Sunday, March 14, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு


இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அக்பருக்கு நன்றி
இந்த தொடருக்கான நிபந்தனைகள்
1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது
2)வரிசை முக்கியமில்லை
3)ஒரே துறையில் பலர் பிடித்தமானவராய் இருக்கும்.இப்பதிவு வெவ்வேறு துறையில் இருப்பவராய் இருக்க வேண்டும்

1) சோனியா காந்தி- இவரின் ஆளுமை பிடிக்கும்..நாட்டின் மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சியை..தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திறன் பிடிக்கும்.எளிமை பிடிக்கும்..அடக்கம் பிடிக்கும்

2)இந்திரா நூயி-உலகறிந்த பெப்சி யின் சேர் பர்சன் (Chair Person)..நினைத்தாலே பெப்சி குடித்த குளிர்ச்சி.பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல..அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என உணர்த்துபவர்

3)டாக்டர் கமலா செல்வராஜ்- குழந்தைகள் இல்லா பல தம்பதிகள் வாழ்க்கையில் குழந்தை செல்வங்கள் தவழ காரணமானவர்.டெஸ்ட் டியூப் பேபியும் திறமைக்குச் சான்று.மங்காத திறமை பளிச்சிடும்
பெண்மணி..சார்ந்த தன் துறைக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.

4)ராதிகா- 1978ல் கிழக்கே போகும் ரயிலில்..அறிமுகமானவர்..தமிழ் கூட அப்போது சரியாக பேசத் தெரியாது.ஆனால்..தன்னை இன்று பிரமாதமாக வளர்த்துக் கொண்டுவிட்டார்..தவிர்த்து ராடன் மீடியா என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருபவர்.

5)சின்னபிள்ளை- மதுரை அருகே சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்..40000 பெண்களைச் சேர்த்து களஞசியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி..நபார்ட், ஹட்கோ மூலம் பொருளாதார உதவி பெற்று..அவர்கள் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைத்தவர்..பாரதத்தின் பிரதமர் வாஜ்பாயியே இவரைத் தேடி வந்து..இவரின் காலில் விழுந்து வணங்கிய பெருமைக்கு உரியவர்.

6)எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி- தன் இனிய குரல்வளத்தால் உலகையே கட்டிப் போட்ட பெண்மணி..பாரத ரத்னா..காந்தி,நேரு என அனைத்து தலைவர் முன்னும் பாடியவர்.ஐ.நா.,சபையில் 'குறையொன்றும் இல்லை' என்றவர்.பல சமூக ஸ்தாபனங்களுக்கு உதவியவர்.

7)தாமரை- 'பார்த்த முதல் நாளாய்' பாடல் முணுமுணுக்காத ரசிகனே இல்லை எனலாம்.அதற்கு சொந்தக்காரர்.விண்ணைத்தாண்டி வருவாயா..என்பதற்கான சவாலாய் இருந்தவர்.ஈழப்பிரச்னையின் போது இவரின் வீராவேசமான பேச்சு..என்னை இவரை இந்த லிஸ்டில் சேர்த்து விட்டது

8)திருமதி ஒய்.ஜி.பி., ராஜம்மா,ராஷ்மி,ராஜலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்.கல்வித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.உலகில் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் படிப்பிற்கான முன்னோடி.இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

9)தமிழச்சி-பாரீஸில் இருந்துக் கொண்டு..பெரியாரின் போதனைகளை பரப்பி வரும் வீர மங்கை.இவரின் திறமை,அஞ்சாமை ஆகியவை எனக்குப் பிடிக்கும்..பாரதியின் புதுமைப் பெண் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும்.

10)இதைப் படிக்கும் பெண் பதிவர் நீங்கள் எனில் உங்களையும் எனக்குப் பிடிக்கும்.உங்களிடம் ஒளிந்துக் கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வத்தை..அறிவுத் தாகத்தை தீர்த்துக் கொள்ள நீங்கள் எழுதும் வலைப்பூக்கள் எனக்குப் பிடிக்கும்.

இத் தொடர் பதிவை எழுத நான் அழைக்கும் பதிவர்கள்

1)கோமா
2)அத்திரி
3)இயற்கை
4)பின்னோக்கி

(பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடுதான் எனக்குப் பிடிக்கும்)
டிஸ்கி-இந்த பதிவிற்கான முதல் விதியை மீறி இருக்கிறேன்..ஆம்..'யாதும் ஊரே..யாவரும் கேளிர்' நான் சொன்னவர்களும் இதன்படி எனக்கு உறவுதானே

36 comments:

Anonymous said...

ஏன் அவங்களைப்பிடிக்கும்னு காரணத்தோட நல்லா எழுதியிருக்கீங்க :)

Chitra said...

இந்த பதிவிற்கான முதல் விதியை மீறி இருக்கிறேன்..ஆம்..'யாதும் ஊரே..யாவரும் கேளிர்' நான் சொன்னவர்களும் இதன்படி எனக்கு உறவுதானே


........... உங்களுக்கு பிடித்த பெண்கள் தேர்வும் காரணமும் நல்லா இருக்குங்க.
டிஸ்கியில், புல்லரிக்க வச்சிட்டீங்க!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Chitra

Paleo God said...

