Sunday, February 8, 2009

அலட்சியப்படுத்தப்பட்ட இலட்சிய நடிகர்..

சிவாஜி கணேசனுடன்..பராசக்தியில் அறிமுகமானவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.கலைஞரின் வசனத்தை..ஆணித்தரமாக பேசுவதிலும்...சிவாஜியையும்.இவரையும் விட்டால் தமிழ்த் திரையில் வேறு எவரும் இல்லை எனலாம்.

குலதெய்வம் படத்தில்...நீண்டநேரம்..இவர் பேசும் வசனம்..அப்படம் வெற்றிக்கு ஒரு காரணமாய் இருந்தது எனலாம்.

தி.மு.க.,வின் ஆரம்பகால வளர்ச்சியில் இவர் பங்கும் அதிகம் உண்டு.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கும் உண்டு.அதேபோல..திரைஉலகை சேர்ந்த நடிகர் ஒருவர் எம்.எல்.ஏ., ஆவதை..முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர்.நாடாளுமன்றத்தில் இவர் எம்.பி.யாக இருந்தபோது..மன்னர் மான்ய ஒழிப்பு மசோதாவில்...இவர் ஓட்டுப் போடாததால்..மசோதா தோல்வி அடைந்தது.இவரது அந்த செயல்..கட்சியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.பதிவு அதைப்பற்றியில்லாததால்..அந்த விஷயம் பற்றி..மேலும் எழுத விரும்பவில்லை.

திரைஉலகைப் பொறுத்தவரை இலட்சிய நடிகர் என்ற பட்டத்துடன் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பல..அவற்றுள் குறிப்பிடத்தக்கவை...சாரதா,குமுதம்,உல்லாசபயணம்,தை பிறந்தால் வழி பிறக்கும்,நானும் ஒரு பெண்,காக்கும் கரங்கள்,அன்பு எங்கே?பூம்புகார்.. ஆகிய படங்களை சொல்லலாம்.

இவர்கள் சார்ந்த கட்சிகள் வேறு வேறாய் இருந்தாலும்...சிவாஜியுடன் இருந்த நட்பால்..அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தப் படங்கள் பல..அவற்றுள் சில...தெய்வப்பிறவி,கை கொடுத்த தெய்வம்,குங்குமம்,பச்சை விளக்கு.

எஸ்.எஸ்.ஆரே..தயாரித்து..இயக்கிய சில படங்கள்..அல்லி,மணிமகுடம்,தங்க ரத்தினம்.தன்னுடன் நடித்த விஜயகுமாரியை..தனது இரண்டாம் தாரமாய் ஆக்கிக்கொண்டார்.இந்த ஜோடி பல நல்ல படங்களையும் கொடுத்தது.

எம்.ஜி.ஆருடன் இவர் நடித்தது..காஞ்சித்தலைவன்.ராஜாதேசிங்கு ஆகிய இரு படங்கள்
சில நடிகர்களுடன் ஒப்பிடுகையில்..இவரது சாதனை அதிகம் என்றாலும்...அதற்கேற்றால் போல இவர் தமிழக அரசால் கௌரவிக்கப்படவில்லை.

ஆனால்..ஒன்று..ஒரு கலைஞன் தன் வாழ்நாளில்..அவனைவிட திறமைக் குறைந்தவர்களுக்கு..கிடைக்கப்படும் அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லையே..என்று மனம் புழுங்கக்கூடாது.

14 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

RV said...

MGR & SSR acted together in Raja Desingu as well.

நையாண்டி நைனா said...

/*ஆனால்..ஒன்று..ஒரு கலைஞன் தன் வாழ்நாளில்..அவனைவிட திறமைக் குறைந்தவர்களுக்கு..கிடைக்கப்படும் அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லையே..என்று மனம் புழுங்கக்கூடாது. */

இது, தற்போதைய அரசியல் நிலவரத்திற்க்கும் பொருந்தும் போல் இருக்கிறதே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...தகவலுக்கும் நன்றி ஆர்.வி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

////நையாண்டி நைனா said...
/*ஆனால்..ஒன்று..ஒரு கலைஞன் தன் வாழ்நாளில்..அவனைவிட திறமைக் குறைந்தவர்களுக்கு..கிடைக்கப்படும் அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லையே..என்று மனம் புழுங்கக்கூடாது. */

இது, தற்போதைய அரசியல் நிலவரத்திற்க்கும் பொருந்தும் போல்///


நையாண்டி ?????!!!!!
:-))))

நையாண்டி நைனா said...

நையாண்டியா இது? உண்மை இல்லையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
நையாண்டியா இது? உண்மை இல்லையா?//


உண்மை நையாண்டி நைனா

மணிகண்டன் said...

:)-

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மணிகண்டன் said...
:)-///

:-))))))))

மணிகண்டன் said...

சார்,
உங்க மகாபாரத பதிவ அப்டேட் பண்ணவே இல்ல. அதவிட என்ன வேல உங்களுக்கு !!! ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணி சொன்னால் நான் கேட்காமலா இருப்பேன்...எனது அடுத்த நாடக script எழுதிக்கொண்டிருக்கிற படியால்..நேரம் கிடைக்கவில்லை.ஆனாலும் நீங்கள் சொன்னதால் இன்று ஒரு பதிவு இட்டுள்ளேன்.

நசரேயன் said...

நல்ல தகவல் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

goma said...

இன்று அவார்டுகளும்,பட்டங்களும் செல்லும் இடம் கண்டால்,” நல்ல வேளை நமக்கு இல்லை” என்று யோசிக்கும் வண்ணம் ,நடுநிலைமை இன்றி அமைந்திருக்கிறது.