வரும் நாடாளுமன்றதேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும்..எந்த கூட்டணி வெல்லும்..என்றெல்லாம்..கட்சிகள் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில்..அண்ணாசாமி ஒரு கணக்கு சொல்கிறார்.
சென்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்...தி.மு.க.,பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சிகள்,காங்கிரஸ் என வலுவான கூட்டணி அமைந்ததால்...தி.மு.க.வும் இட ஒதுக்கீட்டில் தனது பங்கை குறைத்துக் கொண்டது.அ.தி.மு.க., எதிர்பார்த்ததற்கு மேல்..சொத்தை கட்சியை கூட்டணியில் வைத்தும்..இடங்களை வென்றது.விஜய்காந்த் வேறு தன் பங்குக்கு ஓட்டுகளை பிரித்து..தி.மு.க.விற்கு உதவினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை..எல்லா கட்சிகளும் முடமாகவே இருக்கின்றன.கூட்டணிகட்சிகள் என்ற ஊன்றுகோல் இல்லாமல் இவர்களால் தனித்து நிற்கமுடியாது.வெல்லவும் முடியாது.
அதனால்தான்..பா.ம.க.,இன்னும் கூட்டணி விட்டு வர முடியவில்லை.
அதனால்தான்..அ,தி.மு.க., காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கிறது.
அதனால்தான் தி.மு.க.,சோனியாவை சொக்கதங்கம் என்கிறது.
அதனால்தான் மொய்லி தி.மு.க.உடன் கூட்டணி வலுவாக இருக்கிறது என்கிறார்.
அதனால்தான்..நேற்றுவரை கூட்டணி இல்லை என்றவர்..இன்று பரிசீலிப்போம் என்கிறார்..தேர்தலை புறக்கணிப்போம் என்கிறார்.
இவர்கள் எல்லாம் ஒன்றை மறந்துவிட்டனர்..இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மக்கள். அவசரநிலை பிரகடனப்படுத்தபின் வந்த தேர்தலில்..காங்கிரஸ் ..மக்களால் புறக்கணிக்கப் பட்டது.இந்திரா காந்தி...அரசியல் கோமாளி எனப்பப்பட்ட ராஜ்நாராயணனிடம் தோற்றார்.
ஆகவே..கட்சி தலைவர்களே..மக்களுக்கு எல்லாம் தெரியும்...நீங்கள் யாருடன் வலுவான கூட்டு வைத்தாலும்...இம்முறை தமிழனை ஏமாற்றமுடியாது.
அவன் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறான்..முதலில் அவனை சாந்தப் படுத்துங்கள்.
இல்லையேல்..உங்களுக்கு சங்குதான்.
6 comments:
//இம்முறை தமிழனை ஏமாற்றமுடியாது. அவன் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறான்..முதலில் அவனை சாந்தப் படுத்துங்கள். இல்லையேல்..உங்களுக்கு சங்குதான்.
உண்மை.. ஆனால் மக்களும் கடைசி நேரத்தில் சொதப்பாமல் இருக்க வேண்டுமே..
அருமையான கருத்துக் கணிப்பு.
மக்கள் கொஞ்சம்[நானும்தான்]சிந்தித்து செயல் படவேண்டும்.இது போல் கருத்துக்களை எழுதி ,தமிழர்களைத் தட்டி எழுப்புங்கள்
வருகைக்கு நன்றி
பூச்சாண்டியார்
வருகைக்கு நன்றி goma
//இம்முறை தமிழனை ஏமாற்றமுடியாது.//
தமிழன் என்று இல்லாமல் எல்லா (மாநில) வாக்காளர்களையுமே இது குறிக்கும்.
:)
நல்ல பதிவு. அரசியல்வாதிகளை அறிந்த மக்கள் உண்டு, மக்களை புரிந்து கொள்ளும் அரசியல் வாதிகள் இல்லை.
புரிந்து கொள்ளும் அரசியல் வாதிகளாக இருந்தால் அடுத்த தேர்த்தலில் தூக்கி அடிக்கப்படுவார்களா ?
வருகைக்கு நன்றி
கோவி.
Post a Comment