Thursday, December 17, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-12-09)

ஒரு நாட்டுப்புறக் கதை...

மகன் ; அப்பா இந்த யானை எப்படி செத்துப் போச்சு

அப்பா- தந்தம் எடுக்கறதுக்காக கொன்னுட்டாங்க

மகன்-தந்தம் எடுத்து என்ன பண்ணுவாங்க...அப்பா

மகன்-யானை பொம்மை செய்வாங்க..

அதாவது உயிருள்ள யானையைக் கொன்று..ஷோ கேசில் வைக்க பொம்மை யானை தயாரிப்பார்கள் நாகரிக மனிதர்கள்.

2)பலமுடையவர்கள் உழைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள்.பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்

3)வாழ்க்கையில் செல்வம் குறைந்துப் போனால் அது ஒரு இழைப்பே அல்ல.ஆரோக்கியம் குறைந்தால் ஓரளவு இழப்பு.உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்

4) இழி மொழியால் எவரையும் தாக்கத் தேவை இல்லை.தமிழை அத்தகைய தகாத செயலுக்கு பயன் படுத்துதல் கூடாது.நமது உள்ளத்தை திறந்துக் காட்ட, உறுதியை வெளிப்படுத்தவே தமிழைப் பயன் படுத்த வேண்டும். -அறிஞர் அண்ணா

5) காலத்திற்கேற்ப கோபத்தையும்..பொறுமையையும் மேற் கொள்ள வேண்டும்.தண்ணீரை அளவுடன் சூடு பண்ணிக் குளிப்பது போல கோபம் அளவுடன் இருக்க வேண்டும்.சீறும் நாகங்கள் தான் பூஜிக்கப் படுகின்றன.

6)ஒரு கவிதை

கோடாரியுடன்

வெட்ட வந்தவன்

வியர்வை காய

இளைப்பாறினான்

விரிந்த மரத்தின்

பரந்த நிழலில்

- ராஜகுமரன்

7)ஒரு ஜோக்

தலைவர் தினமும் ஏன் கடற்கரைக்குப் போகிறார்

அனுதாப அலை இருந்தால் தேர்தலில் வெல்லலாம் என ஜோதிடர் சொன்னாராம்.அனுதாப அலை வீசுகிறதா எனப் பார்க்கவே தினமும் போகிறார்

26 comments:

பூங்குன்றன்.வே said...

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்-சுவை கூட.

குறிப்பாக இந்த 'வாழ்க்கையில் செல்வம் குறைந்துப் போனால் அது ஒரு இழைப்பே அல்ல.ஆரோக்கியம் குறைந்தால் ஓரளவு இழப்பு.உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்' கருத்து ரொம்ப பிடித்திருந்தது.

vasu balaji said...

4ஐ அவர் தம்பிகளைப் போல் உதாசீனம் செய்பவர்கள் வேறொருவர் இல்லை. எல்லாம் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பூங்குன்றன்.வே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வானம்பாடிகள்.

நீங்கள் சொல்வது உண்மை

மணிஜி said...

நல்லாயிருக்கு சார்

க.பாலாசி said...

முதல் விசயம் உண்மையில் நச்சின்னு இருக்கு...கவிதையும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
நல்லாயிருக்கு சார்//


வருகைக்கு நன்றி maniji

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

aazhimazhai said...

ரொம்ப நல்லா இருக்கு

ஹேமா said...

எல்லாமே நல்லாருக்கு.ரசிச்சேன்.
கவிதை நாலு வரில நல்லதைச் சொல்லியிருக்கீங்க.

ரோஸ்விக் said...

கதையிலேயிருந்து கவிதை வரை பல நல்ல கருத்துக்கள் உயிரோடிருக்கின்றன நண்பா!

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு டிவிஆர்!கவிதை அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//aazhimazhai said...
ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி aazhimazhai

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
எல்லாமே நல்லாருக்கு.ரசிச்சேன்.
கவிதை நாலு வரில நல்லதைச் சொல்லியிருக்கீங்க.//


வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரோஸ்விக் said...
கதையிலேயிருந்து கவிதை வரை பல நல்ல கருத்துக்கள் உயிரோடிருக்கின்றன நண்பா!//

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பா.ராஜாராம் said...
நல்லா இருக்கு டிவிஆர்!/


நன்றி பா.ரா.

ப்ரியமுடன் வசந்த் said...

//உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்
//

சரியா சொன்னீங்க டி.வி.ஆர் சார்

வரதராஜலு .பூ said...

சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வசந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வரதராஜலு .பூ said...
சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்//

வருகைக்கு நன்றி வரதராஜலு

Starjan (ஸ்டார்ஜன்) said...

சுவை ரொம்ப அருமை

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு சார்.

தாராபுரத்தான் said...

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் ...எல்லாமே நல்லா இருந்தது,,முதல் வணக்கம் சாா்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சுவை ரொம்ப அருமை//


வருகைக்கு நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
நல்லாயிருக்கு சார்.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்பன் said...
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் ...எல்லாமே நல்லா இருந்தது,,முதல் வணக்கம் சாா்


முதல் வருகைக்கு நன்றி அப்பன்