Saturday, December 12, 2009

வாய் விட்டு சிரியுங்க

1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட படிப்படியா 18 நாள் மருந்து சாப்பிடணும்னு சொல்வார்.

2.அந்த டாக்டர் முன்னாலே சினிமா டைரக்டரா இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு சொல்றாரே!!

3.புயல் மழையாலே மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

5.உன் பையன் புதுசா..ஏதோ பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.

6.கல்யாணம் ஆனதிலே இருந்து..வனஜாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன் அருமையா சமைக்கிறானாம்.

17 comments:

மாதேவி said...

"வாய்விட்டு சிரியுங்க" டொக்டர் ஜோக்ஸ், சீரியல் ஜோக் நன்றாய் ரசித்துச் சிரித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி

பூங்குன்றன்.வே said...

பிடித்த ஜோக்ஸ் அந்த 1,2 & 6..

சூப்பர் பாஸ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பூங்குன்றன்.வே

சிநேகிதன் அக்பர் said...

எல்லா ஜோக்குகளும் அருமை. குறிப்பா டாக்டர் ஜோக்.
கலக்குறீங்க் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல ஜோக்ஸ் துணுக்குகள் நல்லாருக்கு

:-))))

vasu balaji said...

எல்லாமே அருமை.அதிலும் கடைசி ரொம்ப பிரமாதம்.

புதுப்பாலம் said...

ஔஅருமையாக ஜோக்குகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல ஜோக்ஸ் துணுக்குகள் நல்லாருக்கு

:-))))//


நன்றி starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
எல்லாமே அருமை.அதிலும் கடைசி ரொம்ப பிரமாதம்.//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புதுப்பாலம் said...
ஔஅருமையாக ஜோக்குகள்//

நன்றி புதுப்பாலம்

அத்திரி said...

கடைசி ஜோக்......................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.//

இப்படி நிறைய பேர் இருப்பாங்களோ..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.//

இப்போதைக்கு தமிழ்நாட்டில இந்த கோச்சிங் கிளாஸ்தான் இன்னும் ஆரம்பிக்கல..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு பதிவிற்கு பழனியிலிருந்து பின்னூட்டம் வந்தாத்தான் பதிவே களை கட்டுது.
வருகைக்கு நன்றி சுரேஷ்