்டன் தெரியுமா தேர்தலில் பல லட்சங்களை வாரி இறைத்து கட்சி உழைத்தவன் ( சத்தியமாக நான் கட்சி பெயரை சொல்லி இதுவரை சம்பாதித்து இல்லை) . நான் இறந்தால் கூட தி.மு.கவின் கொடி போர்த்தி எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் ஏன் தெரியுமா கலைஞரின் தமிழிற்காக நான் சொல்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக அவரின் அறிக்கைகள் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு புரியும் அவர் பதவிக்கு அடிமையாகிவிட்டார். இப்போது சொல்கிறேன் தி.மு.கவிற்கு முடிவுரை கருணாநிதியின் காலத்திலே அரங்கேறிவிடும்.


:-(((((((((((((//

நீங்கள் சொல்வது போல..நானும் கலைஞரின் தீவிர தொண்டன்...காமராஜரின் மறைவிற்குபின்.ஏனெனில்..கலைஞர் மக்கள் நலம் விரும்புபவர் என்பதால்...ஆனால்...சமிபகால அவர் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பவையாகவே இருக்கிறது.இருந்தாலும்...குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் ..என்ற குறள் படி பார்த்தால்...கண்ணுக்கு..கலைஞர் தவிர யாரும் தெரியவில்லையே!திலீபன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//kurinjil said...
ennaga sir ippadi porupilama pesuringa ...nega solra mathiri ellam yochicha eppadi uthayanithi payanuku posting kodukirathu...//

:-))))))))))

வருகைக்கு நன்றி kurinjil

மணிகண்டன் said...

*********** கண்ணுக்கு..கலைஞர் தவிர யாரும் தெரியவில்லையே!திலீபன் ************

மேடம் கிட்ட சொல்லி ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட அழைச்சிக்கிட்டு போக சொல்லணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
*********** கண்ணுக்கு..கலைஞர் தவிர யாரும் தெரியவில்லையே!திலீபன் ************

மேடம் கிட்ட சொல்லி ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட அழைச்சிக்கிட்டு போக சொல்லணும்.//

:-)))))))))))))

"உழவன்" "Uzhavan" said...

ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
இனியாவது இவரை தமிழனத்தலைவர் என்று சொல்லாமல் இருப்போம்; சொல்பவரை கல்லால் அடிப்போம்.
பதவி சுகம் கண்டதால், பாவம் தமிழினத்தையே அவர் மறந்துவிட்டார் போலும். இப்போது கலைஞரின் கவலையெல்லாம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பதுதான்.
வெற்றி பெறாது என்று அவருக்குத் தோன்றியிருந்தால், எப்போதோ எல்லா எம்.பி களையும் ராஜினாமா செய்ய சொல்லி காங்கிரஸிலிருந்து வெளியேரியிருப்பார். இந்த விஷயத்தில் இன்னும் அவரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

அடுத்த ஆட்சியில ஸ்டாலின் வாரிசுகளுக்கும், அழகிரி வாரிசுகளுக்கும் பதவி குடுக்கனும்ல... எல்லா குடும்பத்தையும் அவரு பணம், பதவி குடுத்து சரிக்கட்டலேனா, அவருக்கு கொல்லி போடுற நேரத்துல கூட சண்டை போட்டாலும் போடுவாங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி " உழவன் " " Uzhavan "