அருமை சார்..:)

மாதேவி said...

"இதைப் படிக்கும் பெண் பதிவர் நீங்கள் எனில் உங்களையும் எனக்குப் பிடிக்கும்."

"பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடுதான் எனக்குப் பிடிக்கும்"

இவை ரொம்பப் பிடித்தன.

vasu balaji said...

பி.ப.பெ. பதிவுகளில் இது வித்தியாசம். :)

malarvizhi said...

பதிவு அருமையாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

பதிவு அருமையாக உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமை சார்..:)//

நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
"இதைப் படிக்கும் பெண் பதிவர் நீங்கள் எனில் உங்களையும் எனக்குப் பிடிக்கும்."

"பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடுதான் எனக்குப் பிடிக்கும்"

இவை ரொம்பப் பிடித்தன.//


வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
பி.ப.பெ. பதிவுகளில் இது வித்தியாசம். :)//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//malarvizhi said...
பதிவு அருமையாக உள்ளது.//

நன்றி malarvizhi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சே.குமார் said...
பதிவு அருமையாக உள்ளது.//

நன்றி குமார்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தேர்வு டிவிஆர் சார்..

பனித்துளி சங்கர் said...

அருமையான புனைவு வாழ்த்துக்கள் !

தமிழ் உதயம் said...

நா சொல்ல நினைக்கிறதை எல்லாம் அவங்களே சொல்லிடுறாங்க.

இளந்தென்றல் said...

அருமை ...

டிஸ்கி அருமையிலும் அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான தேர்வு டிவிஆர் சார்..//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !//

நன்றி பனித்துளி சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயம் said...
நா சொல்ல நினைக்கிறதை எல்லாம் அவங்களே சொல்லிடுறாங்க.//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளந்தென்றல் said...
அருமை ...

டிஸ்கி அருமையிலும் அருமை..//

நன்றி இளந்தென்றல்

goma said...

அவ்வ்வ்வ்வ் என்னை தொடரில் இணைத்து விட்டீர்களே....அவ்வ்வ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அவ்வ்வ்வ்வ் என்னை தொடரில் இணைத்து விட்டீர்களே....அவ்வ்வ்வ்வ்//

:-)))

க.பாலாசி said...

//சின்னபிள்ளை//

சிறந்த அறிமுகம்....

சிநேகிதன் அக்பர் said...

அழைப்பிற்கு மதிப்பளித்து எழுதியதற்கு நன்றி சார்.

தங்களது தேர்வு அருமை. அனைவரும் பிடித்தமானவர்களே.

//டிஸ்கி-இந்த பதிவிற்கான முதல் விதியை மீறி இருக்கிறேன்..ஆம்..'யாதும் ஊரே..யாவரும் கேளிர்' நான் சொன்னவர்களும் இதன்படி எனக்கு உறவுதானே//

சரியா சொன்னீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
//சின்னபிள்ளை//

சிறந்த அறிமுகம்....//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
அழைப்பிற்கு மதிப்பளித்து எழுதியதற்கு நன்றி சார். //

இதுக்கெல்லாம் நன்றி எதுக்கு...அக்பர் சொல்லி நான் கேட்கலைன்னாதான் தப்பு

*இயற்கை ராஜி* said...

மிக நல்ல பதிவு..

ஓ.. நானும் எழுதனுமா? எழுதிடறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இய‌ற்கை said...
மிக நல்ல பதிவு..

ஓ.. நானும் எழுதனுமா? எழுதிடறேன்//

நன்றி இய‌ற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹுஸைனம்மா said...
உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!//

நன்றி ஹுஸைனம்மா

Thenammai Lakshmanan said...

சின்னப் பிள்ளை ., ஒய். ஜி. பி நல்ல தேர்வு டி வி ஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி thenammailakshmanan

Anonymous said...

நிறைய Blogs-ஐ Follow பண்ணினாலும், Comment பண்ணுவது மிகவும் குறைவு. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது வாசிக்கவென்று ஒதுக்கி உள்ளேன். இன்று எப்படியாவது எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லுவது என்று நினைத்தேன். So, I am here =))

அழகாக காரணங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அதுவும் 10வது சுப்பர். நெடிய புன்னகையை வரவழைத்தது.

ஆனாலும், கை குறுகுறுக்கிறது. எழுதிடலாம் என்று நினைக்கிறேன். எத்தனையோ தேசாபிமானிகள் இருக்கும் நாட்டில் வேற்று நாட்டவர் அரசியலில் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லை. ராஜீவ் கொல்லப்பட்டார் என்கிற ஒரே காரணத்தால் அவர் குடும்பத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று அப்பப்ப தோன்றும். எப்படி ஆயினும் அது உங்கள் விருப்பத்துக்குரியவர்கள். சோ, Well said =))

Anonymous said...

அது உங்கள் விருப்பத்துக்குரியவர்கள் LIST***

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி அனாமிகா துவாரகன்