Wednesday, December 23, 2009

கவிதை என்றால் இது கவிதை

கடற்கரையில்

மீன்களின் கவுச்சி நாத்தம்

என்றவன்

வீடுவந்ததும்

அடுக்களையில் இருந்த

இல்லாளிடம்

மீன் குழம்பு வாசனை

பிரமாதம் என்றான்

2) ஏரிகளின் மீது

கட்டப்பட்ட கல்லறைகள்

அடுக்குமாடி கட்டிடங்கள்

3)நேற்று வறட்சி

இன்று மழை வெள்ளம்

நாளை வரப்போவது

மீண்டும் வறட்சி

4)ஏழையின்

ஈர்க்குச்சிக் கால்கள்

எலும்பு கைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்றுச் சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

43 comments:

க.பாலாசி said...

//2) ஏரிகளின் மீது
கட்டப்பட்ட கல்லறைகள்
அடுக்குமாடி கட்டிடங்கள்//

நறுக்கென்ற வரிகள்...

கடைசியும் அருமை...

ராமலக்ஷ்மி said...

//ஏரிகளின் மீது

கட்டப்பட்ட கல்லறைகள்

அடுக்குமாடி கட்டிடங்கள்//

உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

க.பாலாசி
ராமலக்ஷ்மி

vasu balaji said...

சந்தேகமே இல்லை. இதுதான் கவிதை.:)

Muruganandan M.K. said...

நல்ல கவிதைகள்.
ஆயினும் முதல் கவிதையில் 'வீடுவந்ததும்' என்ற சொல் தேவையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வீடுவரை கவுச்சி நாத்த எண்ணத்தை சுமந்து வருவதால் அந்த வார்த்தைகள்.

வருகைக்கு நன்றி Doctor

பின்னோக்கி said...

கவிதை நல்லாயிருக்குங்க.
முதல் கவிதையில மீன சமைச்சுட்டா நாத்தம் வராதில்லையா ?
2,3,4 சமூக பார்வை நல்லாயிருக்கு.

Vidhoosh said...

அது சரி...


--வித்யா

தமிழ் said...

நல்ல கவிதைகள்

உமா said...

இதுதான் கவிதையே...கடைசி இன்னும்.....

ஆரூரன் விசுவநாதன் said...

மிக எதார்த்தம்......தொடருங்கள்

4வது எனக்கு மிகவும் பிடித்தது

Vidhya Chandrasekaran said...

ஏரிகளின் மீது கட்டபட்ட கல்லறைகள் :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vidhoosh said...
அது சரி...


--வித்யா//


வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திகழ் said...
நல்ல கவிதைகள்.//


நன்றி திகழ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உமா said...
இதுதான் கவிதையே...கடைசி இன்னும்.....//


வருகைக்கு நன்றி உமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
மிக எதார்த்தம்......தொடருங்கள்

4வது எனக்கு மிகவும் பிடித்தது//

வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
ஏரிகளின் மீது கட்டபட்ட கல்லறைகள் :(//

வருகைக்கு நன்றி வித்யா

நசரேயன் said...

//வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது //

கண்டு பிடிக்க வில்லை ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

அன்புடன் அருணா said...

கடைசிக் கவிதை அருமை.

'பரிவை' சே.குமார் said...

நறுக்கென்ற வரிகள்...

Prathap Kumar S. said...

சார் இங்கப்பாருங்க சார்..என்கைய பாருங்க... அப்படியே புல்லரிக்குதுசார் புல்லரிக்குது...

கொன்னுட்டீங்க சார்... அதுல முதல் கவிதை குட்டிஜோக் மாதிரியே இருந்துச்சு...கடைசி கவிதை யோசிக்க வச்சுது. மொத்தத்துல உங்களுக்குள்ள ஒரு என்.எஸ்.கே.வும், கண்ணதாசனும் ஒளிஞசிட்டுருக்காங்கன்னு தெரியுது...அவங்களை அப்பப்ப வெளியவுடுஙக சார்...

மணிகண்டன் said...

உங்க கவிதையை படிச்ச தமிழ்மணம் கூட நிலைகுலைஞ்சி ஒரே இடத்துல நிக்குது. அது என்ன இப்படி ஒரு தலைப்பு ! கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- எனக்கு எரி-கல்லறை ரொம்ப பிடிச்சிருந்தது.

பூங்குன்றன்.வே said...

குட்டிக்கவிதைகள் பெரிய சங்கதிகள் சொல்கின்றன பாஸ்.அருமை..

பாலா said...

எனக்கு புரிஞ்சிட்டாலே அது கவித-தாங்க!!

ஏன் மத்தவங்க எல்லாம் உங்ககிட்ட க்ளாஸ் வரக்கூடாது!!!!????

ஹேமா said...

எல்லாமே உணர்ந்து எழுதப்பட்ட நல்ல கவிதைகள்.கடைசிக் கவிதை மனதைத் தொட்டது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன் அருணா said...
கடைசிக் கவிதை அருமை.//


நன்றி அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கு நன்றி said...
நறுக்கென்ற வரிகள்...//

வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
புல்லரிக்குதுசார் புல்லரிக்குது...

. மொத்தத்துல உங்களுக்குள்ள ஒரு என்.எஸ்.கே.வும், கண்ணதாசனும் ஒளிஞசிட்டுருக்காங்கன்னு தெரியுது...அவங்களை அப்பப்ப வெளியவுடுஙக சார்...//

புல்லரிக்குது...பிரதாப்
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
உங்க கவிதையை படிச்ச தமிழ்மணம் கூட நிலைகுலைஞ்சி ஒரே இடத்துல நிக்குது. அது என்ன இப்படி ஒரு தலைப்பு ! கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- எனக்கு எரி-கல்லறை ரொம்ப பிடிச்சிருந்தது.//

நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- //

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
குட்டிக்கவிதைகள் பெரிய சங்கதிகள் சொல்கின்றன பாஸ்.அருமை..//


நன்றி பூங்குன்றன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹாலிவுட் பாலா said...
எனக்கு புரிஞ்சிட்டாலே அது கவித-தாங்க!!

ஏன் மத்தவங்க எல்லாம் உங்ககிட்ட க்ளாஸ் வரக்கூடாது!!!!????//

வருகைக்கு நன்றி பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
எல்லாமே உணர்ந்து எழுதப்பட்ட நல்ல கவிதைகள்.கடைசிக் கவிதை மனதைத் தொட்டது.//

நன்றி ஹேமா

கோவி.கண்ணன் said...

எல்லாமே நச் நச் ன்னு இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
எல்லாமே நச் நச் ன்னு இருக்கு//

நன்றி கோவி

Jerry Eshananda said...

நெசந்தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜெரி ஈசானந்தா

கலையரசன் said...

அருமையா எழுதறீங்கன்னு சொல்ல, அனுபவம் இல்லை!

மீன் மனசுல துள்ளுது!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கலையரசன்

செந்தில் நாதன் Senthil Nathan said...

//ஏரிகளின் மீது
கட்டப்பட்ட கல்லறைகள்
அடுக்குமாடி கட்டிடங்கள்//

இன்னும் ரெண்டு வரி சேர்துக்கவா?

//ஏரிகளின் மீது
கட்டப்பட்ட கல்லறைகள்
அடுக்குமாடி கட்டிடங்கள்
அடுத்த பூகம்பத்தில்
இடிந்தும் கல்லறைகளாகவே!!
//

கடைசி கவிதை சூப்பர்...