ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, December 27, 2009
எறும்பு வரிசை
1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்
2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின்
பார்வையோ
என் கை மஞ்சள் பையில்
3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி
4)அவசர அவசரமாக
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை
5)விடியலின்
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்
6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
கழைக்கூத்தாடி சிறுமி பற்றியும் போதையில் மலர்களும் அருமை.
பிரபாகர்.
வருகைக்கு நன்றி பிரபாகர்
அம்மா ரேஷனில்
வாங்கிய சர்க்கரையை,
ஒழித்துவைத்த இடம் கேட்டேன் எறும்புகள் வழிகாட்டின.
வருகைக்கு நன்றி goma
/அவசர அவசரமாக
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை/
ஒன்னாங்க்ளாசானு!:))
நல்லா இருக்கு.. (அய்யோ டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்ல..)
சொன்னா நம்புங்க.. :-)
// வானம்பாடிகள் said...
ஒன்னாங்க்ளாசானு!:))//
நன்றி வானம்பாடிகள்
//கடைக்குட்டி said...
நல்லா இருக்கு.. (அய்யோ டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்ல..)
சொன்னா நம்புங்க.. :-)//
நம்பறேன்..
வருகைக்கு நன்றி கடைக்குட்டி
:-))
முதல் மூன்று சமூகத்தின் நிகழ்வுகள்.
அடுத்த மூன்று, பார்வையின் கூர்மை.
அழகு அனைத்தும்.
//பின்னோக்கி said...
முதல் மூன்று சமூகத்தின் நிகழ்வுகள்.
அடுத்த மூன்று, பார்வையின் கூர்மை.
அழகு அனைத்தும்//
நன்றி பின்னோக்கி
கழைக்கூத்தாடி சிறுமி :(
வருகைக்கு நன்றி வித்யா
சின்னச் சின்ன எறும்புப் பார்வை கூர்மையா நல்லாருக்கு.
அன்பின் டிவிஆர்
அருமையான குறும்பாக்கள் - கழைக்கூத்தாடி அருமை - பனியின் போதையில் மலர்கள் - காகம் - பாராட்டுகள்
நல்வாழ்த்துகள் டிவிஆர்
//1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்//
ஐயா என்கதை எப்படி உங்களுக்கு தெரியும்
//ஹேமா said...
சின்னச் சின்ன எறும்புப் பார்வை கூர்மையா நல்லாருக்கு.//
நன்றி ஹேமா
//நசரேயன் said...
ஐயா என்கதை எப்படி உங்களுக்கு தெரியும்//
:-)))
//cheena (சீனா) said...
அன்பின் டிவிஆர்
அருமையான குறும்பாக்கள் - கழைக்கூத்தாடி அருமை - பனியின் போதையில் மலர்கள் - காகம் - பாராட்டுகள்
நல்வாழ்த்துகள் டிவிஆர்//
நன்றி Cheena sir
Post a Comment