Tuesday, February 24, 2009

அதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்...

நம் திரையுலகில் ஒரு படம் வெற்ரிப்பெற்றால்...தொடர்ந்து..அதே பாணியில் படங்கள் வரும்.,

ஆனால்..ஸ்லம்டாக்...படம் ஆஸ்கார் விருதுகளைக் குவித்ததால்...அண்ணாசாமிக்கும் படம் எடுக்கும் ஆசையும்..அதற்கு ஆஸ்கார் வாங்கும் ஆசையும் வந்துவிட்டது.ஆனால்..அவர் புத்திசாலியாயிற்றே!அதனால்..ஸ்லம்..படத்திர்கு பதில் பாஷ் ஃபாக்ஸ் (posh fox) படம் எடுக்க தீர்மானித்து விட்டார்.

மேலும் இந்தியாவில்..வசதிப்படைத்தவர்களும் இருக்கிறார்கள் என உலகுக்கு தெரிவிக்கப்போகிறாராம்.அவர் இந்த படத்தில் சொல்ல ஆசைப்படுவது...

ஒரு ஏழை...வயிற்றுக்கு இல்லாமல்...கிராமத்திலிருந்து சென்னை வருகிறான்.அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து..அக்கட்சி தலைவரின் பிரதம சீடன் ஆகிறான்.அப்போது..'தல ஹோ..தல ஹோ' ன்னு ஒருபாடல்.மக்களை எப்படி ஏமாற்றும் வழிகளை அறிகிறான்.உண்ணாவிரதம் என்று காலையில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விட்டு..10 மணிக்கு வந்து உண்ணாவிரத மேடையில் உட்கார்ந்து..உண்ட மயக்கத்தில் தூக்கம் போட்டு...பார்க்கும் மக்கள்..பாவம்..சாப்பிடாமல் சோர்வு..என சொல்ல வைக்கிறான்.

பொது மக்களுக்கு செய்யும் அனைத்து சேவையிலும்..கமிஷன் அடிக்கிறான்..கவுன்சிலர்.ஆகி..ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறான்...அடுத்த சட்டசபை தேர்தலில்..எம்.எல்.ஏ.,ஆகி..லட்சக்கணக்கில் ஊழல் புரிகிறான்...அந்த தகுதியே..அவனுக்கு நாடாளுமன்ற தேர்தலில்..எம்.பி.,சீட் வாங்கி கொடுக்கிறது..பதவி உயர்வு...என்றதும்..ஊழல் அளவும் உயர்கிறது...இப்போது கோடிக்கணக்கில் ஊழல்..
இடையிடையே..மக்கள் சேவையே..என் லட்சியம்...என மக்களுக்காக சில போராட்டங்கள்.

மக்களும்...நமக்கு இந்த தன்மானத் தலைவனை விட்டால்..வேறு இல்லை...என சொல்ல வைக்கிறான்.மொத்தத்தில்..பணக்கார..கோடீஸ்வரர்களிடையே ஒரு குள்ளநரியாய் (அப்பாடி படப்பெயர் வந்துவிட்டது..posh fox)செயல் படுகிறான்.

நாட்டின் எழ்மையைக்காட்டி..ஆஸ்கார் வாங்கிய..ஸ்லம்...போல்...நாட்டின் மக்களை சுரண்டும் ஒரு பணக்காரவர்க்கத்தைக் காட்டி..அடுத்த ஆண்டு தான் ஒரு ஆஸ்கார் வாங்க தீர்மானித்து விட்டார் அண்ணாசாமி.படத்தை இயக்க ஒரு வெளிநாட்டு இயக்குநரையும் தேடிக்கொண்டிருக்கிறாராம்.

10 comments:

பூச்சாண்டியார் said...

ஆஸ்கார் வாங்க வாழ்த்துக்கள்.. ;)

ஆண்ட்ரு சுபாசு said...

அண்ணாச்சாமி தமிழ் நாடு தானே?

மக்கா போஸ்டர் அடி ...அண்ணாச்சாமியால் தமிழனுக்கு பெருமை ..

வரிவிலக்கு அளித்த ..அமைச்சருக்கு நன்றி .

நாங்க இத ஒரு விழா மாதிரி கொண்டாடுறோம்

பல பல ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாங்க இத ஒரு விழா மாதிரி கொண்டாடுறோம் //

செஞ்சிடுவோம்...

வருகைக்கு நன்றி சுபாசு

goma said...

இந்தியாவின் ஏழ்மையைக் காட்டி ஆஸ்கார் தேவையா என்று பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பணக்காரர்களைக் காட்டி படமெடுத்தால்,இந்தியாவின் மானம் இன்னும் கப்பல் ஏறும் .

சத்யம் நிறுவனத்தை வைத்து எடுத்தால் 10 ஆஸ்கார் வாங்கலாம்.

ஏழ்மையாக இருப்பதற்கு யாரையும் ஏமாற்ற வேண்டாம் அவர்கள் புனிதமானவர்கள் அவர்களை வைத்துப் படமெடுத்தால் தப்பில்லை.

பணம் சேர்த்தவனின் கதையின் ஆரம்பமே ,ஏமாற்று,நம்பிக்கை துரோகம், தில்லு முல்லு...இவைகளை காட்ட வேண்டுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பணம் சேர்த்தவனின் கதையின் ஆரம்பமே ,ஏமாற்று,நம்பிக்கை துரோகம், தில்லு முல்லு...இவைகளை காட்ட வேண்டுமா?///

கண்டிப்பாக காட்டப்படவேண்டும்

சின்னப் பையன் said...

:-))))))))

அத்திரி said...

நல்ல நகைச்சுவை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அத்திரி...நீண்ட நாட்களாக காணோம்..என்னாச்சு
வருகைக்கு நன்றி