1.ரௌடித்தனம் பண்ணி பணம் சம்பாதிச்சுக் கிட்டிருந்த கேடி கபாலிக்கு வேலை கிடைச்சிருக்கிறதே..
என்ன வேலை
போலீஸ் கான்ஸ்டபிளாக.
2.படத்திலே சம்பந்தமே இல்லாம ஒரு டெம்போ அடிக்கடி வருதே ஏன்?
படத்தில டெம்போ இல்லைன்னு..யாரும் சொல்லக்கூடாது..இல்லையா..அதனால்தான்
3.உன் பாட்டியை ஆம்புலன்ஸ்ல எங்கே அழைச்சுக்கிட்டுப் போறே..
பாட்டிக்கு உடம்பு சரியில்லை..லீவு வேணும்னா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்..அதான் நேரே அழைச்சுக்கிட்டுப் போறேன்
4.தலைவருக்கு எடைக்கு எடை அவுல் கொடுக்கறாங்களே..ஏன்?
எப்போதும் வெறும் வாயை மெல்லுகிறாராம்
5.அப்பா..200 கிராம் டூத் பேஸ்ட்ல..எவ்வளவு பேஸ்ட் இருக்கும்..
காற்றுப்போக 100 கிராம் இருக்கும்
6.உங்க கல்யாணத்திற்கு வரமுடியல...சாரி..
அதனால பரவாயில்லை...இப்பக்கூட நீங்க் மொய் எழுதலாம்.
7.என்ன டாக்டர்..வயிற்றில ஸ்டெத்தை வைச்சு தலையை ஆட்டிக்கிட்டு இருக்கீங்க?
உஷ்...சத்தம் போடாதீங்க..உள்ள வலையப்பட்டி ரேஞ்சுக்கு தவுல் வாசிக்கிற சத்தம் வருது
8 comments:
.அப்பா..200 கிராம் டூத் பேஸ்ட்ல..எவ்வளவு பேஸ்ட் இருக்கும்..
காற்றுப்போக 100 கிராம் இருக்கும்
இது நிஜமான விஷயம்.கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போகாமல் நாமே சிரிச்சுக்க வேண்டியதுதான்
//6.உங்க கல்யாணத்திற்கு வரமுடியல...சாரி..
அதனால பரவாயில்லை...இப்பக்கூட நீங்க் மொய் எழுதலாம்.//
ஹிஹி. என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வரலே... ஞாபகம் வெச்சிக்குங்க...
:-))
//3.உன் பாட்டியை ஆம்புலன்ஸ்ல எங்கே அழைச்சுக்கிட்டுப் போறே..
பாட்டிக்கு உடம்பு சரியில்லை..லீவு வேணும்னா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்..அதான் நேரே அழைச்சுக்கிட்டுப் போறேன்//
பா(ட்)டி பாவம் !
///ச்சின்னப் பையன் said...
ஹிஹி. என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வரலே... ஞாபகம் வெச்சிக்குங்க....///
அதனாலென்ன..சஹானாவோட கல்யாணத்திற்கு இருபது வருஷம் கழிச்சு வரமாட்டேன்..அப்போ சேர்த்து மொய் எழுதிடறேன்.
வருகைக்கு நன்றி கோவி.
வருகைக்கு நன்றி goma
i am back.
kudukuduppai
//i am back.
kudukuduppai//
ரொம்ப நாளா காணுமே என்னவாச்சு...நசரேயன் பின்னூட்டத்திலக் கூட கேட்டிருந்தேன்
Post a Comment