Friday, December 25, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..duedate ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே

14 comments:

அத்திரி said...

எல்லாமே டாப்பு

Prathap Kumar S. said...

எல்லாமே டாப்பு...முதல்ல சொன்னது தூள்

உண்மைத்தமிழன் said...

கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன..!

இராகவன் நைஜிரியா said...

சிரிப்பு 1 & 5 டாப்பு...

தூள் கிளப்புறீங்க அண்ணே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அத்திரி
நாஞ்சில் பிரதாப்
உண்மைத் தமிழன்
இராகவன்

சிநேகிதன் அக்பர் said...

எப்படி சார் யோசிக்கிறிங்க. nice

vasu balaji said...

வாய் விட்டு சிரியுங்கன்னு பார்த்ததுமே சிரிப்பு வந்துடுது சார்:)) அசத்தல் எல்லாமே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

ஹேமா said...

நல்லாவே சிரிச்சேன்.
நன்றி சிரிக்க வச்சதுக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தியாவின் பேனா

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன்

வி.வி.சி - அருமையான நகைச்சுவை - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Cheena sir